காரிய தடை நீங்க விநாயகர் மந்திரம்

vinayagar6

எல்லோருக்கும் அவர்களுக்கு நடக்க வேண்டிய காரியங்கள் அனைத்தும் அந்தந்த காலத்தில் சரியாக நடக்கும் என்பது காலத்தின் அமைப்பாகும். ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் அவர்களின் கடுமையான முயற்சிகளுக்கு பின்பும் கூட அவர்களுக்கு வேண்டிய காரியங்களில் தடைகளும், தாமதங்களும் ஏற்படுகிறது. அத்தகைய தடை தாமதங்களை தகர்க்கும் விநாயகரின் மந்திரம் இது.

Vinayagar

விநாயகர் மந்திரம்:

ஓம் விக்ன நாஷனாய நமஹ

மிகவும் ஆற்றல் வாய்ந்த இம்மந்திரத்தை மாதத்தில் வரும் “சங்கடஹர சதுர்த்தி” தினத்தன்று காலையில் எழுந்து, குளித்து முடித்து பூஜை அறையை சுத்தம் செய்து, அரிசி மாவினால் பிள்ளையார் பிடித்து, மஞ்சள் நிற பூக்களை சமர்ப்பித்து இம்மந்திரத்தை 108 முறை கூறி வணங்க வேண்டும். 1008 முறை உரு ஜெபிபிப்பது இன்னும் சிறப்பானதாகும்.

மேலும் அன்று மாலை வேளையில் விநாயகர் ஆலயத்திற்கு சென்று, அவருக்கு “பாலபிஷேகம்” செய்ய பால் தந்து அந்த அபிஷேகம் செய்யும் போது இம்மந்திரத்தை 108 முறை கூறி வழிபட உங்களுக்கு எந்த ஒரு விடயத்திலும் நீண்ட நாட்களாக இருந்து வந்த காரியத்தடைகள் நீங்கி, நீங்கள் எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும்.

இதையும் படிக்கலாமே:
உழைப்பிற்கான செல்வம் நம்மிடம் சேர கூற வேண்டிய சாய் பாபா மந்திரம்

English Overview:
Here we have give Sankatahara chaturthi slokas in tamil. By chanting this sloka one can get away from all troubles. There is a procedure that nees to be folloew today. All those wew explined here.