- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசியாமளா நவராத்திரியில் செய்ய வேண்டிய தானம்

சியாமளா நவராத்திரியில் செய்ய வேண்டிய தானம்

- Advertisement -

ஜனவரி 30 ஆம் தேதி, துவங்கிய சியாமளா நவராத்திரி ஆனது பிப்ரவரி 7ஆம் தேதி வரை இருக்கிறது. இந்த ஒன்பது நாட்களும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மிக சிறப்பாக விசேஷ வழிபாட்டு முறைகள் நடைபெறும். இந்த சியாமளா நவராத்திரி வழிபாட்டில் நாமும் பலனடைய வேண்டும் என்றால், நம் வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று, நம்முடைய குடும்ப நன்மைக்காக எளிமையான முறையில் என்ன வழிபாட்டு முறைகளை மேற்கொள்ளலாம், எளிமையான சில ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டு முறைகள் இந்த பதிவில் உங்களுக்காக.

சியாமளா நவராத்திரியில் அம்மன் கோவிலில் செய்ய வேண்டிய தானம்

பின் சொல்லக்கூடிய பரிகார முறைகளை உங்களால் செய்ய முடிகிறதோ இல்லையோ, இந்த ஒன்பது நாட்களில் ஒரு முறை யாவது வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று விளக்க போட்டு, “சியாமளா தேவியே போற்றி போற்றி” என்ற மந்திரத்தை சொல்லி அந்த கோவிலில் இருக்கும் அம்பாளை மனமுருகி வழிபாடு செய்தாலே சிறந்த பலனை பெறலாம். இது முதல் விஷயம்.

- Advertisement -

இப்போது பார்க்க போகக்கூடிய பரிகாரம் குடும்ப சுபிட்சத்திற்காக. என்னுடைய கணவருக்கு வருமானம் இல்லை. பிள்ளைகளுக்கு திருமணம் நடக்கவில்லை, திருமணமான பிள்ளைக்கு குழந்தை பாக்கியம் இல்லை, எங்களுக்கு குழந்தைகள் இருக்கிறது. ஆனால் குழந்தைகள் படிப்பில் ஆர்வம் செலுத்தாமல் ரொம்பவும் மந்தமாக இருக்கிறார்கள். படிப்பிலோ அல்லது மற்ற வேலைகளிலோ சுறுசுறுப்பாக இல்லை, அல்லது எங்களுடைய பிள்ளைகளுடைய வாழ்க்கை பாதை தடம் மாறி போகிறது. இப்படி வீட்டில் பிரச்சனை மேல் பிரச்சனை இருப்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள்.

விரலி மஞ்சள் வாங்கிக் கொள்ளுங்கள். மல்லிகை கடையிலோ பூஜை பொருட்கள் விற்கும் கடையிலோ, இந்த விரலி மஞ்சள் இருக்கும். எண்ணிக்கை உங்களுடைய விருப்பம் தான். 11, 27, 51, 101 கூட வாங்கலாம். அந்த விரலி மஞ்சளை, மஞ்சள் நூலால் கட்டி, வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்பாளுக்கு கொண்டு போய் மாலையாக செலுத்த வேண்டும். இப்படி போட்ட மாலையை சிறிது நேரம் கழித்து, நீங்களே திரும்பவும் வாங்கிக் கொள்ளுங்கள். அந்த மஞ்சள் கிழங்குகளை எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து கோவிலுக்கு வரும் பெண்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும்.

- Advertisement -

வயதுக்கு வந்த பெண்கள், திருமணம் ஆன பெண்கள், எல்லா பெண்களுக்கும் இந்த மஞ்சளை நீங்கள் தானமாக கொடுக்கலாம். சில கோவில்களில் இப்படி தானம் செய்யும் போது கணவன்மார்கள் இல்லாத பெண்களும் வந்து இந்த மஞ்சளை கேட்பார்கள். அப்போது அவர்களுக்கு இதை தரமாட்டேன் என்று மறுக்க வேண்டாம். அவர்களுக்கும் இந்த மஞ்சளை கொடுக்கலாம். தவறு கிடையாது.

அவர்கள் அந்த மஞ்சளை வாங்கிக்கொண்டு போய் தன் வீட்டில் இருக்கும் மகளுக்கு, மருமகளுக்கு கொடுக்கத்தான் போகிறார்கள். ஆகவே கைம்பெண்களுடைய மனதை புண்படுத்த வேண்டாம்என்பதையும் இந்த இடத்தில் நாம் பதிவு செய்து கொள்கின்றோம். அவர்களுக்கு இந்த மஞ்சளை கொடுப்பதன் மூலம் நமக்கு எந்த பாதிப்பும் வந்து விடாது.

- Advertisement -

இந்த மஞ்சளில் இருந்து இரண்டு கிழங்கு மஞ்சள் மட்டும் உங்களுடைய தேவைக்காக நீங்கள் வீட்டிற்கு கொண்டு வந்து, அந்த மஞ்சளை இழைத்து முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும். திருமணமாகாத பெண்கள் இந்த மஞ்சளை பூசி கொண்டால், திருமணம் நடக்கும். கணவன் மனைவிக்குள் சண்டை இருந்தால் அந்த கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஏற்பட்டு குடும்பம் சுபிட்சம் பெறும். வீட்டில் சுப காரியத்தை இருந்தால், அந்த சுபகாரிய தடைகள் நீங்கும்.

உங்களுக்கு மட்டும் இந்த பரிகாரம் பலன் தராது. இந்த மஞ்சளை யாருக்கெல்லாம் நீங்கள் தானம் கொடுக்கிறீர்கள். அவர்களுடைய குடும்பத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் எல்லாம், இந்த மஞ்சள் கிழங்கு தீர்த்து வைக்கும். அப்பேர்ப்பட்ட சக்தி வாய்ந்த வழிபாடு இது.

இதையும் படிக்கலாமே: சியாமளா நவராத்திரி இரண்டாம் நாள் வழிபாடு

இந்த தை மாதம், அதிலும் இந்த சியாமளா நவராத்திரியில் இந்த பரிகாரத்தை கோவிலில் சென்று செய்ய முடியும் என்றால் செய்யுங்கள். சிறப்பான பலன் உண்டு. இந்த ஒன்பது நாட்களில் இந்த பரிகாரத்தை செய்ய முடியவில்லை என்றாலும் தை மாதம் முடிவதற்குள் ஏதாவது ஒரு நாள் வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்பாள் கோவிலில் இந்த வழிபாட்டை செய்து, மன நிறைவோடு இந்த மஞ்சள் தானத்தையும் செய்து விடுங்கள். உங்கள் குடும்பத்திற்கு நல்லதே நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்