ஸ்வர்ண தோஷம் நீங்க முருகன் வழிபாடு.

swarnam murugan
- Advertisement -

பொன்நகையும், புன்னகையும் பெண்களை மேலும் அழகு படுத்தக்கூடிய ஒன்றாக திகழ்கிறது. அதனால் தான் என்னமோ பெண்கள் தங்கத்தை பார்த்ததும் அதன் மேல் ஆசைப்படுகிறார்கள். ஆசைப்படுவதோடு மட்டுமல்லாமல் அதற்காக சிறுக சிறுக பணத்தை சேர்த்து வைத்து தங்கத்தை வாங்கவும் செய்கிறார்கள். ஏதோ ஒரு சூழ்நிலையில் அந்த தங்கம் அவர்களிடம் தங்காமல் சென்று விடுகிறது. இதற்கு காரணமாக ஸ்வர்ண தோஷம் திகழ்கிறது. இந்த ஸ்வர்ண தோஷத்தை நீக்குவதற்கு முருகப்பெருமானை வழிபடும் முறையை பற்றி தான் ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக ஸ்வர்ணம், தங்கம், பணம் என்று வரும் பொழுது பெருமாளும் மகாலட்சுமியும் தான் நம் நினைவிற்கு வருவார்கள். ஆனால் அவர்களின் மருமகனாக திகழக்கூடிய முருகப்பெருமானும் இதை நிவர்த்தி செய்வதற்கு மிகவும் முக்கியமான கடவுளாக கருதப்படுகிறார். ஸ்வர்ணதோஷம் ஏற்பட காரணமாக கூறப்படுவது நகையை அடமானம் வைப்பது.

- Advertisement -

ஒருமுறை ஒரு நகை அடமானத்திற்கு சென்றுவிட்டாலே அந்த நகையில் சுவர்ண தோஷம் ஏற்பட்டுவிட்டது என்று அர்த்தம். அடமானம் என்றால் அதற்கு கடன் என்று தான் பொருள். கடன் சம்பந்தப்பட்ட அனைத்து விதமான செயல்களுக்கும் காரண கர்த்தராக விளங்கக் கூடியவர் செவ்வாய் பகவானே. செவ்வாய் பகவானுக்குரிய அதி தேவதையாக திகழக் கூடியவர் முருகக் கடவுளே. அதனால்தான் சுவர்ண தோஷத்தை நீக்குவதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும் என்று கூறுகிறோம்.

இந்த வழிபாட்டை செவ்வாய்க்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். அதுவும் குறிப்பாக அவிட்ட நட்சத்திரம் இருக்கும் செவ்வாய்க்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். வேறு எந்த செவ்வாய்க்கிழமையிலும் செய்யக்கூடாது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலையில் எழுந்து யாரிடமும் எதுவும் பேசாமல் முருகப் பெருமானின் நாமத்தை மட்டும் மனதிற்குள் உச்சரித்துக் கொண்டு சுத்தமாக குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் வந்து விளக்கேற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு ஒரு பித்தளையில் ஆன செம்போ குடமோ ஏதோ ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் துவரம் பருப்பு, அரிசி, கொண்டைக்கடலை இவை மூன்றையும் சம அளவு போட்டு நிரப்ப வேண்டும். பிறகு அதன் மேல் ஒரு தேங்காயை தலைகீழாக கவிழ்த்து வைக்க வேண்டும். அடுத்ததாக குடும்பத்துடன் சேர்ந்து அந்த பித்தளை குடத்தை எடுத்துக்கொண்டு அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு செல்ல வேண்டும்.

அங்கு இருக்கும் முருகப்பெருமானுக்கு தங்களால் இயன்ற அளவு அபிஷேகங்களை செய்து ஆராதனை காண்பித்த பிறகு அங்கு இருக்கும் அர்ச்சகருக்கு இந்த குடத்தை தானமாக தந்து விட வேண்டும். தானமாக தந்த பிறகு யாரிடமும் எதுவும் பேசாமல், எங்கும் செல்லாமல், திரும்பிக் கூட பார்க்காமல் வீட்டிற்கு வந்து சேர்ந்து விட வேண்டும். அன்று மாலை கொண்டை கடலையை வேகவைத்து வீட்டில் இருக்கும் நபர்களுக்கு கொடுத்துவிட்டு, பிறருக்கும் தானமாக வழங்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: சகல ஐஸ்வர்யங்களும் தரும் விநாயகர் வழிபாடு

செவ்வாய் கிரகத்திற்கு செய்யக்கூடிய தானமாக இந்த தானத்தை செய்து நம் வீட்டில் இருக்கக் கூடிய ஸ்வர்ண தோஷத்தை நீக்கி தங்கத்தை அதிக அளவில் சேர்த்து மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

- Advertisement -