தமிழ் புத்தாண்டு ராசி பலன் 2018 – மகரம்

2018-rasi-palan-magaram

விளம்பி வருட தமிழ் புத்தாண்டு ராசி பலன் 2018 – மகரம்.
உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் சந்திரனும் புதனும் சேர்ந்திருக்கிற நேரத்தில் விளம்பி வருடம் பிறப்பதால், இந்த ஆண்டு உங்களுக்கு அமோகமாக அமையும். உங்களுக்கு பாக்கியாதிபதியாக இருக்கிற புதன் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் இருப்பதால், இந்த ஆண்டு பணவரவு சிறப்பாக இருக்கும்.

Magaram rasiஉங்கள் ராசிக்கு பிரபல யோகாதிபதியாக இருக்கிற சுக்கிரன் 4-ம் இடத்தில் இருப்பதால், சிலருக்கு வீடு மாறக்கூடிய வாய்ப்பு ஏற்படும். வேறு சிலர் சொந்தமாக வீடு வாங்கி கிரகப்பிரவேசம் செய்கிற வாய்ப்பும் ஏற்படும். ராசிக்கு 10-ம் வீட்டில் குரு இருப்பதால், சின்னச் சின்ன தொந்தரவுகள் இருந்துகொண்டுதான் இருக்கும். அதனால் வேலையில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

ஆனால், அக்டோபர் 4-ம் தேதியிலிருந்து குரு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால், திடீர் யோகம் உண்டாகும். இதுவரை இருந்து வந்த தடைகள் எல்லாம் விலகும். நீண்ட நாள் தள்ளிப்போன காரியங்கள் எல்லாம் எளிதாக முடியும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.

இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து பிப்ரவரி மாதம் 12-ம் தேதி வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேது நிற்பதால், எதிலும் சந்தேகம் வந்து நீங்கும். ராகு 7-ல் நிற்பதால், கணவன்-மனைவிக்குள் கசப்புஉணர்வு ஏற்படும். தேவையற்ற மனஸ்தாபத்தை ஏற்படுத்தும். அதனால் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது.

உங்களுடைய ராசிக்குள்ளேயே மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை செவ்வாயும் வந்து அமர்வதால், உடல்நலனில் கவனமாக இருக்க வேண்டும். வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருப்பது நல்லது.
அக்டோபர் 4-ம் தேதியிலிருந்து குருபகவான் உங்களுக்குச் சாதகமான இடத்துக்கு வருகிறார். அவருடைய அனுகிரகம் இருப்பதால் எல்லா விஷயங்களிலும் நீங்கள் சாதித்துக் காட்டுவீர்கள்.

astrology

- Advertisement -

உங்களின் ராசிநாதனான சனிபகவானைப் பொறுத்தவரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டி ஏழரைச்சனியாக இருப்பதால் எதிலும் கொஞ்சம் நிதானமான போக்கைக் கடைப்பிடிப்பது நல்லது. பெரிய முடிவுகள், வியாபாரத்தில் பெரிய முதலீடுகள் ஆகியவற்றை ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்யுங்கள். கூடுமானவரை அவற்றைத் தவிர்ப்பது நல்லது.

இந்த விளம்பி வருடத்தைப் பொறுத்தவரை கணவன், மனைவிக்குள் அவ்வப்போது கருத்துவேறுபாடுகள் வந்துபோகும். பிள்ளைகள் விஷயத்திலும் கொஞ்சம் நிதானமான போக்கைக் கடைப்பிடித்தீர்கள் என்றால், இந்த ஆண்டு மிகச்சிறப்பாகவே அமையும். குறிப்பாக, ஆகஸ்ட் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம்வரை சுக்கிரன் உங்களுக்குச் சாதகமாக இருப்பதால், பணவரவு நன்றாக இருக்கும். ஷேர் மார்க்கெட் போன்றவற்றில் திடீர் பணவரவு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

வியாபாரத்தைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக இருக்கும். வியாபாரம் பெருகும். விற்பனையில் நல்ல லாபம் கிடைக்கும். வேலையாட்களும் உங்கள் பங்குதாரர்களும் நீங்கள் விரும்பியபடி நடந்துகொள்வார்கள். புதிய பங்குதாரர்களை சேர்க்கும் வாய்ப்பும் இருக்கிறது.

ஏழரைச்சனி நடப்பதால், மாணவர்கள் மிகுந்த கவனத்துடன் படிப்பில் ஈடுபடுவது நல்லது. அக்டோபருக்குப் பிறகு நீங்கள் எழுதும் தேர்வுகளில் உங்களுக்கு சிறப்பான வெற்றி கிடைக்கும்.

பெண்கள் தங்களின் உடல்நலனில் கவனம் செலுத்துவது நல்லது. மற்றபடி பெண்களுக்கு இந்த ஆண்டு எல்லா வகையிலும் சிறப்புமிக்க ஆண்டாக அமையும்.

astrology

உத்தியோகத்தில் அலட்சியத்துடன் செயல்படவேண்டாம். குறிப்பாக அக்டோபர் 4-ம் தேதி வரை மிகவும் கவனமாகச் செயல்படுவது நல்லது. மேலதிகாரிகளிடம் கனிவான போக்கைக் கடைப்பிடிப்பதுடன் சக ஊழியர்களையும் அனுசரித்துச் செல்வது நல்லது. அக்டோபருக்குப் பிறகு புதுப் பொறுப்புகளும் பெரிய பதவியும் தேடி வரும்.

கலைத்துறையினரைப் பொறுத்தவரை இந்த ஆண்டு சீரும் சிறப்புமாக இருக்கும். ஆகஸ்ட் மாதத்திலிருந்து சுக்கிரன் சாதகமாக இருப்பதால் புதிய பட வாய்ப்புகள் கிடைப்பதுடன் புதிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும். பலர் இந்த ஆண்டு வாழ்க்கையைத் தொலைநோக்குடன் நல்ல முறையில் அமைத்துக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

விவசாயிகளைப் பொறுத்தவரை இந்த ஆண்டு மகசூல் அபரிமிதமாக இருக்கும். ஆனாலும், எலித்தொல்லை, பூச்சித்தொல்லை அதிகமாக இருக்கும். அவற்றைக் கட்டுப்படுத்தப் பார்க்கவும். ஏழரைச்சனி நடப்பதால், பக்கத்து வயல்காரர்களிடம் சண்டை, சச்சரவு வைத்துக்கொள்ளவேண்டாம்.
மொத்தத்தில் இந்த விளம்பி வருடம், சின்னச்சின்ன சங்கடங்களைச் சமாளிக்க வைத்து, பெரிய வெற்றியைத் தரும் ஆண்டாக அமையும்.

பரிகாரம்:
மதுரை, எழுத்தாணிக்கார தெருவில் அருள்பாலிக்கும் ஸ்ரீகனகவல்லி தாயாரையும், ஸ்ரீவீரராகவ பெருமாளையும் ஏகாதசி நாளில் சென்று வழிபட்டு வாருங்கள்; ஆனந்தம் பெருகும்.

மற்ற ராசிகளுக்கான தமிழ் புத்தாண்டு பலன்களை அறிய இங்கு கிளிக் செய்யவும்.

மகரம் ராசி பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கு கிளிக் செய்யுங்கள்

English Overview:
Magara rasi Tamil new year rasi palan is given above in Tamil language. This astrological prediction will help magara rasi people a lot up to April 13 2019. In Tamil this prediction is called as Tamil puthandu palangal 2018 for Magaram