ஒருமுறை இப்படி சுவையான இனிப்பு பால் பொங்கல் செய்து பாருங்கள், வீட்டில் உள்ள அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள்

paal
- Advertisement -

ஒவ்வொரு நாளும் காரசாரமான உணவுகளை தான் சாப்பிட்டு வருகிறோம். ஏனென்றால் காலையில் எழுந்து அவசர அவசரமாக வேலைக்கு சென்று, மறுபடியும் இரவு வீட்டிற்கு வந்து, சாப்பிட்டு உறங்குவதற்கு தான் நேரம் சரியாக இருக்கும். பிடித்த உணவுகளை செய்து சாப்பிடும் வகையில் அனைவருக்கும் போதுமான நேரம் இருப்பதில்லை. எனவே வீட்டில் இருக்கும் ஏதாவது ஒரு விடுமுறை நாளில் தான் மனதிற்குப் பிடித்த இனிப்பு வகைகளை செய்து சாப்பிட முடியும். ஆனால் அதற்கும் நேரம் அதிகமாக தேவைப்படும். இவ்வாறு நேரம் அதிகம் செலவில்லாமல் அனைவருக்கும் பிடித்த இனிப்பு சுவையில் ஒரு அசத்தலான பால் பொங்கல் செய்ய முடியும். இதன் சுவை சாப்பிடுவதற்கு மிகவும் ருசியாக இருக்கும் ஆனால் இதனை செய்வதற்கு நேரமும் குறைவாகத் தான் செலவாகும், செய்ய வேண்டிய பொருட்களும் மிகவும் சுலபமாக கிடைக்கும். வாருங்கள் இப்படி சுவையான இனிப்பு பால் பொங்கலை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
பச்சை அரிசி – 200 கிராம், சர்க்கரை – 300 கிராம், பால் – 600 மில்லி, ஏலக்காய் – 4, நெய் – 100 கிராம், முந்திரி பருப்பு – 20, திராட்சை – 10.

- Advertisement -

செய்முறை:
முதலில் அரிசியை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொண்டு அதனை இரண்டு முறை தண்ணீர் விட்டு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும் பிறகு மறுபடியும் இதில் தண்ணீர் சேர்த்து 20 நிமிடத்திற்கு நன்றாக ஊற வைக்க வேண்டும்.

பின்னர் நான்கு ஏலக்காயை மிக்ஸி ஜாரில் சேர்த்து, அதனுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பின் மீது வைத்து, 600 மில்லி பாலை அதில் ஊற்றி, அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

- Advertisement -

பால் நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும், அதனுடன் பொடி செய்து வைத்துள்ள ஏலக்காய் தூளை சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு இவற்றுடன் ஊற வைத்த அரிசியை சேர்த்து இரண்டையும் நன்றாக வேக விடவேண்டும். இவை நன்றாக ஊறியதும் இவற்றுடன் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து கலந்து விட வேண்டும். அரிசி பாலுடன் சேர்த்து நன்றாக குழையும் வரை வேக வேண்டும்.

பின்னர் ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பின் மீது வைத்து, அதில் 100 கிராம் நெய் சேர்த்து, அதனுடன் 20 முந்திரிப்பருப்பு, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து வைக்கவேண்டும். பிறகு பொங்கல் நன்றாக வெந்ததும் இவற்றுடன் 300 கிராம் சர்க்கரை சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு இறுதியாக வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பு, திராட்சை இவற்றையும் சேர்த்துக் கலந்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான் சுவையான இனிப்பு பால் பொங்கல் தயாராகிவிட்டது. அனைவரும் மகிழ்ச்சியாக சாப்பிட இதனை அடிக்கடி செய்து கொள்ளலாம்.

- Advertisement -