வருவாய், வருவாய் – கண்ணா – பாரதியார் கவிதை

Bharathiyar kavithai

[பல்லவி]
வருவாய், வருவாய், வருவாய் – கண்ணா !
வருவாய், வருவாய், வருவாய் !

Bharathiyar Kavithai
Bharathiyar Kavithai

[சரணம்]
உருவாய் அறிவில் ஒளிர்வாய் – கண்ணா !
உயிரின் னமுதாய்ப் பொழிவாய் – கண்ணா !
கருவாய் என்னுள் வளர்வாய் கண்ணா !
கமலத்திருவோ டிணைவாய் – கண்ணா !

இணைவாய் எனதா வியிலே – கண்ணா !
இதயத் தினிலே யமர்வாய் – கண்ணா !
கணைவா யசுரர் தலைகள் – சிதறக்
கடையூ ழியிலே படையோ டெழுவாய் !

Bharathiyar Kavithai
Bharathiyar Kavithai

எழுவாய் கடல்மீ தினிலே – எழுமோர்
இரவிக் கினியா உளமீ தினிலே
தொழுவேன் சிவனாம் நினையே – கண்ணா !
துணையே, அமரர் தொழும்வா னவனே !

இதையும் படிக்கலாமே:
பாப்பா பாட்டு – பாரதியார் கவிதை

பாரதியார் கவிதைகள் மற்றும் தமிழ் கவிதைகள் பல படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have the Mahakavi Bharathiyar poem “Varuvai Varuvai varuvai Kanna lyrics in Tamil“. Kannan is a Hindu God and Bharathiyar is saying few things to the God Kannan in this poem.