வரும் செவ்வாய்க் கிழமை தேய்பிறை அஷ்டமி அன்று சொர்ண ஆகர்ஷண பைரவரை இப்படி வழிபட்டால் வறுமை நீங்கி செல்வம் பெருக்கெடுக்குமாம் தெரியுமா?

swarna-bairavar

வீட்டில் செல்வம் பெருக, செல்வத்திற்கு அதிபதியாக விளங்கும் மகாலக்ஷ்மியையும், குபேரரையும் தான் நமக்கு நன்கு தெரியும். ஆனால் இவர்களை விட பைரவரின் அம்சமாக விளங்கும் சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபடுவதால் பெருஞ்செல்வம் சேரும் என்பது நியதி. இது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? அஷ்டலட்சுமிகளும் செல்வ வளத்தை வாரி வழங்கிக் கொண்டிருப்பதால் அவர்களின் சக்தி குறையும் என்பது விதி. இதனை சரிசெய்ய என்ன செய்கிறார்கள்? வறுமை நீங்கி செல்வம் பெருக சொர்ண ஆகர்ஷன பைரவரை நாம் எப்படி வழிபட வேண்டும்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்..

swarna-bairavar1

என்னதான் அஷ்டலட்சுமிகளும் நமக்கு செல்வ வளத்தை வாரி வழங்கி வந்தாலும், அவர்களுடைய சக்தியும் குறைந்து கொண்டு வருமாம். அதனை சரிசெய்ய ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி நாளிலும் சொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவிலில் ராகு கால வேளையில் அஷ்டலட்சுமிகளையும் சக்திக்காக வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. இதனால் அவர்களது சக்தி குறையாமல் எப்பொழுதும் பெருகி கொண்டே இருப்பதாக ஐதீகம் உள்ளது.

மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்த மல்லிகை பூவை சொர்ணம் இருக்கும் இடங்களிலும், செல்வம் இருக்கும் இடங்களிலும் தினந்தோறும் வைத்து வருவதால் அவை குறையாமல் பெருகும் என்பது நம்பிக்கை. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் பணம் வைக்கும் கல்லா பெட்டியிலும், நமது வீட்டில் பணம் வைக்கும் பீரோ அல்லது பெட்டியில் மல்லிகை பூக்களை தினந்தோறும் வைத்து கீழ்வரும் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

malligai poo

மந்திரம்:
ஓம் ஐஸ்வரேஸ்வராய நம:

- Advertisement -

இதுபோல் தினந்தோறும் செய்து வழிபடுவதால் அதில் இருக்கும் பணம் மென்மேலும் பெருகும். அதுபோல் அதிலிருந்து எடுத்து நாம் ஒருவருக்கு பணம் கொடுக்கும் பொழுது தலைப்பகுதி நம்மை நோக்கியவாறு பார்த்துக் கொடுக்க வேண்டும். அதிலிருந்து தினமும் காலையில் முதல் பணமாக ஒரு ரூபாய் நாணயத்தையாவது தர்ம காரியத்திற்கு தனியே எடுத்து வைக்க வேண்டும். இதனால் மகாலட்சுமி மனம் மகிழ்வாள் என்பது ஐதீகம்.

swarna-bairavar2

தேய்பிறை அஷ்டமி நாளில் அஷ்டலட்சுமிகளின் சக்தி கூட ராகு கால வேளையில் எப்படி பூஜைகள் நடத்தப்படுகிறதோ! அதே போல நம் வீட்டில் சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தை வைத்து தேய்பிறை அஷ்டமி நன்னாளில் ராகு கால வேளையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள சொர்ண ஆகர்ஷண பைரவரின் மூலமந்திரத்தை உச்சரிப்பதால் தொழில் வளம் செழிக்கும், செல்வ வளம், தன தானியம் பெருகும் என்பது ஐதீகம். வரும் செவ்வாய்க்கிழமை அன்று தேய்பிறை அஷ்டமி வர இருக்கிறது. அந்த நாளில் ராகு கால வேளையில் 3.00 மணியிலிருந்து 4.30 மணிக்குள்ளாக இந்த மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு வறுமை நீங்கி செல்வ செழிப்பு உண்டாகும் வரம் கிட்டும். அதனால் இந்த நாளை நீங்கள் தவறவிடாமல் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

swarna-bairavar3

சொர்ண ஆகர்ஷண பைரவர் மூல மந்திரம்:
ஓம், ஏம், ஐம், க்லாம்; க்லீம், க்லூம்; ஹ்ராம், ஹ்ரீம், ஹ்ரூம்
சகவம்ஸ ஆபதுத் தோரணாய, அஜாமிள பந்தநாய, லோகேஸ்வராய,
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய, மமதாரித்ரிய வித்வேஷணாய,
ஓம், ஸ்ரீம், மஹா பைரவாய நமஹ!!

இதையும் படிக்கலாமே
கடந்த சில நாட்களில், வேலையை இழந்து, தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, உடனடியாக நல்ல வேலை கிடைக்க, சக்திவாய்ந்த வழிபாடு!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.