இன்று முருகனை வழிபட்டால் அற்புதமான பலன்கள் உண்டு தெரியுமா?

murugan

மனிதர்கள் அடைய வேண்டிய ஞானம் என்னும் உயரிய நிலையை அடைவதற்கு வயது, இனம், மொழி, மதம் போன்ற பேதங்கள் ஏதுமில்லை. ஒருவருக்கு சரியான ஞானகுரு கிடைத்தால் அனைவரும் அந்த தெய்வீக பேரானந்த நிலையை அடைய முடியும். மக்கள் அனைத்தையும் அறிந்த தெய்வமாக வழிபடுவது சிவபெருமான் என்பது தெரிந்தது. அனைத்தும் அறிந்த தந்தையாகிய சிவபெருமானுக்கு ஞானோபதேசம் செய்து சிவகுருநாதன் என்கிற பெயர் பெற்றவர் முருகப்பெருமான். அப்படி சிவபெருமானுக்கு ஞானம் வழங்கியதாக கருதப்படும் முருகப்பெருமானின் புகழ் பெற்ற தலமான சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் முருகனை இன்று வழிபடுவதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Sivanmalai Murugan

தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் சுவாமிமலை என்கிற ஊரில் இருக்கும் அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காவது வீடாகும். தஞ்சை மாவட்டத்தில் மலைகள் அதிகம் இல்லை, இருந்த போதும் இந்த சுவாமிமலை என்கிற ஒரு குன்று இருப்பதும், “குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்” என்கிற சொல்லுக்கு ஏற்ப அந்த சுவாமிமலையில் சிவகுருநாதனாக முருகப்பெருமான் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது ஒரு ஆன்மீக ஆச்சரியமாக இருக்கிறது.

படைப்புத் தொழிலை செய்ததால் மிகுந்த ஆணவம் கொண்ட பிரம்மாவின் கர்வத்தை அடக்க விரும்பிய முருகப்பெருமானிடம் பிரணவ மந்திரத்தின் பொருள் என்னவென்று கேட்க அதற்கான விடை கூற முடியாமல் திணறிய பிரம்மாவை முருகன் சிறையில் அடைத்தார். இதனால் படைப்புத் தொழில் பாதிக்கப்பட்டதால் பிரம்மனை விடுவிக்க திருமால் மற்றும் தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் வேண்டுகோள் விடுக்க, அதை ஏற்று முருகப் பெருமானிடம் சென்று பிரம்மனை விடுவிக்குமாறு சிவபெருமான் கூறினார். அதை ஏற்ற முருகப்பெருமான் பிரம்ம தேவனை விடுவித்தார்.

Swamimalai_Murugan_Temple

முருகனின் ஞானத்தைக் கண்டு வியந்த தந்தையான சிவபெருமான் தனக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை கூறுமாறு மகனான சிவபெருமானிடம் பணிந்து வேண்டுகோள் விடுத்தார். அதற்கு முருகப்பெருமான் பிரணவ மந்திரத்தை பிறரறிய கூறுவது முறையல்ல என்று கூறி, இந்த சுவாமிமலை தலத்தில் தான் சிவபெருமானுக்கு ரகசியமாக பிரணவ மந்திரத்தின் பொருளை கூறினார். இதன் காரணமாக எல்லாம் வல்ல சிவபெருமானுக்கு குருவாக இருந்து மந்திரத்தை உபதேசம் செய்ததால் இந்த சுவாமிமலை சுவாமிநாத முருகப்பெருமானை சிவகுருநாதன் என்கிற பெயரிலும் அழைக்கின்றனர்.

- Advertisement -

Murugan_ Swamimalai

பல ஆன்மீக சிறப்புகளை கொண்டதாக இந்த சுவாமிமலை சுவாமிநாத சுவாமி முருகன் கோவில் விளங்குகிறது. குன்றின் மீதிருக்கும் கோவிலுக்கு செல்வதற்கு 60 படிக்கட்டுகள் இருக்கின்றன. இந்த 60 படிக்கட்டுகள் என்பது தமிழ் வருடங்களான 60 வருடங்களின் தேவதைகளே இங்கு 60 படிகளாக இருந்து முருகப்பெருமானை வழிபடுவதாக ஐதீகம். சுவாமிமலை சுவாமிநாதசுவாமி முருகன் அலங்கார பிரியர் ஆவார். முருகனுக்கு விபூதி அபிஷேகம் செய்யும் போது அருள் நிறைந்த ஞானியாக காட்சித் தருகிறார். சந்தன அபிஷேகம் செய்யும் போது பாலசுப்ரமணியனாக ராஜ கம்பீர தோற்றத்துடன் காட்சியளிக்கிறார். இது பக்தர்களுக்கு இறைவனின் அருளாற்றலை கூறுகின்ற ஒரு ஆன்மீக அதிசய நிகழ்வாக இருக்கிறது.

Murugan_ Swamimalai

இத்தனை சிறப்புக்கள் வாய்ந்த இந்த சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி முருகன் கோயிலில் இன்றைய தினம் முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து, வைரவேல் தாங்கி பக்தர்களுக்கு தரிசனம் தரும் வைபவம் நடைபெறுகிறது. எனவே இன்றைய தினத்தில் சுவாமிமலை முருகன் கோயிலுக்கு சென்று முருகப் பெருமானின் இந்தத் தங்கக் கவசம் வைரவேல் தரிசனத்தை காண்பவர்களுக்கு மனதில் தீய எண்ணங்கள் மற்றும் குணங்கள் இப்போதும் விடாமல் தடுக்கும். அவர்களை துஷ்ட சக்திகள் எப்போதும் அணுகாமல் காக்கும். பக்தர்களின் வாழ்வில் ஏற்படும் வறுமை நிலையைப் போக்கி வளமான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே:
ரஜ்ஜு தோஷ பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Swamimalai murugan valipadu in Tamil. It is also called as Thanga kavasam in Tamil or Swamimalai murugan koil in Tamil or Murugan kovilgal in Tamil or Varumai neenga in Tamil.