தையல் மிஷினை வீட்டில் இப்படி வைத்திருந்தால் கணவன் மனைவிக்குள் சண்டை வருமா? தையல் மிஷினை வீட்டில் முறையாக வைப்பது எப்படி?

tailor-machine
- Advertisement -

அந்தக் காலத்தில் கஷ்டப்பட்ட பெண்களுக்கு கை கொடுத்த தொழிலில் என்றால், அது இந்த தையல் தொழில்தான். இந்த காலத்திலும் கூடத்தான் நிறைய பெண்கள் வீட்டிலிருந்தபடியே தையல் தொழில் செய்து கைநிறைய பணம் சம்பாதிக்கிறார்கள். இப்படி நிறைய பேருக்கு வாழ்வாதாரத்தை கொடுக்கக்கூடிய, வருமானத்தை கொடுக்கக்கூடிய இந்த தையல் மிஷினை பற்றிய சில வாஸ்து குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். தையல் மெஷின் வீட்டில் இருக்கலாமா இருக்க கூடாதா, தையல் மிஷினை வீட்டில் வைப்பதன் மூலம் குடும்பத்திற்குள் ஏதேனும் பிரச்சனை வருமா. தையல் மிஷினை எந்த திசையில் வைத்து, எப்படி அமர்ந்து தைப்பது, தையல் மிஷின்னால் குடும்பத்திற்குள் பிரச்சனை வராமல் இருக்க என்னென்ன விஷயங்களை முறையாக கடைபிடிக்கலாம் என்பதை பற்றிய பல சுவாரசியமான தகவல்களை தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு. தையல் மெஷின் வைத்திருப்பவர்கள் ஒவ்வொருவரும் இந்த பதிவை இறுதிவரை படித்து பயன் பெறுங்கள்.

இன்றும் மூன்று வேலை சில குடும்பங்கள் வயிறார சாப்பிடுவதற்கு காரணமாக இருப்பது இந்த தையல் தொழில். இப்படி ஒரு குடும்பத்திற்கு வருமானத்தை தேடித் தரக்கூடிய தையல் மெஷின், அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு நிச்சயம் தெய்வம் தான். வீட்டில் தையல் மெஷின் வைத்து தொழில் செய்யலாம். அதில் எந்த ஒரு தவறு கிடையாது. தொழில் செய்யாமல், தங்களுடைய தேவைகளுக்காக மட்டும் வீட்டில் இருப்பவர்களுடைய துணிமணிகளை தைப்பதற்காக மட்டும் கூட தையல் மெஷினை வீட்டில் வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

தொழிலுக்காக வீட்டில் தையல் மிஷினை வைத்து வேலை செய்பவர்கள் நேரம் காலம் பார்க்காமல் தையல் மிஷினை பயன்படுத்தலாம். துணி தைக்கலாம். ஆனால் தொழில் செய்யாமல் வீட்டில் இருப்பவர்களுடைய உபயோகத்திற்காக மட்டுமே பயன்படுத்தக்கூடிய மெஷின் என்றால் அதற்கு சில நேரம் காலங்கள் பார்க்க வேண்டும். நீங்கள் தொழில் செய்யவில்லை உங்கள் வீட்டில் தையல் மெஷின் இருக்கிறது என்றால் அந்த தையல் மிஷினை விளக்கு வைத்த நேரத்திற்கு பின்பு பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. கிழிந்த துணிமணிகளை வெள்ளி செவ்வாய் கிழமைகளில் தைக்காமல் வேறு நாட்களில் தைத்துக் கொள்ளலாம்.

தையல் தொழில் என்றாலே ஊசியால் குத்துவது, கத்தரிக்கோளால் வெட்டுவது போன்ற வேலைகள் இருக்கும். இப்படிப்பட்ட விஷயங்களை வீட்டில் நாம் செய்யும் போது வீட்டில் சண்டை சச்சரவுகள் வருமோ என்ற சந்தேகம் சில பேருக்கு இருக்கிறது. இதைப் பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம். தையல் மிஷினை பயன்படுத்தக்கூடிய நேரம் போக மற்ற நேரங்களில் தையல் மிஷினை ஒரு மூடி போட்டோ அல்லது துணி போட்டு மூடி வைத்து விடுங்கள். திறந்தபடி வைக்காதீர்கள். இப்படி செய்யும் போது தையல் மிஷினின் மூலம் உங்களுடைய குடும்பத்தில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் குறையும்.

- Advertisement -

தையல் மெஷின் என்பது முழுமையாக இரும்பினால் செய்யப்பட்டுள்ள கனமான ஒரு எந்திரம். கூடுமானவரை இந்த பொருளை படுக்கை அறையில் வைக்கக்கூடாது. வாஸ்து ரீதியாக தையல் மெஷின் படுக்கை அறையில் இருந்தால் கணவன் மனைவிக்குள் பிரச்சனை வரும் என்ற ஒரு கருத்தும் இருக்கின்றது. வேறு வழியே இல்லை எங்களுடைய வீட்டில் வரவேற்பறை படுக்கையறை எல்லாம் ஒன்றுதான். அந்த இடத்தில் தான் தையல் மெஷின் இருக்கிறது என்றால் அந்த தையல் மிஷினை முழுமையாக ஒரு பெரிய போர்வையால் மூடி வைத்து விடுங்கள். பயன்படுத்தாத போது தையல் மிஷினை மூடி வைப்பதன் மூலம் குடும்பத்தில் பெரிய பிரச்சனைகள் வராது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

தையல் மெஷினை உங்களுடைய வசதிக்கு ஏற்ப உங்களுடைய வீட்டில் எந்த மூலையில் வைத்திருந்தாலும் சரி நீங்கள் கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து துணிகளை தைக்க வேண்டும். இப்படி செய்தால் தையல் தொழிலில் நிறைய லாபம் கிடைக்கும். நீங்கள் தையல் கடை வைத்திருந்தாலும் சரி உங்கள் கடை இருக்கக்கூடிய வசதிக்கு ஏற்ப தையல் மிஷினை மாற்றி வைத்துக் கொண்டு துணியை தைப்பவர் கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொள்ள வேண்டும்.

இவை எல்லாம் செய்தும் மனதிற்குள் ஏதோ ஒரு நெருடல் இருக்கிறது. இந்த தையல் மெஷின் இருப்பதால்தான் எங்கள் குடும்பத்தில் பிரச்சனை என்று நினைப்பவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் நீங்கள் கற்றுக் கொண்ட கைத்தொழிலை விடாதீங்க. தையல் மிஷினை வீட்டிலிருந்து வெளியே போடாதீங்க. தையல் மிஷினுக்கு பக்கத்தில் உள்ள சுவற்றில் விநாயகரின் திரு உருவப் படத்தை மாற்றி வைத்து விடுங்கள். எல்லா தோஷமும் நீங்கிவிடும். இதை கடைப்பிடித்து வந்தால் தையல் தொழிலில் நிச்சயமாக நல்ல லாபம் கிடைக்கும்‌. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பார்த்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -