சுவாச குழாய் அடைப்பை சரி செய்ய பாட்டி வைத்தியம்! இனி மூச்சு விடுவதில் சிரமம் இல்லை ஃப்ரீயா மூச்சு விடுங்க!

breath-milagu-thippili
- Advertisement -

பருவ நிலை மாற்றம், மரபணு கோளாறு மற்றும் உடலமைப்பை பொறுத்து அவர் அவரின் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப சுவாச பிரச்சனைகள் தோன்றுகிறது. சுவாச குழாய் சுருங்கி விடுவதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. சாதாரணமாக வேலை செய்தாலே, மூச்சு வாங்க கூடிய நிலைக்கு தள்ளப்படுவது உண்டு. இந்த சுவாச குழாய் அடைப்பை சரி செய்யக்கூடிய எளிய வீட்டு வைத்தியம் என்ன? என்பதை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.

சுவாச குழாய் சரியான நெகிழ்வு தன்மை இல்லாமல் சுருங்கி விடுவதால் நமக்கு தேவையான சுவாசம் கிடைக்காமல் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. இந்த சிரமத்தை எளிதாக நீக்க பல்வேறு முறைகளை கையாண்டாலும், இந்த ரெண்டு மூலிகை பொருட்களை பயன்படுத்தினால் விரைவாக நிவாரணம் காணலாம்.

- Advertisement -

சுவாச பிரச்சனை இருப்பவர்களுக்கு பெரும்பாலும் ஒவ்வாமை ஏற்படுவது உண்டு. மாசு, தூசு போன்றவற்றில் இருந்தால் சிலருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். சிலருக்கு அதிகமான வாசனையை முகர்ந்தால் கூட மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவது உண்டு. சமைக்கும் போது நெடி எடுத்தால் கூட மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

புகை மூக்கில் நுழைந்தாலும் இது போல சிலருக்கு மூச்சு விடுவது சிரமம் ஏற்படுவது உண்டு. ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்சனைகளும் மூச்சு விடுவதில் இருந்து ஆரம்பிக்கிறது. இது ஒரு முறை வந்துவிட்டால் அவ்வளவு எளிதாக நம்மை விட்டு நீங்காது. நம் வாழ்நாள் முழுவதும் நம்மை தொடர்ந்து கொண்டிருக்கும் மிகக் கொடிய இந்த நோயை எளிதான முறையில் நாம் விரட்ட போகிறோம்.

- Advertisement -

சுவாசப் பிரச்சினைகள் இருப்பவர்கள் பொதுவாக ஜில்லென்று குளிர்ச்சியான பொருட்களை எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்த குளிர்ச்சித் தன்மை சுவாசக் குழாய்க்குள் செல்வதற்குள் சுவாச குழாய் இன்னும் சுருங்க ஆரம்பித்து விடும். இதனால் மூச்சு வாங்குவதில் சிரமம் ஏற்படும். மேலும் சளி பிடிப்பது, தும்மல், இருமல் போன்ற பிரச்சனைகளும் அதிகரிக்க துவங்கிவிடும்.

துணி துவைக்கும் போது பயன்படுத்தும் நறுமணம் மிக்க பொருட்களும், பூஜைக்கு பயன்படுத்தும் தூபம், சாம்பிராணி, புகை, சென்ட், பாடி ஸ்ப்ரே போன்றவையும் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. இத்தகையவர்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் திப்பிலி மற்றும் நம் வீட்டில் எளிதாக இருக்கக்கூடிய மிளகை வைத்து கசாயம் போட்டு குடிக்கலாம்.

ஆறு மிளகுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதை நன்கு இடித்து ஒன்றரை டம்ளர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் இதை சேருங்கள். பின் அடுப்பை பற்ற வைத்த சூடேற்றுங்கள். மிளகுடன் மூன்று திப்பிலிகளை இடித்து சேருங்கள். பின்னர் ஒரு வெற்றிலையை காம்பு நீக்கி துண்டுகளாக கிழித்து சேருங்கள். ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஆனது ஒரு டம்ளர் அளவிற்கு சுண்டியதும் அடுப்பை அணைத்து நா பொறுக்கும் சூட்டில் ஆற விட்டு விடுங்கள். இந்த கசாயத்தை சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்கு பின்பு குடித்து வந்தால் விரைவாகவே சுவாசக் குழாய் விரிவடைய ஆரம்பித்து விடும். இதனால் மூச்சு விடுவதில் இருந்து வந்த தடைகள் நீங்கி நல்ல சுவாசம் உண்டாகக்கூடும்.

- Advertisement -