செல்வம் பெருக தமிழ் புத்தாண்டு கனி காணுதல் முறை

kani kanuthal murugar
- Advertisement -

தமிழ் மாதங்களில் சித்திரை 1 தமிழ் வருடப் பிறப்பாக கருதப்படுகிறது. அந்த வகையில் இந்த சித்திரை 1 ஆம் தேதி (14.4.24) குரோதி தமிழ் வருடம் துவங்குகிறது. தமிழ் வருடப் பிறப்பின் முதல் நாளில் கனி காணுதல் என்னும் முறை நம்முடைய பழக்கத்தில் உள்ளது. இந்த வருடம் கனி காணுதல் இந்த மூன்று பொருட்கள் கட்டாயமாக வைக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது என்னவென்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

செல்வம் பெருக குரோதி தமிழ் வருட பிறப்பில் செய்ய வேண்டியது

இந்தக் குரோதி தமிழ் வருடப்பிறப்பு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த வருடப்பிறப்பின் போது சூரிய பகவான் குருபகவானுடன் சேர்ந்து ஒரே ராசியில் பயணம் செய்ய போகிறார். இது 12 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் நிகழ்வதாக சொல்லப்படுகிறது. இது அனைத்து ராசிகளுக்கும் யோகத்தை தருவதாக அமைகிறது.

- Advertisement -

அது மட்டும் இன்றி இந்த தமிழ் வருட பிறப்பானது முருகருக்கு மிகவும் உகந்த சஷ்டி திதியில் பிறக்கிறது இது மேலும் பல விசேஷ பலன்களை தரக்கூடியதாக அமைந்துள்ளது. இத்தனை சிறப்பம்சங்கள் பொருந்திய இந்த சஷ்டி திதியில் நாம் இந்த முறையில் கனி காணுதல் முறை கடைப்பிடித்தால் இந்த ஆண்டு முழுவதும் செல்வ செழிப்புடன் வாழலாம் என்று சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு சித்திரை முதல் நாள் கனி காணுதல் என்னும் முறை வழக்கத்தில் உள்ளது.அதற்கு முதல் நாளே அதாவது சனிக்கிழமை அன்றே நம் வீடு பூஜை அறை படங்கள் அனைத்தையும் சுத்தம் செய்த பிறகு இரவு உறங்குவதற்கு முன்பாக ஒரு தாம்பாலத்தில் முக்கனிகளான மா,பலா, வாழை தவிர வேறு என்ன பழங்கள் உங்களுக்கு கிடைத்தாலும் அதையும் வாங்கி வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

இத்துடன் மஞ்சள், குங்குமம் போன்ற மங்களப் பொருட்கள் வைக்க வேண்டும். மேலும் வாசனை மிக்க மலர்கள் இனிப்பு வகைகள் வைக்க வேண்டும். வசதி வாய்ப்பு உள்ளவர்கள் அதில் தங்கம் வெள்ளி நாணயங்களை பணக்கட்டுகளை வைப்பார்கள். முடியாதவர்கள் ரூபாய் நோட்டு அல்லது தாங்கள் அணிந்திருக்கும் சிறிய தங்க நகை போன்றவற்றை கூட தாம்பாலத்தில் வைத்து விட்டு அதை ஒரு கண்ணாடியின் முன்னால் வைக்க வேண்டும்.

நம் தட்டில் வைத்திருக்கும் பொருட்கள் அனைத்தும் அந்த கண்ணாடியில் தெரிய வேண்டும் அதுபோல வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் சித்திரை ஒன்றாம் தேதி காலையில் கண் விழித்தவுடன் முதலில் இந்த பொருட்களை எல்லாம் பார்க்க வேண்டும் இது தான் கனி காணுதல். இதை பூஜை அறை வரவேற்பறை என எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். அப்படி வைக்கக் கூடிய இந்த கண்காணுதலில் மூன்று பொருட்களை கட்டாயமாக வைக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

அதில் முதலாவதாக கல் உப்பு இது மகாலட்சுமி தாயாரின் அம்சமாகவே கருதப்படுகிறது அடுத்து எண்ணெய், நெய், தயிர் பன்னீர் போன்ற ஏதாவது ஒன்றை வைக்க வேண்டும். இத்துடன் நவதானியங்கள் வைக்க வேண்டும். நவதானியங்கள் கிடைக்க வில்லை என்றால் ஞாயிற்றுக்கிழமையில் இந்த வருட பிறப்பு பிறப்பதால் சூரிய பகவானுக்கு உகந்த நாளாக இருக்கும் பட்சத்தில் கோதுமை தானியத்தை மட்டுமாவது வாங்கி வைக்கலாம். இது கனிக் காணும் வழக்கத்தை பின்பற்றுவார்கள் இந்த முறையில் இதை செய்யலாம்.

ஒரு வேளை எங்களுக்கு இந்த பழக்கம் கிடையாது என்பவர்கள் வருட பிறப்பன்று பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு மேற் சொன்ன மூன்று பொருட்களான உப்பு, பாலினால் செய்த பொருள் நவதானியம் அல்லது கோதுமை இவைகளை பூஜை அறையில் வைத்து இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். இந்த முறை உங்களுடைய வாழ்க்கை வளமானதாக மாற்றுவதோடு செல்வ செழிப்பாக வாழ்வதற்கான வழி ஏற்படுத்திக் கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: பணத்தடை நீங்க சனிக்கிழமையில் செய்ய வேண்டிய பரிகாரங்கள்

தமிழ் வருட பிறப்பு அன்று காலையில் நம் கண் விழித்ததும் பார்க்கக் கூடிய முதல் பொருள்களே இத்தனை மங்கள கரங்கள் நிறைந்ததாக இருக்கும் பொழுது, அந்த வருடம் முழுவதும் அப்படியே அமையும் என்பது தான் ஐதீகம். இந்த வழிபாடு முறையில் நம்பிக்கை இருப்பின் இந்த முறையில் செய்து செல்வச் செழிப்புடன் வாடும் வழி தேடி கொள்ளுங்கள்.

- Advertisement -