தரித்திரம் போக்கும் சூரிய பகவான் ஸ்தோத்திரம்

sooriyan-1
- Advertisement -

நாம் வாழும் இந்த வாழ்க்கைக்கு உடல் தான் அடிப்படை. உடல் மற்றும் மனம் சுறுசுறுப்பாக இருந்தால் நாம் ஈடுபடும் காரியங்கள் அனைத்துமே சிறந்த பலன்களை நமக்கு பெற்று தரும். பலருக்கும் தற்போதைய காலங்களில் உடலில் சோம்பல்தனமும், மனதில் ஒரு மந்த நிலையும் உருவாகி, எந்த ஒரு காரியத்திலும் ஈடுபட முடியாமல் முடங்கிவிடுகின்றனர். இது அவர்களுக்கு தரித்திர நிலையையும் ஏற்படுத்துகிறது. இவை எல்லாவற்றையும் போக்கும் “சூரிய ஸ்தோத்திரம்” இதோ.

God Suriya bagavaan

சூரிய பகவான் ஸ்தோத்திரம்

ஆதிதேவம் நமஸ்துப்யம் ப்ரசீத மம பாஸ்கர
திவாகர நமஸ்துப்யம் ப்ரபாகர நமோஸ்துதே
சப்தாஸ்வரதமாரூடம் ப்ரசண்டம் கச்யபாத்மாஜம்
ஸ்வேத பத்மதரம் தேவம் தம் சூர்யம் ப்ரணமாம்யஹம்

- Advertisement -

லோஹிதம் ரதமாரூடம் சர்வலோகபிதாமஹம்
மஹாபாபஹரம் தேவம் தம் சூர்யம் ப்ரணமாம்யஹம்
த்ரைகுண்யம் ச மஹாசூரம் ப்ரம்மாவிஷ்ணு மஹேச்வரம்
மஹாபாபஹரம் தேவம் தம் சூர்யம் ப்ரணமாம்யஹம்

men greeting sun

ப்ரம்மிதம் தேஜ: புஞ்சம் ச வாயுமாகாசமேவ ச
ப்ரபும் ச சர்வலோகானாம் தம் சூர்யம் ப்ரணமாம்யஹம்
பந்தூகபுஷ்ப சங்காசம் ஹார குண்டல பூஷிதம்
ஏக சக்ரதரம் தேவம் தம் சூர்யம் ப்ரணமாம்யஹம்

- Advertisement -

தம் சூர்யம் ஜகத் கர்தாரம் மஹா தேஜ: ப்ரதீபனம்
மஹாபாப ஹரம் தேவம் தம் சூர்யம் ப்ரணமாம்யஹம்
தம் சூர்யம் ஜகதாம் நாதம் ஞான விஞான மோக்ஷதம்
மஹாபாப ஹரம்தேவம் தம் சூர்யம் ப்ரணமாம்யஹம்

Lord sooriyan

இந்த ஸ்தோத்திரத்தை தினந்தோறும் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து விட்டு, சூரிய உதயத்தின் போது கிழக்கு திசை பார்த்தவாறே இந்த ஸ்லோகத்தை 10 முறை கூறி வழிபட வேண்டும். ஞாயிற்று கிழமைகளில் தவறாமல் சூரிய ஸ்தோத்திரத்தை உச்சரிப்பது சிறந்தது. சூரிய ஸ்தோத்திரத்தை தினமும் கூறி வழிபட்டு வருபவர்களுக்கு உடலிலும், மனதிலும் இருக்கும் மந்த நிலை நீங்கும். அவர்களை பீடித்திருக்கும் தரித்திரம் விலகும். நீண்ட நாளாக இருக்கும் நோய்பாதிப்புகள் நீங்கும். எந்த ஒரு விடயத்திலும் தெளிவான முடிவெடுக்கும் தன்மை பெருகும்.

- Advertisement -

Suriyan manthiram

“காஸ்யப முனிவரின் புதல்வரானவரும், ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் வீற்றிருப்பவருமான சூரிய பகவானை வணங்குகிறேன். முக்குணங்கள் கொண்டவரும், மும்மூர்த்திகளின் அம்சத்தை கொண்டவரும், மக்களின் பாவ வினைகளை பொசுக்குபவருமான சூரிய பகவானை பணிகிறேன். புத்திரர்கள் இல்லாதவர்களுக்கு புத்திரர்களையும், செல்வம் இல்லாதவர்க்கு செல்வவளத்தையும் அளிக்கும் சூரிய தேவனை அவருக்குரிய ஞாயிற்று கிழமையில் எவர் மது, மாமிசம், மாது ஆகியவற்றிலிருந்து விலகி வழிபாடு வருகிறார்களோ அவர்களுக்கு சூரிய லோக பதவி கிடக்கிறது” என்பது இந்த சூரிய ஸ்தோத்திரத்தின் பொருளாகும்.

இதையும் படிக்கலாமே:
சரம ஸ்லோகம்

இது போன்று மேலும் பல மந்திரங்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Surya bhagavan stotram Tamil. It is also called as Surya bagavan slogam in Tamil or slokam in Tamil. This Surya bhagavan manthiram in Tamil is powerful.

- Advertisement -