சக்கரவள்ளி கிழங்கு இருந்த ஒரு முறை இந்த ஸ்டஃபிங் பரோட்டா செஞ்சு அசத்துங்க. குழந்தைகளுக்கு இதை விட ஹெல்தியான லஞ்ச் பாக்ஸ் ரெசிபியை டேஸ்ட்டியா ரெடி பண்ணவே முடியாது.

sweet paratha
- Advertisement -

பெரியவர்களுக்கு செய்யும் சமையலை விட குழந்தைகளுக்கு தான் அதிக கவனத்துடன் செய்து கொடுக்க வேண்டும். அவர்கள் நோய் நொடியின்றி நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ நாம் இப்பொழுது கொடுக்கும் ஆரோக்கியமான உணவு மிகவும் அவசியம். அவர்களுக்கென தயாரிக்கும் உணவை சத்து மிக்கதாக இருக்க வேண்டும். இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவிலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடக் கூடிய சக்கரவல்லி கிழங்கு வைத்து ஒரு அருமையான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி தான் செய்யப் போகிறோம்.

செய்முறை

ஒரு பௌலில் ஒரு கப் கோதுமை மாவு, கால் டீஸ்பூன் உப்பு, இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி முதலில் இந்த மாவை கலந்து கொள்ளுங்கள். அடுத்து லேசாக தண்ணீர் தெளித்து மாவை அதிக தளர்வாக இல்லாமல் கொஞ்சம் கெட்டியான பதத்தில் பிசைந்து வைத்து விடுங்கள்.

- Advertisement -

இப்போது இந்த பரோட்டாவிற்கு தேவையான ஷாப்பிங்கை தயார் செய்து விடுவோம். இதற்கு ஒரு சக்கரவள்ளி கிழங்கை வேக வைத்து தோல் உரித்து எடுத்து அதை மசித்து கொள்ளுங்கள். அத்துடன் கால் கப் வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, கால் கப் துருவிய தேங்காய் ஒரு சிட்டிகை உப்பு இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக மசித்து கொண்டால் பரோட்டாவின் உள்ளே வைக்கக் கூடிய ஸ்டஃபிங் தயார்.

இப்போது ஸ்டப்பிங் பரோட்டாவை தயார் செய்து விடுவோம் .அதற்கு பிசைந்து வைத்திருக்கும் மாவில் இருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு பிளாஸ்டிக் பேப்பர் அல்லது வாழை இலை இரண்டில் ஏதாவது ஒன்றில் எண்ணெய் அல்லது நெய் தடவி கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் மேல் இந்த உருண்டையை வைத்து உங்கள் கையிலும் லேசாக எண்ணெய் தொட்டு கையாலே போளிக்கு மாவை தயார் செய்வது போல் அழுத்தி விட்டுக் கொள்ளுங்கள். அதன் பிறகு அதில் தயார் செய்து வைத்திருக்கும் ஸ்டப்பிங்கை ஒரு சிறு உருண்டையாக பிடித்து வைத்து மாவை உள்ளே வைத்து மூடி விடுங்கள்.

ஸ்டஃபிங் உள்ளே வைத்து மாவை சுற்றிலும் இறுக்கமாக உருட்டிய பிறகு மறுபடியும் வாழை இலையில் வைத்து எண்ணெய் தொட்டு லேசாக தட்டினால் இது போளி போல உள்ளே இந்த உருளைக்கிழங்கு மசாலாவுடன் மேலே மாவுடன் சுடுவதற்கு தயாராகி இருக்கும்.

- Advertisement -

அடுத்ததாக அடுப்பை பற்ற வைத்து தோசைக்கல் வைத்து சூடானவுடன் தயார் செய்து வைத்த இந்த பரோட்டாக்களை ஒவ்வொன்றாக போட்டு இரண்டு புறமும் நெய் ஊத்தி திருப்பி போட்டு சிவந்தவுடன் எடுத்து விடுங்கள்.

இதை குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆகவும் கொடுக்கலாம். அல்லது லஞ்ச் பாக்ஸ் ரெசிபி ஆகவும் கொடுத்து அனுப்பலாம். எந்த வகையில் கொடுத்தாலும் சக்கரை வள்ளி கிழங்கு கோதுமை மாவு எல்லாமே குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

இதையும் படிக்கலாமே: வரகு முறுக்கு செய்வது எப்படி

இது போன்ற உணவுகளை அடிக்கடி அவர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்களின் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். நீங்களும் ஒரு முறை இதை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -