- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசெல்வநிலை உயர ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு

செல்வநிலை உயர ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு

- Advertisement -

ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான சக்தி இருக்கும் என்று கூறப்படுகிறது. ஒரு தெய்வத்தை நாம் நம்முடைய மனதில் நினைத்து விட்டோம் என்றால் கடைசி வரை அந்த தெய்வத்தை கைவிடாமல் அந்த தெய்வத்தை முழுமனதோடு நம்பி வழிபாடு செய்து கொண்டே தான் இருக்க வேண்டும். அதனால் தான் ஒவ்வொரு தெய்வமும் நம்முடைய கஷ்டத்திற்கு ஏற்றவாறு ஒவ்வொரு வகையான அவதாரங்களை எடுத்திருக்கிறார்கள். அந்த அவதாரங்களை பொறுத்து நாம் அந்த தெய்வத்தை வழிபடும் பொழுது நம்முடைய பிரச்சினைகள் தீரும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரை எந்த முறையில் வழிபட்டால் நம்முடைய செல்வ நிலை உயரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பைரவர் என்றதும் நம் நினைவிற்கு வருபவர் காலபைரவர் தான். இவரை அஷ்ட பைரவர்கள் என்று கூறுவார்கள். கால பைரவர், கல்பாந்த பைரவர், குரோத பைரவர், கபால பைரவர், சம்ஹார பைரவர், உன்மத்த பைரவர், கண்ட பைரவர் என்று கூறுவோம். இந்த அஷ்ட பைரவர்களில் வராத ஒரு பைரவராக திகழக் கூடியவர் தான் சுவர்ண ஆகர்ஷண பைரவர்.

- Advertisement -

பொதுவாக பைரவரை நம்முடைய இல்லத்தில் வைத்து வழிபடக் கூடாது. ஏனென்றால் அவர் உக்கிரமான தெய்வம் என்று கூறுவோம். ஆனால் இந்த உக்கிரங்கள் எதுவுமே இல்லாமல் மிகவும் சாந்தரூபமாக திகழக்கூடியவர்தான் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர். இவருடைய புகைப்படத்தை நம்முடைய வீட்டில் வாங்கி வைத்து நாம் வழிபட்டோம் என்றால் நம்முடைய வீட்டில் செல்வத்திற்கு எந்தவித பஞ்சமும் இருக்காது என்று கூறப்படுகிறது.

அப்படிப்பட்ட சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட வேண்டிய முறையைப் பற்றி பார்ப்போம். பொதுவாக பைரவர் என்றாலே அஷ்டமி திதி தான் மிகவும் சிறப்புக்குரியதாக திகழும். அதிலும் குறிப்பாக தேய்பிறை அஷ்டமியை தான் பலரும் பைரவர் வழிபாட்டிற்கு ஏற்றதாக கருதுவார்கள். ஆனால் சொர்ண ஆகர்ஷன பைரவரை வழிபட வேண்டும் என்று நினைப்பவர்கள் வளர்பிறை அஷ்டமியை தேர்வு செய்ய வேண்டும்.

- Advertisement -

வளர்பிறை அஷ்டமியை தேர்வு செய்ய இயலாதவர்கள் வளர்பிறையில் வரக்கூடிய வெள்ளிக்கிழமையை கூட தேர்வு செய்து சொர்ண ஆகர்ஷன பைரவரை வழிபடலாம். அருகில் இருக்கக்கூடிய ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது அவருக்கு அபிஷேகம் செய்வதற்காக பன்னீரை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும். அவ்வாறு நாம் பன்னீரை அபிஷேகத்திற்காக தந்து விட்டு அபிஷேகம் முடிந்த பிறகு அபிஷேகமான பன்னீர் கலந்த தீர்த்தத்தை சிறிதளவு ஆவது வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

அபிஷேகம் முடிந்து தீப ஆராதனை அனைத்தும் நிறைவு செய்த பிறகு சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு முன்பாக 9 அகல் விளக்குகளில் நெய் தீபத்தை ஏற்றி வைத்து அவரை மனதார வழிபட்டு விட்டு வீட்டிற்கு வர வேண்டும். வீட்டிற்கு வந்த பிறகு நாம் வாங்கி வைத்திருந்த பன்னீர் தீர்த்தத்தில் தேவையான அளவு சுத்தமான தண்ணீரை கலந்து வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். குறிப்பாக பணம் இருக்கும் இடங்களில் தெளிக்க வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு செய்வதன் மூலம் சொர்ண ஆகர்ஷன பைரவரின் அருள் நம் வீட்டில் நிறைந்திருக்கும். இதனால் நம் வீட்டில் இருக்கக் கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கி நேர்மறை ஆற்றல்களும் ஏற்படும். இதனால் நம் வீட்டில் வறுமை என்பது நீங்கி செல்வ செழிப்பு உயர ஆரம்பிக்கும். இந்த முறையில் தொடர்ந்து ஒன்பது வெள்ளிக்கிழமையோ அல்லது ஒன்பது வளர்பிறை அஷ்டமியோ சொர்ண ஆகர்ஷன பைரவரை வழிபட கண்டிப்பான முறையில் வீட்டில் செல்வ நிலை உயரும்.

இதையும் படிக்கலாமே: வறுமையை நீக்கும் அன்னபூரணி வழிபாடு

காலபைரவரை முழு நம்பிக்கையுடன் வழிபடுபவர்களுடைய வாழ்க்கையில் காலத்தால் ஏற்படக்கூடிய எப்பேர்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் அது நீங்கி நன்மைகள் உண்டாகும்.

சற்று முன்