தமிழ் புத்தாண்டு ராசி பலன் 2018 – மீனம்

2018-rasi-palan-meenam

விளம்பி வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018 மீனம்:
ங்கள் ராசியிலேயே விளம்பி வருடம் பிறப்பதால், உடல்நலத்தில் கவனமாக இருப்பது நல்லது. அவசர முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம். உங்கள் ராசிநாதன் குரு பகவான், அக்டோபர் 4-ம் தேதிவரை அஷ்டம ஸ்தானத்தில் மறைவதால், எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்.

Meenam Rasi

ஆனால்,  அக்டோபர் 4-ம் தேதி முதல்  உங்களின் பாக்கியஸ்தானமான 9-ம் வீட்டில் குரு அமர்வதால், இடையூறுகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள். திடீர் ராஜயோகம் உண்டு. கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். எங்கு போனாலும் உங்களுக்கு மரியாதையும் கௌரவமும் தேடி வரும். பெரிய சொத்து வாங்கும் யோகமும் உண்டாகும்.

உங்கள் ராசிக்கு தன, பாக்கியாதிபதியான செவ்வாய் பகவான், வரும் 30-ம் தேதி முதல்  உங்கள் ராசிக்கு 11-ம் இடமான லாப வீட்டில் நிற்பதால், நிர்வாகத் திறன் அதிகரிக்கும்.  குரு பகவான் 8-ம் வீட்டில் மறைந்ததால் ஏற்படும் பாதிப்பை செவ்வாய் ஈடுகட்டும். எதிர்பாராத பணவரவு உண்டு. பிரிந்துபோன சகோதர சகோதரிகள் ஒன்று கூடுவார்கள். அண்ணன் – தம்பி, அக்காள் – தங்கை எனக் குடும்ப உறவுகளிடையே பாசமழை பொழியும். பிள்ளைகளின் திருமணம் சிறப்பாக நடைபெறும்.

உங்களுடைய ராசிக்கு 3-ம் வீட்டுக்கும் 8-ம் வீட்டுக்கும் உரிய சுக்கிரன் ஆகஸ்ட் மாதம் 8-ம் வீட்டில் மறைந்துவிடுகிறார். உங்கள் ராசிநாதன் குருவுக்கு எதிரியான சுக்கிரன் 8-ம் வீட்டில் மறைந்து போவதும் நல்லதுதான். திடீர் பணவரவு உண்டு. ஷேர் மூலம் பணம் வரும். வெளிநாடு செல்கிற வாய்ப்பும் சிலருக்குக் கிடைக்கும். நீண்ட நாள்களாகத் தள்ளிப்போய்கொண்டிருந்த திருமணம் கூடி வரும்.
இந்த ஆண்டு முழுவதும் சனிபகவான் 10-ம் வீட்டிலேயே அமர்வதால், எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். புதிய பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். எந்தப் போட்டியிலும் நீங்கள் துணிந்து பங்கேற்று, விடாமுயற்சியுடன் செயல்பட்டு வெற்றிபெறுவீர்கள்.

ராகு, கேதுவைப் பொறுத்தவரை பிப்ரவரி மாதம் 12-ம் தேதி வரை உங்கள் ராசிக்கு லாபஸ்தானமான 11-ம் வீட்டில் கேது நிற்பதால், ஷேர் மார்க்கெட் மூலம் பணம் வரும். ஆனால், 5-ல் நிற்கும் ராகுவால், குழந்தைகளால் சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் வந்து போகும். இதனால், மன அமைதியின்மை, டென்ஷன் ஏற்படும். பூர்வீகச் சொத்தில் மராமத்துப் பணிகள் இருந்துகொண்டே இருக்கும்.

- Advertisement -

astrology

மாணவ மாணவிகளைப் பொறுத்தவரை இந்த ஆண்டு அதிகமாகப் படித்து, அதிக மதிப்பெண்கள் பெறும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள், பதக்கங்கள் பெறும் வாய்ப்புகளும் இருக்கின்றன. பொதுத்தேர்விலும் அதிகமான மதிப்பெண்கள் பெறுவீர்கள்.

பெண்களைப் பொறுத்தவரை குடும்ப நிர்வாகம் செய்பவர்களாக இருந்தாலும் சரி, வேலைக்குச் செல்லும் பெண்களாக இருந்தாலும் சரி இந்த ஆண்டு மிகவும் யோகமாக அமைந்துள்ளது.

வியாபாரத்தைப் பொறுத்தவரை மிகவும் அற்புதமான ஆண்டு இது. தொட்டதெல்லாம் துலங்கும். புதிய பங்குதாரர்கள், புதிய பணியாளர்கள் ஆகியோருடன் இணைந்து பணியாற்றி வெற்றிகளைக் குவிப்பீர்கள். புதிய கிளைகள் தொடங்குவீர்கள். வாடகை இடத்திலிருந்து சொந்த இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள்.

உத்தியோகத்தைப் பொறுத்தவரை சனிபகவான் 10-ம் இடத்தில் இருப்பதால், புதிய பொறுப்புகள், பதவிகள் தேடிவரும். பணிச்சுமை அதிகரிக்கும். அதேசமயம், அதற்கு உரிய பலன்களும் நல்லவிதமாக உங்களுக்குக் கிடைக்கும். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு தடையின்றி கிடைக்கும். இழந்த உரிமையை மீண்டும் பெறுவீர்கள்.

astrology

கலைத்துறையினரைப் பொறுத்தவரை இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக இருக்கிறது. ஒரே சமயத்தில் இரண்டு மூன்று படங்கள் ஹிட்டாக வாய்ப்பு உள்ளது. சின்னத்திரைக் கலைஞர்களுக்கும் இந்த ஆண்டு சிறப்பாகவே இருக்கிறது. சம்பள பாக்கிகள் வந்து சேரும். விவசாயிகள் இந்த ஆண்டு புதுவிதமான நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வெற்றி பெறுவார்கள். மகசூலும் அவர்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக இருக்கும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு உங்களை வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்வதுடன், வசதி வாய்ப்புகளையும் வாரி வழங்குவதாக அமையும்.

பரிகாரம் :
தேனி மாவட்டம், சுருளிமலை எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீசுருளிவேலப்பரை, செவ்வாய்க்கிழமைகளில் சென்று வணங்கி வந்தால், நிம்மதியும் வெற்றியும் அதிகரிக்கும்.

மற்ற ராசிகளுக்கான தமிழ் புத்தாண்டு பலன்களை அறிய இங்கு கிளிக் செய்யவும்.

மீன ராசி பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கு கிளிக் செய்யுங்கள்

English Overview:
Here we have given the exact Tamil new year astrological prediction for Meena rasi. In Tamil it is being called as Tamil puthandu rasi palan 2018 Meenam. This will help Meena rasi people for this entire Vilambi year to plan their life.