சுட்டும் விழிச் சுடர் தான் – பாரதியார் கவிதை

Bharathiyar kavithai

சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ
பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ

Bharathiyar Kavithai
Bharathiyar Kavithai

சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான்
நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீ
கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ
வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்

சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று

இதையும் படிக்கலாமே:
வருவாய், வருவாய் – கண்ணா – பாரதியார் கவிதை

சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா என்று தொடங்கும் இந்த பாரதியார் கவிதை, ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர் ரகுமான் இசையில் பாடலாக மாற்றப்பட்டு கண்டுகொண்டேன் கண்டுகொண்டே என்ற படத்தில் உலகம் முழுக்க ஒலித்தது. பாரதியின் வரிகளை அந்த படத்தில் ஹரிஹரன் பாடியுள்ளார். அந்த பாடலும் மேலே இணைக்கப்பட்டுள்ளது.

இது போன்ற மேலும் பல பாரதியார் கவிதைகள் படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Bharathiyar kavithai “Suttum vizhi sudar thaan kannamma lyrics in Tamil“. This poem was converted as a song in the Tamil movie Kandukonden Kandukonden.