விநாயகரின் உள்ளங்கையில் இருக்கும் இந்த சின்னம், உங்கள் உள்ளங்கையிலும் இருந்தால், இந்த உலகத்தில் உங்களை ஜெயிக்க யாராலும் முடியாது.

vinayagar1

எந்த ஒரு காரியமும் தடைபடாமல் நடக்க வேண்டும் என்றாலும், தடைக்கற்கள் முட்டுக்கட்டையாக நின்றாலும், நாம் வழிபட வேண்டிய தெய்வம் விநாயகர். தடைகளை தகர்த்தெறியும் விநாயகரை, எவரொருவர் தொடந்து எளிமையாக வழிபட்டு வந்தாலும் கூட, அவர்கள் வாழ்க்கையில் தோல்வி அடைந்தாலும், துவண்டு போகாமல் வெற்றி வாகை சூடுவார்கள். இதில் சந்தேகமே கிடையாது. இந்த விநாயகப் பெருமானை நினைத்து உங்களுடைய உள்ளங்கைகளில் இந்த ஒரு சின்னத்தை மட்டும் போட்டுக் கொள்ளுங்கள். பிறகு உங்களுடைய வாழ்க்கையில் நடக்கப்போகும் மாற்றத்தை, உங்களால் நம்பவே முடியாது.

astrology-vinayagar

உங்கள் கைகளில் நீங்கள் போடவேண்டிய சின்னம் என்ன? அந்த சின்னத்தை எந்த நாளில் போட வேண்டும். இந்த சின்னத்தை போட்டுக்கொண்டால் என்ன செய்யலாம். என்ன செய்யக்கூடாது. என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நம்பிக்கையோடு நீங்கள் செய்யக்கூடிய இந்த ஒரு சின்ன பரிகாரம், உங்களுடைய வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை தொடங்க போகின்றோம்.

சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகப் பெருமானை வழிபாடு செய்தால், நம்முடைய சங்கடங்கள் தீரும் என்பது ஐதீகம். சங்கடஹர சதுர்த்தி தினத்தில் இந்த பரிகாரத்தை செய்வது, பல மடங்கு பலனை நமக்கு கொடுக்கும். விநாயகர் கையில் இருக்கும் ஸ்வஸ்திக் சின்னத்தை தான் நம்முடைய கைகளிலும் போட்டுக்கொள்ள வேண்டும்.

சதுர்த்தி தினத்தில் விநாயகப் பெருமானை வேண்டிக் கொண்டு, காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்து முடித்துவிட்டு, பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, எந்த நிற பேனாவைக் கொண்டு வேண்டுமென்றாலும், உங்கள் கைகளில் இந்த சின்னத்தை நீங்களே போட்டுக் கொள்ளலாம். ‌ உங்களது இடது கையை கொண்டு வலது கையில் சரியான முறையில் ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்து கொள்ள வேண்டும். ஸ்வஸ்திக் சின்னத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தை பார்த்து போட்டுக்கொள்ளலாம். இதனுடைய திசைகளை மாற்றாமல் இதில் இருக்கும்படியே போட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த ஸ்வஸ்திக் சின்னத்தைப் போட்டு கொண்டு, உங்களுடைய தினசரி வேலைகளை செய்யலாம். சாப்பிடுவதற்கு முன்பு இந்த ஸ்வஸ்திக் சின்னத்தை கழுவிக் கொள்ளுங்கள். சாப்பிட்ட பின்பு, திரும்பவும் வரைந்து கொள்ளுங்கள். முடிந்தவரை சதுர்த்தி தினத்தில் காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரைக்குமாவது இந்த ஸ்வஸ்திக் சின்னம் உங்களுடைய கையில் இருக்க வேண்டும்.

swastik symbol benefits tamil

வேலை செய்வதன் காரணமாக சுவஸ்திக் சின்னம் அழிந்து போய்விட்டால் தவறொன்றும் கிடையாது. வேலையை முடித்துவிட்டு, மீண்டும் நீங்கள் அந்த ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்து கொள்ளலாம். ஆனால், இந்த ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்து கொண்டு அன்றைய தினம் அசைவம் சாப்பிடக்கூடாது. சுத்தபத்தமாக இருக்க வேண்டும். உடல் தூய்மையும் அவசியம் தேவை. மனத்தூய்மையும் அவசியம் தேவை. இப்படியாக உங்கள் உள்ளங்கைகளில் ஸ்வஸ்திக் சின்னத்தை வைத்துக்கொண்டால் நீங்கள் எண்ணிய காரியம் எல்லாம் நிறைவேறும்.

pillaiyar1

எதிரி தொல்லை நீங்கும். நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்து வந்த வேலைகளும் சுறுசுறுப்பாக நடைபெற ஆரம்பிக்கும். உங்களுடைய அறிவாற்றல் அதிகரிக்கும். தோல்வி என்பது இருக்காது. தோல்வியே வந்தாலும், துணிவு கொண்டு எதிர்த்து நிற்பார்கள்.

sucess

பிரச்சினைகளால் சூழப்பட்டுள்ளது தான் நம்முடைய வாழ்க்கை. அந்த பிரச்சனையில் இருந்து வெளிவரும் சூட்சுமத்தையும், நீங்கள் கற்றுக் கொண்டு, இந்த உலகத்தில் எப்படி வாழ வேண்டும் என்ற சூட்சுமத்தையும் கற்றுக்கொண்டு, திறமையான வாழ்க்கையை வாழ்ந்து, ஜெயிக்கவே பிறந்தவங்களா நீங்க மாறனும்னு நினைச்சா, மாதத்தில் 2 நாள் விநாயகப் பெருமானை நினைத்த இந்த சின்னத்தை மட்டும் உங்கள் உள்ளங்கைகளில் எழுதித்தான்  பாருங்களேன்! உங்கள் வாழ்க்கையில் நடக்க கூடிய மாற்றத்தை!

இதையும் படிக்கலாமே
16 வாரங்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள், பிடிக்காத தம்பதிகள் அன்யோன்யமாக மாறுவார்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.