இந்த வருடம் 25/10/2022 தீபாவளி முடிந்ததும் நடக்கவிருக்கும் அபூர்வ சூரிய கிரகணம்! பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் என்னென்ன?

astro-grahanam
- Advertisement -

ஐப்பசி மாதம் வந்து விட்டாலே இல்லங்களில் குதூகலத்திற்கு குறைவிருக்காது. எந்த மதத்தினரும் இன பாகுபாடு இன்றி மகிழ்வுடன் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை தீபாவளி! இந்த தீபாவளி அன்று குடும்பத்துடன் இனிப்புகளை பரிமாறி, பட்டாசு வெடித்து, அனைவரும் புத்தாடை உடுத்தி உற்சாகத்துடன் கொண்டாடுவார்கள். அதற்கு மறுநாள் இவ்வருடத்தில் வரக்கூடிய இந்த அபூர்வ சூரிய கிரகணம் அன்று பரிகாரம் செய்ய வேண்டிய 10 ராசிகள் என்னென்ன? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி பார்க்க இருக்கிறோம்.

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம், எட்டாம் நாள், 25 அக்டோபர் 2022, செவ்வாய்க்கிழமையில் மாலை 5:10 மணி முதல் 5.45 மணி வரை அபூர்வமான இந்த சூரிய கிரகணம் நிகழவிருக்கிறது. இந்த நாளில் இந்தியா முழுவதும் சூரிய கிரகணம் தென்பட இருக்கிறது. இந்நாளில் சூரசம்ஹார கொடியேற்றம் முருகன் கோவில்களில் நடைபெறுவது வழக்கம். இதையும் மாலை ஆறரை மணிக்கு மேல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

கிரகண காலத்தில் பொதுவாக அனவசியமாக வெயிலில் வராமல் இருப்பது ரொம்பவும் நல்லது. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் கிரகண காலத்தில் வெளியில் வரக்கூடாது என்று கூறப்படுவது உண்டு. அது போல கிரகண காலங்களில் ஏற்படக்கூடிய சூரியனுடைய கதிர் வீச்சால் உணவுப் பொருட்கள் கெட்டுப் போக வாய்ப்புகள் உண்டு என்பதால் தான் அதில் தர்ப்பைப் புல்லை போட்டு வைப்பார்கள். அது மட்டும் அல்லாமல் உண்ணா நோன்பும் இருப்பார்கள்.

இந்த கிரகண காலத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் சித்திரை, சுவாதி, திருவாதிரை, விசாகம், சதயம் ஆகியோர் ஆவர். இவர்கள் கிரகண காலங்களில் கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்வது நல்லது. அது மட்டும் அல்லாமல் மிதுனம், கன்னி, துலாம், விருச்சிகம், கும்பம் ஆகிய ராசிக்காரர்களும் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் ஆவர். இந்த ராசிகளுக்கு இந்த கிரகணமானது கெடு பலன்களை கொடுக்கும் என்பதால் தான் பரிகாரம் செய்ய வலியுறுத்தப்படுகிறது. கோவிலுக்கு சென்று சாதாரணமாக பரிகார வழிபாடு செய்து வந்தாலே போதும்.

- Advertisement -

மற்ற அனைத்து ராசி மற்றும் நட்சத்திரக்காரர்கள் நவகிரகங்களில் இருக்கும் சூரிய பகவானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். சூரிய பகவானுக்கு உகந்த நிறம் சிகப்பு. சிகப்பு நிற வஸ்திரம் சாற்றி, கோதுமை தானம் செய்யலாம். அது போல சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் படைக்கலாம். அரளிப்பூவால் அர்ச்சனை செய்தால் நமக்கு பரிகாரம் நிறைவடையும்.

பரிகாரம் செய்ய வேண்டிய ராசி மற்றும் நட்சத்திரக்காரர்கள் அர்ச்சனை செய்ய அன்றைய நாளில் மட்டை தேங்காய், அரிசி, உதிரிப்பூக்கள், வெற்றிலை பாக்கு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இவைகளை கொண்டு சூரிய பகவானுக்கு அர்ச்சனை செய்து வந்தால் பரிகாரம் பூர்த்தி அடைகிறது. மேலும் சூரிய கிரகணத்தில் சூரிய பகவான் வழிபாடு செய்பவர்களுக்கு சூரியனுடைய அருள் கிடைக்கும். இவர்களுடைய வாழ்க்கையில் இருக்கும் கிரகணங்களும் நீங்கி, நல்ல ஒரு ஒளி தரக்கூடிய அற்புதமான வழிபாடாக இது அமைந்துள்ளது எனவே இந்த தீபாவளி முடிந்ததும் அவரவர் ராசி மற்றும் நட்சத்திரத்திற்கு ஏற்ப பரிகாரங்களை செய்து பயனடையலாமே!

- Advertisement -