ஜூன் மாத சூரிய பெயர்ச்சி, எந்த ராசிக்கு எந்தப் பலனை தரப்போகிறது? 12 ராசிக்காரர்களுக்கும் துல்லியமான பலன்.

surya-bhagavan

சூரிய பகவான், ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது, ஜாதகத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்துவார். இந்த மாத சூரிய பெயர்ச்சியானது ஜூன் 14 ஆம் தேதி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சூரிய பெயர்ச்சியின் மூலம், 12 ராசிக்காரர்களும் என்ன பலனைப் பெறப் போகிறார்கள்! எந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

surya-bhagavan1

மேஷம்
Mesham Rasi
இந்த சூரிய பெயர்ச்சியின் மூலம், மேஷராசிக்காரர்களுக்கு சில தோல்விகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதற்கு காரணம், இவர்கள் மனதில் ஏற்படப்போகும் இனம்புரியாத பயம் என்றே சொல்லலாம். மற்றபடி பயத்தை தவிர்த்து விட்டால், வெற்றி நிச்சயம். பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்கள் முடிந்தவரை, யாரையும் நம்பி எந்த ஒரு பொறுப்பையும் ஒப்படைக்காமல் இருப்பது நல்லது. பண மாற்றம் செய்ய வேண்டாம். யாரை நம்பியும் கடன்தொகை வாங்கி கொடுக்க வேண்டாம். அடுத்தவர்களின் எந்த ஒரு முக்கியமான விஷயங்களிலும் நீங்கள் தலையிடக்கூடாது. தேவையில்லாத பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுனராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சியின் மூலம் தேவையில்லாத பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். முன் கோபத்தை வீட்டில் உள்ளவர்களிடம் காட்டாதீர்கள். அலுவலகப் பணியாக இருந்தாலும், மற்ற வேலைகளாக இருந்தாலும், அதில் அதிக கவனம் எடுத்து செய்வது நல்லது. உங்கள் மனதை ஒருநிலைப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்கள் ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு, உங்களது ஆரோக்கியத்தை மேம்படுத்தி வைத்துக்கொள்வது நல்லது. உடல்நலக் குறைபாடு ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். பண பரிமாற்றத்தில் கவனத்தோடு இருங்கள். கடன் கொடுக்க வேண்டாம். கடன் வாங்க வேண்டாம். சொந்தத் தொழிலில் புதிய முதலீடு செய்ய வேண்டாம். எந்த முடிவை எடுத்தாலும் ஒன்றுக்கு பலமுறை யோசித்து முடிவெடுங்கள்.

- Advertisement -

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சியானது, வெற்றி தரப் போகின்றது. இதுநாள் வரை இருந்த தோல்விகள் கூட படிப்படியாக வெற்றி படி ஏறிச் செல்லும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அலுவலகப் பணியில் நல்ல பெயர் வாங்குவீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாகவே அமையும்.

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்களுடைய திறமை வெளிப்பட போகின்றது என்றே சொல்லலாம். மந்தமாக இருந்த சூழ்நிலை கூட, சுறுசுறுப்பாக மாறும். விட்டுக் கொடுத்துச் செல்லும் பட்சத்தில் உங்களது வெற்றியானது உயரத்திற்குச் சென்று விடும். தேவையில்லாத பிரச்சினைகளுக்கு கோபப்பட வேண்டாம் ‘விட்டுப் போவார்கள் கெட்டுப் போவதில்லை’ என்பதை உங்கள் மனதில் நன்றாக வைத்துக் கொள்ளுங்கள்.

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சியானது, சற்று சுமாராக தான் இருக்கப் போகின்றது. உங்களது மனதை அமைதிப்படுத்தி, ஆன்மீகத்தில் ஈடுபடுத்த வேண்டும். தேவையில்லாத மனக்குழப்பம் வரக்கூடும். சின்ன சின்ன தோல்விகள் ஏற்படும் காரணத்தினால், பாதிப்புகள் உண்டாகலாம். விடா முயற்சியின் மூலம் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புங்கள்.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசி காரர்களுக்கு சில சமயங்களில் வெற்றி ஏற்படும். சில சமயங்களில் தோல்வி ஏற்படும். வீட்டில் சின்ன சின்ன சண்டைகள் வர வாய்ப்பு உள்ளது. முடிந்தவரை அனுசரித்து செல்லுங்கள். மனைவியிடம் கோபத்தை காண்பிக்க வேண்டாம். உடல் நலத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் மன அமைதி கிடைக்கும்.

தனுசு
dhanusu
எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றியடையும். சிக்கலான பிரச்சனைகளை கூட சுலபமாக முடிக்கும் அளவிற்கு, உங்களது திறமை அதிகரிக்கப் போகின்றது. உயர் பதவிகள் கிடைக்கலாம். நல்ல முன்னேற்றம் தான் செல்லும். ஆனால், பயணத்தின் மட்டும் சற்று தள்ளிப் போடுவது நல்லது. தவிர்க்க முடியாத பயணம் என்றால்,  உங்களது பொருட்களை பத்திரமாக வைத்துக் கொண்டு, ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டு, பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சியானது அதிர்ஷ்டமான பெயிற்சியாக தான் இருக்கப்போகின்றது. எல்லாவித போராட்டங்களையும், சுலபமாக கடந்து செல்ல போகின்றீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். நல்ல பெயர் கிடைக்கப் போகின்றது. உடல் பாதிப்பால் கஷ்டப்பட்டு வந்தவர்கள் கூட, கூடிய விரைவில் குணமடைய போகிறீர்கள். ஆக மொத்தம் அதிர்ஷ்ட மழை தான் உங்களுக்கு.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிகாரர்களுக்கு குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. உங்களின் உறவினர்களாக இருந்தாலும், உங்களின் பிள்ளைகளாக இருந்தாலும், அவர்களிடம் கோபத்தை காட்ட வேண்டாம். உங்களது பிள்ளைகளிடம் பாசத்தோடு நடந்து கொள்ளுங்கள். குறிப்பாக உங்களது வார்த்தையில் அதிகம் கவனம் தேவை. சண்டை போட்டுவிட்டு, பின்பு வருத்த படுவதன் மூலம், எந்த பிரயோஜனமும் இல்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்கள் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள  வேண்டிய நேரம் இது. தேவையில்லாத பிரச்சனைகள் உள்ளுக்குள் புகுந்து கொண்டு, மன குழப்பத்தை ஏற்படுத்தப் போகின்றது. பொறுமையாக, உங்கள் வாழ்க்கைக்கு எது சரி, என்பதை நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். அலுவலகத்தில் பிரச்சனை, சொந்தத் தொழிலில் பிரச்சனை, இப்படியாக எது செய்தாலும் அதில் முட்டுக்கட்டை வரத்தான் செய்யும். இது சரியாக கொஞ்சம் காலம் எடுக்கும். ஆகவே, பொறுமையோடு இருப்பது நல்லது.

இதையும் படிக்கலாமே
எச்சரிக்கை! இவை, உங்கள் கனவில் வந்தால், பெரும் ஆபத்து காத்துக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். கெட்ட கனவு பலிக்காமல் இருக்க என்ன செய்வது?

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Suryan peyarchi 2020 in Tamil. Suriya peyarchi. Surya peyarchi 2020. Surya bhagavan palangal. Surya bhagavan palan.