- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்இந்த இரண்டு பொருள் இருந்தால் போதும் ஸ்வீட் கடை சுவையில் வீட்டிலேயே மொறுமொறு பக்கோடா செய்யலாம்

இந்த இரண்டு பொருள் இருந்தால் போதும் ஸ்வீட் கடை சுவையில் வீட்டிலேயே மொறுமொறு பக்கோடா செய்யலாம்

- Advertisement -

வீட்டில் செய்யும் உணவுகளை விட கடைகளுக்கு சென்று வாங்கி சாப்பிடும் உணவுகளின் மீது தான் குழந்தைகளுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும். அதிலும் வீட்டில் நாம் ஒரு முறை செய்த பலகாரத்தை ஒரு வாரத்திற்கு வைத்து குழந்தைகளுக்கு கொடுப்போம். அது அவர்களுக்கு சற்று சலிப்புத் தன்மையை உண்டாக்கி விடும். ஆனால் கடைகளுக்கு சென்றால் தினமும் புது புது வகையான உணவுப் பொருட்களை வாங்கி சுவைக்கலாம். எனவே தான் குழந்தைகள் கடைகளில் விற்கும் உணவுப் பண்டங்களின் மீது அதிக ஆர்வம் கொள்கின்றனர். அதுபோல இன்ஸ்டன்ட் உணவு வகைகளின் மீதும் இன்றைய தலைமுறையினருக்கு அதிக ஆர்வம் உண்டு. உடனே செய்து உடனே சாப்பிட வேண்டும். இப்படி ஆர்வமுள்ள அனைவரும் தினம் ஒரு சுவை வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி அனைவரும் விரும்பி சாப்பிடும் ஸ்வீட் ஸ்டாலில் தினமும் செய்யப்படும் பக்கோடாவை எப்படி வீட்டிலேயே அளவாக செய்து கொடுக்கலாம் என்பதைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:
கடலை மாவு – ஒரு கப், அரிசி மாவு – அரை கப், சின்ன வெங்காயம் – 10, பூண்டு – 7 பல், பச்சை மிளகாய் – 3, இஞ்சி சிறிய துண்டு – 2, சோம்பு – அரை ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், கறிவேப்பிலை – இரண்டு கொத்து, எண்ணெய் – கால் லிட்டர்.

- Advertisement -

செய்முறை:
முதலில் சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு பச்சை மிளகாயை மட்டும் பொடியாக நறுக்க வேண்டும். பின்னர் கால் ஸ்பூன் சோம்பு, ஒரு துண்டு இஞ்சி, இரண்டு பச்சை மிளகாயை சிறிய உரலில் வைத்து ஒன்றும் பாதியுமாக மசித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கடலை மாவு மற்றும் அரை கப் அரிசி மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் ஒரு ஸ்பூன் உப்பு, அரை ஸ்பூன் சோடா மாவு மற்றும் கால் ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து அனைத்தையும் ஒன்றாகக் கலந்து விட வேண்டும்.

- Advertisement -

பின்னர் இதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், அரை ஸ்பூன் சோம்பு மற்றும் பச்சை மிளகாயையும் சேர்க்கவேண்டும். அடுத்ததாக நசுக்கி வைத்துள்ள சோம்பு, பச்சைமிளகாய், பூண்டு கலவையையும் சேர்த்து அனைத்தையும் கிளறிவிட வேண்டும். பிறகு ஒரு கரண்டி எண்ணெயை அடுப்பில் வைத்து, சூடு செய்து, இந்த மாவுடன் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக கிளற வேண்டும்.

பின்னர் கொஞ்சம் தண்ணீர் எடுத்துக் கொண்டு, சிறிது சிறிதாக சேர்த்து கெட்டியான மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். இந்த மாவு கையினால் எடுத்து அமுத்தி விடும் அளவிற்கு உதிரி உதிரியாக இருக்க வேண்டும். பின்னர் அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்றாக காய்ந்ததும் இந்த மாவை கையில் எடுத்து, எண்ணெயில் கொஞ்சம் கொஞ்சமாக பிசைந்துவிட வேண்டும். சிறிது நேரத்தில் இவை அனைத்தும் நன்றாக பொரிந்து மொறு மொறு பக்கோடா ரெடியாகி விடும்.

சற்று முன்