சர்க்கரை வள்ளி கிழங்கில் அட்டகாசமான ஒரு பாயாசம் ரெசிபி

sweet potato kheer
- Advertisement -

வீட்டில் எந்த ஒரு விசேஷம் என்றாலும் முதலில் இனிப்பு தான் செய்வார்கள். அதிலும் பாயாசம் தான் முதலில் இடம் பெறும். அப்படியான இந்த பாயாசத்தை பல வகையில் செய்யலாம் இந்த சமையல் குறிப்பு பதிவில் வித்தியாசமாக சர்க்கரை வள்ளி கிழங்கை வைத்து எப்படி பாயாசம் செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

துருவிய சர்க்கரை வள்ளி கிழங்கு – 1 கப், பால் -1/2 லிட்டர், சர்க்கரை – 1/4 கப், ஏலக்காய் பொடி – 1பின்ச், நெய் -1 டேபிள் ஸ்பூன், குங்குமப்பூ -1 பிஞ்ச் முந்திரி திராட்சை – சிறிதளவு

- Advertisement -

செய்முறை

இதற்கு முதலில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை துருவி எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து அடுப்பில் பேன் வைத்து நெய் ஊற்றி சூடானவுடன் துருவிய சர்க்கரை வள்ளி கிழங்கு அதில் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து பச்சை வாடை போகும் வரை வதக்கி கொள்ளுங்கள்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அரை லிட்டர் காய்ச்சாத திக்கான பாலை ஊற்றி நன்றாக கொதிக்க விடுங்கள். பால் கொஞ்சம் கெட்டியாக மாறி வரும் போது அதில் குங்குமப்பூ சேர்த்து பாலின் நிறம் மாறியவுடன் ஏற்கனவே நெய்யில் வறுத்து வைத்த சர்க்கரை வள்ளி கிழங்கை இதில் சேர்த்து கொதிக்க விடுங்கள்.

- Advertisement -

அடுத்து ஒரு ஐந்து நிமிடம் கழித்து சர்க்கரை சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாக கலந்த பிறகு ஏலக்காய் பொடியும் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இப்போது அடுப்பில் கடாய் வைத்து நெய் ஊற்றி சூடானதும் முந்திரி திராட்சை வறுத்து அதையும் இந்த பாயாசத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: கரகர மொரு மொரு சேப்பங்கிழங்கு போண்டா செய்வது இவ்வளவு ஈஸியா?

இவையெல்லாம் சேர்த்து நன்றாக கொதித்து சுண்டியவுடன் இறக்கி விடலாம். அட்டகாசமான சுவையில் சர்க்கரை வள்ளி கிழங்கு பாயாசம் தயார். ஒரு முறை இப்படி பாயாசம் வச்சு பாருங்க. இனி எப்ப பாயாசம் செஞ்சாலும் இது தான் செய்வீங்க.

- Advertisement -