அழுக்குப் பிடித்த சுவிட்ச் பாக்ஸ் நொடியில் சுத்தமாக இந்த 1 பொருள் போதுமே!

switch-box-remover
- Advertisement -

எப்போதும் நம் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு அறையையும் சுத்தமாக வைத்துக் கொண்டால் மிகவும் நல்லது. ஒரு சிலர் வாரம் ஒரு முறை என்றால், ஒரு சிலர் மாதம் ஒரு முறை சுத்தம் செய்வது உண்டு. இன்னும் சிலர் எப்போது தோன்றுகிறதோ, அப்போது மட்டுமே சுத்தம் செய்வார்கள், மற்றபடி வீடு குப்பையாகவே கிடக்கும். நம் மனதில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க, வீட்டில் இருக்கும் சுத்தமும் ஒரு காரணம் தான் என்கிறது சாஸ்திரம். அதனால் தான் என்னவோ சுத்தம் சோறு போடும் என்று கூறி வைத்தார்கள்.

switch-box

இப்படி வீட்டை சுத்தம் செய்யும் பொழுது நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் சுவிட்ச் பாக்ஸ். இந்த சுவிட்ச் பாக்ஸ் அழுக்கு படிந்து பார்ப்பதற்கு அசிங்கமாக காட்சி கொடுத்துக் கொண்டு இருந்தால் உடனே அந்த அழுக்கை சுத்தமாக நீக்கி விடுங்கள். வீட்டில் அடிக்கடி நம் கைகள் படும் இடம் ஸ்விட்ச் பாக்ஸ் தான். எனவே அதை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்த ஸ்விட்ச் பாக்ஸை எளிமையான முறையில் எப்படி நொடியில் சுத்தம் செய்து விடுவது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

- Advertisement -

வீட்டில் இருக்கும் சுவிட்ச் பாக்ஸ் சுத்தம் செய்ய நிறைய பொருட்கள் உண்டு. அதில் முக்கியமாக இந்த ஒரு பொருளை வைத்து சுத்தம் செய்யும் பொழுது மிக எளிதாக அழுக்குகள் எல்லாம் நொடியில் நீங்கும். அதை வினிகர் என்று கூறுவார்கள். சாதரணமாக சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும் இந்த வினிகர் விலை மிகவும் மலிவானது தான். சமையலுக்கு மற்றும் வீட்டை சுத்தம் செய்ய அதிக அளவில் வினிகர் பயன்படுத்தப்படுகிறது.

switch

இந்த வினிகரில் ஒரு டிஷ்யூ பேப்பர் அல்லது காட்டன் துணியை நனைத்துக் கொள்ளுங்கள். வைப்ஸ் எனப்படும் வெட் கிளாத் கொண்டும் இதே முறையில் ஸ்விட்ச் பாக்ஸை சுத்தம் செய்வது எளிதாக இருக்கும். வினிகரில் ஊறிய காட்டன் துணியை ஈரம் இல்லாமல் நன்கு பிழிந்து கொள்ள வேண்டும். லேசான ஈரப்பதம் இருந்தால் போதும். இதை வைத்து கொஞ்சம் அழுத்தம் கொடுத்து ஸ்விட்ச் பாக்ஸில் இருக்கும் அழுக்கைத் துடைத்து எடுத்தால் போதும், ரொம்ப ரொம்ப சுலபமாக அந்த அழுக்குகள் எல்லாம் நீங்கிவிடும்.

- Advertisement -

ஸ்விட்ச் பாக்ஸ் துடைக்கும் முன்பு உங்கள் மெயின் ஸ்விட்சை ஆப் செய்வது மிகவும் நல்லது. நீங்கள் சுத்தம் செய்யும் பொழுது கால்களுக்கு அடியில் மிதியடி ஒன்றை போட்டுக் கொள்ளுங்கள். உங்களுக்கு இன்னும் பயமில்லாமல் செய்ய வேண்டுமென்றால் ஒரு மரக் குச்சியில் துணியை சுற்றி அந்த துணியை வினிகரில் நனைத்து பின்னர் பிழிந்த பிறகு துடைத்து எடுங்கள். இது இன்னும் பாதுகாப்பானதாக இருக்கும். மேலும் நாம் நகத்திற்கு போடும் நெயில் பாலிஷ் ரிமூவர் பயன்படுத்தி கூட இந்த ஸ்விட்ச் பாக்ஸை ரொம்ப ரொம்ப சுலபமாக சுத்தம் செய்து விட முடியும்.

vinegar

ஸ்விட்ச் பாக்ஸை துடைக்கும் பொழுது அதன் உள்ளே இருக்கும் பகுதியில் ஈரம் படாதவாறு கவனத்துடன் கையாள்வது மிகவும் முக்கியம் என்பதையும் நினைவில் கொண்டு செயல்படுங்கள். மேலோட்டமாக இருக்கும் அழுக்கை மட்டும் துடைத்து எடுத்தால் போதும். சுத்தம் செய்கிறேன் என்று சுவிட்ச் பாக்ஸின் ஓட்டைக்குள் எல்லாம் கையை விட்டு துடைத்து விடாதீர்கள். கடினமான அழுக்குகள் இருந்தால் நீங்கள் பழைய டூத் பிரஷ் ஒன்றை பயன்படுத்தியும் இதே போல துடைத்து எடுக்கலாம். மாதம் ஒரு முறை இவ்வாறு செய்ய உங்கள் ஸ்விட்ச் பாக்ஸ் பளபளவென புதியது போலவே எப்பொழுதும் காட்சி தரும்.

- Advertisement -