- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசியாமளா நவராத்திரி இரண்டாம் நாள் வழிபாடு

சியாமளா நவராத்திரி இரண்டாம் நாள் வழிபாடு

- Advertisement -

நாம் ஒவ்வொருவரும் நமக்கு தெரிந்தும் தெரியாமலும் பலவிதங்களில் பலருக்கும் பல கஷ்டங்களை தந்து கொண்டுதான் இருக்கிறோம். தெரிந்து செய்வதன் மூலம் அதிக அளவில் பாவம் ஏற்படும். தெரியாமல் செய்தாலும் அதைவும் பாவ கணக்கில் தான் போய் சேரும் என்று கூறப்படுகிறது. அப்படி தெரியாமல் செய்யக்கூடிய பாவத்தை நீக்குவதற்கு ஒரு சில பரிகாரங்களும் வழிபாடுகளும் இருக்கின்றன. அந்த வகையில் சியாமளா நவராத்திரியின் இரண்டாம் நாள் நாம் வழிபாடு செய்வதன் மூலம் நாம் தெரியாமல் செய்த பாவங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது. அந்த வழிபாட்டை எப்படி செய்வது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சியாமளா நவராத்திரி இரண்டாம் நாள் வழிபாடு

சியாமளா நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் நாம் ஒவ்வொரு விதமான மந்திரங்களை கூறி வழிபாடு செய்வதன் மூலம் ஒவ்வொரு விதமான பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சியாமளா நவராத்திரி வழிபாட்டிற்கு அதிக அளவில் நமக்கு சிரமம் எதுவுமே இருக்காது. மிகவும் எளிமையான முறையில் இந்த வழிபாட்டை நம்மால் செய்து விட முடியும். அந்த வகையில் தெரியாமல் செய்த பாவத்தை போக்குவதற்குரிய வழிப்பாட்டு முறையைப் பற்றி இப்பொழுது தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

சியாமளா நவராத்திரியின் இரண்டாம் நாள் என்பது ஜனவரி மாதம் 31ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினத்தில் மாலை ஐந்து முப்பது மணிக்கு மேல் இந்த வழிபாட்டை நாம் செய்ய வேண்டும். கலசம் வைத்திருப்பவர்களாக இருந்தாலும் சரி அல்லது தாம்பாளம் வைத்திருப்பவர்களாக இருந்தாலும் சரி ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். பிறகு ஏதாவது ஒரு இனிப்பு பொருளை நெய்வேத்தியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

இவ்வாறு வைத்துவிட்டு கிழக்கு அல்லது வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு நாம் ஏற்று வைத்த அந்த தீபச்சுடர் ஒளியை பார்த்தவாறு சியாமளா தேவியை மனதார நினைத்துக் கொண்டு இந்த ஒரு மந்திரத்தை 108 முறை கூற வேண்டும். இவ்வாறு 108 முறை கூறும் பொழுது மரிக்கொழுந்து, துளசி போன்ற பச்சை நிறத்தில் இருக்கக்கூடிய மலர்கள் அல்லது இலைகளை வைத்து அம்பிகைக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

- Advertisement -

இப்படி செய்வதன் மூலம் நாம் தெரியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். நம்முடைய பாவ கணக்கும் குறையும் என்று கூறப்படுகிறது. மந்திரத்தை கூறி வழிபாடு செய்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம். நெய்வேத்தியமாக வைத்த இனிப்பு பொருளை வீட்டில் இருப்பவர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கலாம்.

மந்திரம்

“ஓம் க்லீம் சியாமளா தேவியே நமஹ”

இதையும் படிக்கலாமே:முயற்சிகள் வெற்றி பெற வெள்ளிக்கிழமை வாராகி வழிபாடு

இந்த எளிமையான மந்திரத்தை முழுமனதோடு சியாமளாதேவியை நினைத்து சியாமளா நவராத்திரியின் இரண்டாம் நாள் கூறுவதன் மூலம் நாம் தெரியாமல் செய்த பாவங்கள் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்