கரகர மொரு மொரு சேப்பங்கிழங்கு போண்டா செய்வது இவ்வளவு ஈஸியா?

bonda
- Advertisement -

சேப்பங்கிழங்கில் வறுவல், குழம்பு, ரோஸ்ட், இப்படி விதவிதமாக சமைத்திருப்போம். ஆனால் இந்த சேப்பங்கிழங்கில் மொறு மொறுவென போண்டா சுடுவது எப்படி என்று உங்களுக்கு தெரியுமா. ரொம்ப ரொம்ப ஈசி. வீட்டில் ஐந்து ஆறு சேப்பங்கிழங்கு இருந்தால் இன்னைக்கு இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பார்க்கலாம். சுடச்சுட ரசம் சாதத்திற்கு, சுடச்சுட இந்த சேப்பங்கிழங்கு போண்டா இருந்தால் போதும்.

சாதம் உள்ளே இறங்குவதே தெரியாது. ஒரே ஒரு முக்கியமான விஷயம்தான். இந்த போண்டாவை சூடாக இருக்கும் போதே சாப்பிட்டு விட வேண்டும். ஆறிவிட்டால் அவ்வளவு ருசி இருக்காது. வாங்க நேரத்தை கடத்தாமல் இந்த மொறுமொறு சேப்பங்கிழங்கு போண்டாவை சுலபமாக எப்படி செய்வது என்று ரெசிபியை படித்து தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

சேப்பங்கிழங்கு மீடியம் சைஸில் இருப்பது – 5 லிருந்து 6
கடலை மாவு – 4 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வர மிளகாய் தூள் – காரத்திற்கு ஏற்ப,
பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை
போண்டாவை பொறித்து எடுப்பதற்கு – தேவையான எண்ணெய்

செய்முறை

முதலில் எடுத்து வைத்திருக்கும் சேப்பங்கிழங்கை குக்கரில் போட்டு, அந்த சேப்பங்கிழங்கு பாதி மூழ்கும் வரை தண்ணீரை ஊற்றி இரண்டு அல்லது மூன்று விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். சேப்பங்கிழங்கு வெந்தவுடன் அதில் இருக்கும் தோலை உரித்து விட்டு, சேப்பங்கிழங்கை நன்றாக மசித்து விட வேண்டும்.

- Advertisement -

இதோடு கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, வரமிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், சேர்த்து தேவைப்பட்டால் கருவேப்பிலைகளை பொடியாக நறுக்கி போட்டு பிசைந்து கொள்ளுங்கள். தண்ணீர் ஊற்ற தேவையில்லை. சேப்பங்கிழங்கில் இருக்கும் தண்ணீரே சரியாக இருக்கும். இது போண்டா மாவு போல வந்திருக்கும் அல்லவா.

இது அப்படியே இருக்கட்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடு செய்து கொள்ளுங்கள். தயார் செய்து வைத்திருக்கும் மாவை உங்கள் விரல்களாலேயே எடுத்து எண்ணெயில் கிள்ளி கிள்ளி குட்டி குட்டி போண்டாவாக விட்டு மிதமான தீயில் பொன்னிறம் வரும் வரை சிவக்க விட்டு எடுத்தால் சூப்பரான சேப்பங்கிழங்கு போட்டா தயார்.

- Advertisement -

இந்த ரெசிபி பிடிச்சவங்க மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி தான் பாருங்களேன். சேப்பங்கிழங்கை தொடாதவர்கள் கூட இந்த போண்டா சுட்டுக் கொடுத்தால் இன்னும் வேண்டும் என்று கேட்டு சாப்பிடுவாங்க இதை ஸ்நாக்ஸ் ஆக கூட குழந்தைகளுக்கு செஞ்சு கொடுக்கலாம் ஆரோக்கியம் தான்.

இதையும் படிக்கலாமே: அசல் திருநெல்வேலி அல்வாவை சுலபமா வீட்டிலேயே செய்யலாம் வாங்க

ஒருவேளை கடலை மாவு அரிசி மாவு சேர்த்த பிறகும் மாவு கொஞ்சம் தள தளவென இருந்தால் இன்னும் கொஞ்சம் கூடுதலாக அரிசி மாவு, கடலை மாவு சேர்த்து மாவை கட்டியாக பிசைந்து போண்டா சுடவும். மாவு தண்ணீராக இருக்கும் பட்சத்தில் எண்ணெய் குடித்து விடும்.

- Advertisement -