நீங்கள் செய்த சாதம் முழுவதுமாக தீர்ந்துவிட இந்த அப்பளப்பூ குழம்பை செய்து பாருங்கள். இதன் சுவைக்கு சட்டி நிறைய சாதம் இருந்தாலும் பத்தாது

appala-kulambu
- Advertisement -

ஒவ்வொரு நாளும் மதிய உணவிற்காக சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஒவ்வொருவிதமான குழம்புகள் செய்யப்படுகிறது. அனைவரது வீட்டிலும் பெரும்பாலும் சாம்பார், காரக்குழம்பு, புளிக்குழம்பு, கீரை குழம்பு, குருமா என மாற்றி மாற்றி செய்து வருகிறோம். இவற்றைத்தவிர கலவை சாதங்கள் செய்யப்படுகிறது. இவற்றில் கார குழம்பு என்று சென்னவுடன் பலருக்கும் சாதம் தொண்டையில் கூட இறங்காது. பலரும் காரக் குழம்பா? என்று சோகமாக கேட்பார்கள். அப்படி பலரும் வேண்டாம் என்று நினைக்கும் இந்த கார குழம்பை சற்று வித்தியாசமாக அப்பளம் சேர்த்து அப்பளப்பூ குழம்பாக செய்து பாருங்கள். இதில் அப்பளம் சேர்ப்பதால் இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும். குழந்தைகளும் கூட இதனை விருப்பமாக சாப்பிடுவார்கள். இந்த கார குழம்பில் அப்பளத்தை சேர்த்தவுடன் இதில் இருக்கும் காரம் அனைத்தும் குறைந்து விடும். எனவே சாதத்துடன் சேர்த்து சாப்பிடும்பொழுது காரம் இல்லாமல் மிகவும் ருசியாகவும் இருக்கும். வாருங்கள் இந்த அப்பளபூ குழம்பை எவ்வாறு செய்வது என்பதை இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 15, பூண்டு – 10 பல், புளி – எலுமிச்சம்பழ அளவு, தக்காளி – 4, உளுந்து அப்பளம் – 10, உப்பு – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், கார மிளகாய் தூள் – அரை ஸ்பூன், சாம்பார் பொடி – ஒன்றரை ஸ்பூன், வெல்லம் – ஒரு ஸ்பூன், நல்லெண்ணெய் – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 6, கடுகு – அரை ஸ்பூன், வெந்தயம் – ஒரு ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் சின்ன வெங்காயம், பூண்டு இவற்றை தோலுரித்து சுத்தம் செய்து வைக்க வேண்டும். பின்னர் புளியை தண்ணீரில் ஊறவைத்து, அதனை கரைத்து புளிக்கரைசல் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, 100 கிராம் நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும்.

முதலில் 10 அப்பளத்தை இந்த எண்ணெயில் சேர்த்து பொறித்துக் கொள்ள வேண்டும். பிறகு அதே எண்ணெயில் கடுகு, கால் ஸ்பூன் வெந்தயம் மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். அதன்பின் தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் இவற்றுடன் மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள் மற்றும் சாம்பார் பொடி சேர்த்து அனைத்தையும் ஒரு நிமிடம் வதக்கி விட்டு, கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை சேர்த்து நன்றாக கலந்து விட்டு, பத்திலிருந்து பதினைந்து நிமிடம் கொதிக்க விட வேண்டும். பிறகு மற்றொரு அடுப்பில் ஒரு தாளிக்கும் கரண்டியை வைத்து முக்கால் ஸ்பூன் வெந்தயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் வறுத்த வெந்தயத்தை மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். அதன்பின் குழம்பு நன்றாக கொதித்ததும் அதனுடன் வறுத்து வைத்துள்ள அப்பளத்தை பொடியாக உடைத்து சேர்த்து கொதிக்க விட வேண்டும். பிறகு இறுதியாக ஒரு ஸ்பூன் வெள்ளம், பொடி செய்து வைத்துள்ள வெந்தயம் மற்றும் கொத்தமல்லி தழை தூவி 5 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அனைத்து விட வேண்டும்.

- Advertisement -