உங்கள் ஜாதகத்தில் இந்த கிரகங்கள் இணைந்திருந்தால் அமோகமான வாழ்க்கை தான்

surya-guru-palan

ஜாதகம் கொண்டு எதிர்காலத்தை கணிக்கின்ற ஜோதிடக்கலை என்பது ஒரு ஆச்சரியமான அதே நேரம் மிகவும் ஆழமான ஒரு கலையாகும். பல வகையான ஜாதகங்களை கணிக்கின்ற போது ஜாதகத்தில் ஏற்படுகின்ற கிரகங்களின் சேர்க்கையை பொருத்து பல வகையான பலன்கள் ஏற்படுவதை அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் ஒரு ஜாதகத்தில் நவகிரகங்களில் முதன்மை கிரகமாக சூரியனும், முழுமையான சுப கிரகமான குரு கிரகமும் சேர்ந்து ஒரே வீட்டில் இருந்தால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Suryan God

ஒரு மனிதனின் தந்தை, எலும்பு மற்றும் பற்களின் வலிமை, உடற்பலம், நோயின்மை ஆகியவற்றுக்கு காரகனாக சூரிய பகவான் இருக்கிறார். நற்சிந்தனை, ஆன்மீகத்தில் ஈடுபாடு, மகான்கள் சித்தர்கள் மீது மரியாதை, தெய்வீகப் பணிகளில் விருப்பம் ஆகியவற்றுக்கு காரகனாக குரு பகவான் இருக்கிறார். இந்த சூரியனும், குரு பகவானும் ஜாதகத்தில் இணைந்து இருப்பது பல சிறப்பான பலன்களை தரவல்லது.

ஒரு நபரின் ஜாதகத்தில் சூரியனும், குருவும் சேர்ந்து எந்த ஒரு வீட்டில் இருந்தாலும், அந்த வீடு சூரியன் மற்றும் குரு கிரகங்களுக்கு நீச்ச வீடுகளாக இல்லாமல், சமம் எனப்படும் நட்பு வீடுகளாக இருக்கும் பட்சத்தில் அந்த ஜாதகர் உயரிய கல்வியை கற்றவராக இருப்பார். அறிவியல் மற்றும் ஆன்மீக கோட்பாடுகள் இரண்டையும் நன்கு கற்றறிந்து புலமை பெற்றவராகவும் இருக்க கூடும். நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் தலைமை அதிகாரிகள் ஆக இருக்கக் கூடிய யோகம் இவர்களுக்கு உண்டு. சிலர் அரசாங்கத்தில் நிதியமைச்சர் பதவியையும் வகிக்க கூடும்.

guru

சிலர் கல்லூரிகளில் பேராசிரியர்களாகவும் பணிபுரிவார்கள். சூரியன், குரு இரண்டும் சேர்ந்து ஒரே வீட்டில் இருக்கும் ஜாதகர்களில் சிலருக்கு தங்க நகைகள் சார்ந்த தொழில், வியாபாரங்களில் ஈடுபட்டிருக்கும் குடும்பங்களில் இருந்து வாழ்க்கைத் துணை அமைய பெறுவார்கள். இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்ற இத்தகைய ஜாதகர்களுக்கு அதிகம் உண்டு. ஆன்மீக ஈடுபாடு அதிகம் உள்ளதால் ஒரு சிலர் மக்களுக்கு நன்னெறிகளை காட்டக்கூடிய ஆன்மீக குருவாகவும், மகான்களாகவும் உயர்வார்கள்.

இதையும் படிக்கலாமே:
12 வீடுகள் ஒவ்வொன்றிலும் கேது இருப்பதால் ஏற்படும் பலன்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Surya guru palan in Tamil. It is also called as Graha serkai palan in Tamil or Jathagam palan in Tamil or Guru bhagavan palangal in Tamil or Suryan guru inaivu in Tamil.