சகல ஐஸ்வர்யங்களும் தரும் விநாயகர் வழிபாடு

sangada vinayagar
- Advertisement -

விக்னங்களை தீர்க்கும் விநாயகர் பெருமானை யார் ஒருவர் மனதார வேண்டுகிறார்களோ அவர்களுடைய துன்பங்கள் அனைத்தும் தீர்க்கப்படும். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானுக்கு உகந்த நாளாக சங்கடஹர சதுர்த்தி நாள் திகழ்கிறது. அந்த நாளில் விநாயகரை வழிபடுவதன் மூலம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய சங்கடங்கள் அனைத்தும் நீங்கும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் சங்கடஹர சதுர்த்தி நாளன்று விநாயகரை எந்த முறையில் வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

குற்றம் குறை அற்ற தெய்வமாக திகழக்கூடியவர்தான் விநாயகர் பெருமான். அதனால்தான் அவர் அனைத்து இடங்களிலும் நிறைந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட விநாயகப் பெருமானை மனதார நினைத்து அவரை குருவாக ஏற்று அவரின் வழிப்படி நடக்கும் பக்தர்கள் இந்த முறையில் அவரை வழிபட்டு வந்தால் அனைத்து விதமான ஐஸ்வர்யங்களையும் பெற முடியும்.

- Advertisement -

இந்த வழிபாட்டு முறையை நாம் வெள்ளி, வியாழன், புதன் போன்ற கிழமைகளில் வரக்கூடிய விநாயகர் சதுர்த்தி அன்றுதான் ஆரம்பிக்க வேண்டும். அன்றைய தினம் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் விநாயகர் பெருமாளுக்கு விளக்கேற்றி வைத்து வழிபட வேண்டும். தங்களால் இயன்றவர்கள் விரதம் மேற்கொள்ளலாம்.

அன்றைய தினம் அனைத்து விநாயகர் ஆலயங்களிலும் மாலை நேரத்தில் விநாயகருக்கு அபிஷேகம் நடைபெறும். அந்த அபிஷேகத்தில் கலந்து கொள்ள வேண்டும். அவ்வாறு கலந்து கொள்வதற்காக ஆலயம் செல்வதற்கு முன்பாக ஒரு சிறிய வாழை இலை 3 வெற்றிலை பாக்கு 11/- ரூபாய், வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும்.

- Advertisement -

மூன்று வெற்றிலை வாங்க வேண்டும். அதில் ஒன்று ஆண் வெற்றிலை, மற்றொன்று பெண் வெற்றிலை, மூன்றாவதாக இருப்பது விநாயகர் வெற்றிலை என்று மூன்று வகைகளான வெற்றிலைகளை வாங்க வேண்டும். காம்பு வலது புறமாக திரும்பி இருக்கும் வெற்றிலை ஆண் வெற்றிலை என்றும் இடது புறமாக திரும்பி இருக்கும் வெற்றிலை பெண் வெற்றிலை என்றும் கூறப்படுகிறது. அடிப்பகுதி விநாயகரின் துதிக்கை வலது புறம் வளைந்து இருப்பது போல் வளைந்து இருந்தால் அதுதான் விநாயகர் வெற்றிலை என்று கூறப்படுகிறது.

இந்த வெற்றிலைகளை ஓட்டைகளோ பூச்சிகளோ இல்லாத அளவிற்கு பார்த்து வாங்கிக் கொள்ள வேண்டும். விநாயகர் கோவிலுக்கு சென்று விநாயகருக்கு முன்பாக வாழை இலையை விரித்து அதன் மீது இந்த மூன்று வெற்றிலைகளையும் வைத்து இந்த மூன்று வெற்றிலைகளுக்கும் ஒரு கொட்டைப்பாக்கை வைக்க வேண்டும். பிறகு 11 ரூபாய் மற்றும் வெல்லத்தையும் வைத்து விநாயகப் பெருமானை மனதார வழிபட வேண்டும்.

- Advertisement -

விநாயகப் பெருமாளுக்கு அபிஷேகம் முடிந்த பிறகு இந்த வெல்லத்தை எடுத்து அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக தர வேண்டும். 11 ரூபாயை அப்படியே வைத்து விட்டு வெற்றிலை கொட்டைப்பாக்கை மட்டும் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வரவேண்டும். அன்று இரவு 8 மணியிலிருந்து 9:00 மணிக்குள் இந்த மூன்று வெற்றிலைகளையும் எடுத்து அதற்கு சிறிது சுண்ணாம்பு தடவி கொட்டைப்பாக்கையும், ஏலக்காயும் வைத்து வாயில் போட்டு நன்றாக மெல்ல வேண்டும். அப்பொழுது

“ஹரி ஓம் கணபதி ஆனந்த கணபதி பாலகணபதி பாசுபத கணபதி உன் மீது ஆணை அப்பன் அம்மை கொடுத்த சகல செல்வங்களும் அஷ்ட ஐஸ்வர்யங்களும் மலைபோல் சேர்க என்னுள் நிறைந்து நிற்க சிவா”

என்னும் மந்திரத்தை 21 முறை உச்சரிக்க வேண்டும். பிறகுதான் அந்த வெற்றிலையும் அதில் வரும் சாற்றையும் விழுங்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: மன கஷ்டத்தை நீக்கும் கல் உப்பு பரிகாரம்.

இந்த முறையில் தொடர்ந்து ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தி நாளென்றும் இப்படி வழிபாடு மேற்கொள்வதன் மூலம் நம் வாழ்க்கை படிப்படியாக முன்னேற ஆரம்பிக்கும் சகல ஐஸ்வர்யங்களும் நம்மை தேடி வரும்.

- Advertisement -