- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்நல்ல கிரிஸ்பியா டேஸ்டியான முறுக்கு வேணுன்னா வரகு மாவில் இப்படி செய்து குடுங்க. ரொம்ப சுலபமா...

நல்ல கிரிஸ்பியா டேஸ்டியான முறுக்கு வேணுன்னா வரகு மாவில் இப்படி செய்து குடுங்க. ரொம்ப சுலபமா ஆரோக்கியமான ஒரு ஈவினிங் ஸ்னாக்ஸ் ரெசிபி

- Advertisement -

தமிழர்களின் தின்பண்டங்களில் மிகவும் முக்கிய பங்கு வகிப்பது முறுக்கு. இந்த முறுக்கை நாம் அரிசி மாவில் செய்வதை தவிர்த்து விட்டு சிறுதானியத்தில் செய்தால் மிகவும் சத்தானதாக இருக்கும். அந்த வகையில் இன்று நாம் பார்க்கப்போவது வரகு முறுக்கு. வரகு அரிசியில் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இந்த நார்ச்சத்து கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. மேலும் அதனால் உடல் எடையும் குறையும். மலச்சிக்கல் வராமல் தடுக்க நார்ச்சத்து மிகவும் உதவுகிறது. இத்தகைய சத்துக்கள் மிகுந்த வரகு அரிசியில் முறுக்கு செய்து தந்து, நம் குடும்பத்தினரை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வோம்.

தேவையான பொருட்கள்

வரகு அரிசி மாவு – ஒரு கப், பொட்டுக்கடலை மாவு – 1/4 கப், மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன், எள் – 2 டீஸ்பூன், ஓமம் – ஒரு டீஸ்பூன், வெண்ணெய் – 2 டீஸ்பூன், பெருங்காயம் – ஒரு சிட்டிகை, எண்ணெய் – பொறிக்க தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

செய்முறை

முதலில் அடுப்பை பற்றவைத்து, அதில் ஒரு வாணலியை வைக்க வேண்டும். அந்த வாணலி சூடானதும் அதில் எள்ளு, ஓமம் போட்டு லேசாக வறுக்க வேண்டும். லேசாக வாசனை வந்தவுடன் அடுப்பை அணைத்து விட வேண்டும். இப்பொழுது ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்து, அதில் வரகு அரிசி மாவையும், பொட்டுக்கடலை மாவையும் போட்டு ஒன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு அதில் மிளகாய் தூள், வறுத்து வைத்திருக்கும் எள், ஓமம், பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். பிறகு அதில் வெண்ணையை சேர்த்து அனைத்து மாவிளும் படும்படி நன்றாக பிணைய வேண்டும். வெண்ணெய் நன்றாக மாவில் கலந்த பிறகு, அதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு பிணைய வேண்டும்.

- Advertisement -

பிணைந்த மாவை ஐந்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு அடுப்பில் வாணலியை வைத்து முறுக்கு பொறிக்க தேவையான அளவு எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்த பிறகு முறுக்கு அச்சில் மாவை சேர்த்து முறுக்கு பிழிய வேண்டும். பிழிந்த முறுக்கை எண்ணெயில் போட வேண்டும். ஒருபுறம் முறுக்கு சிவந்ததும் அதை திருப்பிப் போட்டு மறுபுறமும் சிவக்க விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: டிபனுக்கு ரொம்ப சீக்கிரத்துல சைடு டிஷ் செய்யணும்னா சட்டுன்னு இந்த கடப்பா கார சட்னி செய்யுங்க. இட்லி தோசைக்கெல்லாம் இது அட்டகாசமான சுவையில் இருக்கும்.

முறுக்கு சுடும் போது அதிக தீயில் வைக்கக்கூடாது, அப்படி வைத்தால் முறுக்கு கருகிவிடும். ஆதலால் மிதமான தீயில் முறுக்கை சுட வேண்டும். முறுக்கு சிவந்ததும் அதை எடுத்து எண்ணெய் வடிந்த பிறகு அனைவருக்கும் சாப்பிட கொடுக்கலாம். சுவையான, சத்தான வரகு முறுக்கு தயாராகி விட்டது.

சற்று முன்