பலன்களை அள்ளித்தரும் சூரிய நமஸ்கார மந்திரம்

Suriyan-God-1

மனிதர்களாய் பிறந்த நாம் அனைவரும் நம் வாழ்க்கையில் ஏதேனும் சாதிக்கவே இப்பிறவியை எடுத்திருக்கிறோம். அப்படி மிகச் சிறந்த செயல்கள்கள் பல புரிய நமது உடலிலும், மனத்திலும் மிகுந்த உற்சாகம், மனஉறுதி மற்றும் சுறுசுறுப்பு தேவைப்படுகிறது. ஆனால் நம்மில் பெரும்பாலானவர்களிடம் அது இருப்பதில்லை. காரணம் பெரும்பாலான மக்களிடம் அதிகாலை துயிலெழும் பழக்கமில்லை. அதிகாலை எழுந்து சூரியனை வணங்குபவருக்கு அனைத்து நலங்களும் ஏற்படுவதாக வேதங்கள் கூறுகின்றன. அந்த வகையில் சூரிய நமஸ்காரம் மந்திரம் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் தெரிந்துகொள்வோம்.

Lord sooriyan

சூரிய நமஸ்கார மந்திரம்

ஓம் ஹ்ராம் மித்ராய நமஹ
ஓம் ஹ்ரீம் ரவியே நமஹ
ஓம் ஹ்ரூம் சூர்யாய நமஹ
ஓம் ஹ்ரைம் பானவே நமஹ
ஓம் ஹ்ரௌம் கசாய நமஹ
ஓம் ஹ்ரஹ பூஷ்ண நமஹ
ஓம் ஹ்ராம் ஹிரண்ய கர்ப்பாய நமஹ
ஓம் ஹ்ரீம் மரீசயே நமஹ
ஓம் ஹ்ரூம் ஆதித்யாய நமஹ
ஓம் ஹ்ரைம் ஸவித்ரே நமஹ
ஓம் ஹ்ரௌம் அர்க்காய நமஹ
ஓம் ஹரஹ பாஸ்கராய நமஹ

சூரிய நமஸ்காரம் பலன்கள்

இம்மந்திரத்தை வாரத்தின் எல்லா நாட்களிலும் கூறி வழிபடுவது நல்லது. ஞாயிற்று கிழமையன்று விடியற் காலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, வீட்டிற்கு வெளியில் சூரியன் உதிக்கின்ற போது, அந்த சூரியனை பார்த்த படி இம்மந்திரத்தை 10 முறை அல்லது 108 முறை கூறி வழிபடுவதன் மூலம் முகத்தில் ஒருவித பிரகாசம் உண்டாகும். உடலின் எல்லா பகுதிகளிலும் இந்த மந்திரத்தின் அதிர்வு சென்று உடலுக்கு புத்துணர்வை தரும். மன அழுத்தத்தை குறைக்கும். உடலின் உறுப்புக்கள் அனைத்தும் நன்கு வேலை செய்ய இந்த மந்திர அதிர்வுகள் துணைபுரியும். இதை வாழ்நாள் முழுவதும் பின்பற்றினால் ஒருவருக்கு பல நன்மைகளை அளிக்கும்.

நாம் வாழும் இப்பூமியையும் நவ கோள்களுடன் சேர்த்து சூரிய குடும்பம் என்று கூறப்படுகிறது. கோடான கொடி வருடங்களுக்கு முன்னாள் இந்த பூமி உட்பட நவ கோள்களும் இந்த சூரியனின் வெடிப்பிலிருந்து உருவாகியது நாம் அறிவோம். அக்காலம் தொட்டு இக்காலம் வரை சூரியன் இந்த பூமியில் வாழும் மரம் செடி, கொடி, விலங்குகள் மற்றும் மனிதர்கள் ஆகிய எல்லா உயிர்களுக்கும் மிகுந்த ஆற்றலை தருகிறது என்பது விஞ்ஞான பூர்வமான உண்மையாகும்.

Suriya puyal

நமது நாட்டின் ஜோதிட சாத்திரத்தில் சூரிய பகவான் அனைத்திற்கும் காரகனான இருக்கிறார் எனக் கூறுகிறது. மேலும் இந்த சூரியன் ஒரு ஜாதகரின் தந்தைக்கும் மற்றும் அந்த ஜாதகரின் உடலிலுள்ள எலும்புகளுக்கும் காரகனாக இருக்கிறார். நவீன விஞ்ஞான ரீதியாக பார்த்தாலும் சூரிய ஒளி நமது எலும்புகளை பலப்படுத்தும் எனக் கூறுகிறது. எனவே சூரியனின் மிகுந்த நன்மையான ஆற்றல் வெளிப்படும் விடியற் காலை நேரத்தில் இம்மந்திரத்தை கூறி வழிபடுவது பல நன்மைகளை கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே:
காரிய தடை நீங்க மந்திரம்

English Overview:
Here we have Surya namaskar mantra in Tamil. By chanting this mantra one can get a healthy life. Bone problems will get resolved. One can get grace of Lord Sun.