ஞாயிற்று கிழமைகளில் கூறவேண்டிய அற்புதமான மந்திரம்

suriyan

அதிகாலையில் எழுந்திருக்கும் அனைவருக்கும் மிக அற்புதமான ஆற்றல் கிடைப்பதற்கு காரணம் அந்நேரத்தில் அவர்கள் பெறும் சூரியனின் ஒளியே காரணமாக இருக்கிறது. சூரிய பகவானை தினமும் வழிபடுபவர்களுக்கு அனைத்து வல்வினைகளிலும் நீங்கும் என வேதங்கள் கூறுகின்றன. தன்னை வழிபடும் மனிதர்களுக்கு நன்மைகளை வாரி வழங்கும் நவகிரக நாயகனாக சூரிய பகவான் இருக்கிறார். அப்படிபட்ட சூரிய பகவானை துதித்து பல பயன்களை பெறுவதற்கான ஆற்றல் மிகுந்த சூரியன் மூல மந்திரம் இதோ.

surya-viratham

சூரியன் மூல மந்திரம்

ஓம் ஹ்ரெளம் ஸ்ரீம் ஆம் க்ரஹாதி ராஜாய
ஆதித்யாய ஸ்வாஹா

surya bhagavan

ஆதித்யனாகிய சூரிய பகவானின் அருளைப் பெற்று தரும் சக்தி வாய்ந்த சூரிய மூல மந்திரம் இதுவாகும். இம்மந்திரத்தை எல்லா நாட்களிலும் துதிப்பதால் நன்மைகள் அதிகம். வளர்பிறை ஞாயிற்றுக்கிழமைகளில் காலையில், சூரிய ஹோரை நேரத்தில், கிழக்கு திசை நோக்கி அமர்ந்து, 108 முறை முதல் 1008 முறை வரை இம்மந்திரம் துதித்து சூரிய பகவானை வணங்கி வந்தால் உடலாரோக்கியம் மேம்படும். உடலும், மனமும் சுறுசுறுப்பும், உற்சாகமும் பெறும். கண்களின் பார்வை திறன் கூர்மையடையும். எதையும் சாதிக்கக் கூடிய மனோதிடம் உருவாகும். தந்தையின் உடல் நிலை சீரடையும். பூர்வீக சொத்துக்களில் உங்களுக்கான நியாயமான பாகம் கிடைக்கும். பணிகளில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் உண்டாகும். அரசாங்க வழியில் உதவிகள் கிடைக்க பெறுவார்கள்.

surya bhagavan

- Advertisement -

சூரிய பரிகாரங்கள்:

சூரியபகவானின் தோஷங்கள் நீங்கவும், அவரின் முழுமையான அருளாசிகளைப் பெறவும் ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்குள்ளாக தஞ்சையில் இருக்கும் சூரியனார் கோவிலுக்கு சென்று, சூரிய பகவானுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து, ஆரஞ்சு நிற வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்து, கோயிலை 10 முறை வலம் வந்து வழிபட வேண்டும். இந்த பரிகாரத்தை ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது வருடத்திற்கு ஒருமுறையோ செய்வது சூரிய பகவானால் நன்மைகள் ஏற்பட வழிவகை செய்யும்.

suriyan

சூரியனார் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்ய முடியாத நிலையில் இருப்பவர்கள், உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணிக்குள்ளாக சென்று, நவக்கிரக சன்னிதியில் இருக்கின்ற சூரியபகவானுக்கு செந்தாமரைப்பூ சமர்ப்பித்து, கோதுமை கொண்டு செய்யப்பட்ட உணவை நைவேத்தியம் செய்து, சூரிய பகவானுக்குரிய காயத்திரி மந்திரம் மற்றும் ஸ்தோத்திரங்களை 108 முறை துதித்து வழிபடுவதால், சூரிய கிரக தோஷங்கள் நீங்கி, வாழ்வில் நன்மையான பலன்கள் உண்டாகும். இந்த பரிகாரத்தை 9 முதல் 27 வாரங்கள் வரை செய்வதால் மட்டுமே உறுதியான பலன்களை பெற முடியும்.


மேற்கூறிய இரண்டு பரிகாரத்தையும் செய்ய முடியாதவர்கள் தினந்தோறும் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, சூரியன் உதிக்கின்ற கிழக்கு திசை நோக்கி நின்றவாறு ஓம் சூரிய நாராயண நமஹ என்கிற மந்திரத்தை 108 துதித்து வழிபடுவதால் சூர்ய கிரக தோஷங்கள் நீங்கும். ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் ஒரு வேளை மட்டும் இனிப்பு உணவு அல்லது கோதுமை கொண்டு செய்யப்பட்ட உணவை சாப்பிட்டு, சூரிய பகவானுக்கு விரதம் இருந்து, சூரிய பகவானை மந்திரங்களால் துதித்து வழிபட்டு வர சூரியனால் நன்மைகள் உண்டாகும். மேலும் உங்கள் சக்திக்கேற்ப ஞாயிற்றுக்கிழமைகளில் 8 மணிக்குள்ளாக ஏழைகளுக்கு கோதுமை, வெல்லம், இளஞ்சிவப்பு நிற வஸ்திரங்கள் போன்றவற்றை தானம் செய்வதும் சூரிய பகவானுடன் தோஷங்களை போக்கும் சிறந்த பரிகாரமாகும்.

இதையும் படிக்கலாமே:
மன நிம்மதியை தரும் ராமர் போற்றி மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we Surya moola mantra in Tamil. This mantra is also called as Surya mantra in Tamil or Surya bhagavan mantras in Tamil or Moola mantras in Tamil or Suriyan manthiram in Tamil.