உங்கள் முகத்தை தங்கம் போல பளபளப்பாக ஜொலிக்க வைக்க சமையலறையில் இருக்கும் இந்த 1 பொருள் போதும். குழம்பில் போடும் இந்தப் பொருளுக்கும், அழகிற்கும் அப்படி என்னதான் சம்பந்தம்.

face7

ஆமாங்க, குழம்பில் போடக்கூடிய சமையலறையில் இருக்கக்கூடிய புளியைப் பயன்படுத்தி தான் இன்று நாம் ஒரு அழகுக் குறிப்பை தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்களுக்கு புரியும்படி சொல்லப்போனால் வீட்டிலிருந்தபடியே இந்த லாக்டோன் சமயத்தில் கோல்டன் ஃபேஷியலை எப்படி செய்து கொள்வது. அதுவும் சுலபமான முறையில், செலவும் மிக மிகக் குறைவு. நீங்க மட்டும் ஒருவாட்டி இதை, உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. பிறகு பியூட்டி பார்லர் போய் ஃபேசியில் பண்ணிக்கவே மாட்டீங்க. பேசியல் செய்துகொள்ள மொத்தமாக 3 ஸ்டெப். கிளேன்சிங், ஸ்க்ரப்பிங், ஃபேஸ் பேக்.

face9

இந்த மூன்றுக்கும் நமக்கு தேவை படப்போகும் முழுமுதல் முக்கியமான பொருள் புளிக்கரைசல். கொஞ்சமாக புளியை தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து புளிக்கரைசலை மட்டும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த புளிக்கரைசல் ரொம்பவும் கட்டியாகவும் இருக்கக் கூடாது. ரொம்பவும் தண்ணீராகவும் இருக்கக் கூடாது. ரொம்பவும் பழைய கருப்பு புளியை பயன்படுத்த வேண்டாம். கொஞ்சம் பிரவுன் நிறத்தில் இருக்கும் புளியை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Step 1:
முதலில் முகத்தில் இருக்கும் அழுக்கை சுத்தமாக நீக்க வேண்டும். இதை தான் கிளன்சிங் என்று சொல்லுவார்கள். ஒரு சிறிய பவுல் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சமாக புளிக்கரைசல் ஊற்றிக் கொள்ள வேண்டும். 1 ஸ்பூன் அளவு புளிக்கரைசல் எடுத்துக் கொண்டால், 1 ஸ்பூன் தண்ணீரை கலந்து இந்த கலவையை காட்டன் பஞ்சில் தொட்டு முகத்தை நன்றாகத் துடைத்து எடுக்க வேண்டும். அதன் பின்பு ஐந்து நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுவி விடுங்கள். முகத்தில் இருக்கும் ஈரத்தையும் லேசாகத் துடைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

face10

Step 2:
அடுத்தபடியாக நம்முடைய முகத்தை ஸ்கரப் செய்ய போகின்றோம். இதற்கு உங்கள் வீட்டில் பிரவுன் கலரில் இருக்கும் நாட்டு சர்க்கரை, வெல்லப் பொடி எதை வேண்டுமென்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு சிறிய கிண்ணத்தில் 1 ஸ்பூன் நாட்டுச்சர்க்கரை, இதில் கொஞ்சமாக புளிக்கரைசலை சேர்த்து நன்றாக கரைத்து உங்கள் முகம் முழுவதும் பரவலாக அப்ளை செய்து கொள்ள வேண்டும். அதன் பின்பு உங்களது இரண்டு கைகளை முகத்தில் மெதுவாக வைத்து வட்ட வடிவில் ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்து, ஐந்து நிமிடங்கள் அப்படியே விட்டு விட்டு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள்.

- Advertisement -

Step 3:
இப்போது முகத்தில் ஃபேஸ் பேக் போட வேண்டும். ஒரு சிறிய பௌலில் 1 ஸ்பூன் பாதாம் பவுடர், 1/2 ஸ்பூன் சுத்தமான சந்தன பொடி(சந்தன கட்டையை இழைத்து அந்த விழுதை அரை ஸ்பூன் எடுத்துக் கொண்டாலும் நல்லது), 1 ஸ்பூன் தேன், கொஞ்சமாக புளிக்கரைசலை ஊற்றி, இந்த பொருட்களையெல்லாம் நன்றாக கலந்து உங்களுடைய முகத்தில் ஃபேஸ் பேக் போட்டு விட வேண்டும். இது 20 நிமிடங்கள் நன்றாக முகத்திலேயே உளர வேண்டும்.

face8

இறுதியாக முகம் நன்றாக உலர்ந்த பின்பு உங்களது கையில் புளிக்கரைசலை தொட்டு முகத்தை நனைத்து மீண்டும் இரண்டு நிமிடங்கள் மசாஜ் செய்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி பாருங்கள். உங்களுடைய முகம் தங்க நிறத்திற்கு மாறி இருப்பதை உங்களால் உணர முடியும்.

face11

வீட்டிலேயே பாதாமை ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்து விட்டு ஊறிய பாதாம் மேல் தோல் உரித்து, நிழலிலேயே உலர வைத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்தால் பாதாம் பொடி தயாராக இருக்கும். அப்படி இல்லை என்றால் தண்ணீர் ஊற்றி அரைத்து பாதாம் பேஸ்ட் ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளலாம். இந்த ஃபேஸ் பேக்கை உங்களுக்கு எப்போதெல்லாம் முகப்பொலிவு தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் வீட்டில் இருந்தபடியே செய்து கொள்ளலாம். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.