- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதமிழ் புத்தாண்டு வேல் வழிபாடு.

தமிழ் புத்தாண்டு வேல் வழிபாடு.

- Advertisement -

வேலவனை வழிபாடு செய்பவர்களுக்கு வீழ்ச்சி கிடையாது. வேல் வழிபாடு செய்பவர்களுக்கு, வெற்றி மேல் வெற்றி வந்து குவியும். இது நாம் எல்லோருக்கும் தெரியும். நாளைய தினம் தமிழ் புத்தாண்டு பிறக்கவிருக்கிறது. இந்த நாளில் முருகப்பெருமானது வேல் வழிபாட்டை சிறப்பாக எப்படி செய்வது. நாளைய தினம் வேல்முன்பு சொல்ல வேண்டிய மந்திரம் என்ன. ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

நாளைய தினம் வீட்டில் வேல் வைத்து வழிபாடு செய்பவர்கள் எல்லோருக்கும், பலன் கொடுக்கும்படி இந்த வழிபாட்டு முறை அமையும். உங்களுடைய வீட்டில் வேல் இல்லை என்றால், உங்கள் வசதிக்கு ஏற்ப தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை எதில் வேண்டுமென்றாலும் வேல் வாங்கி வைத்து வழிபாடு செய்யலாம். நாளைய தினம் புது வேல் வாங்குவது உங்கள் வீட்டிற்கு அபரிவிதமான நற்பலன்களை கொடுக்கும்.

- Advertisement -

நாளைய தினம் வேலுக்கு விபூதியால் அபிஷேகம் செய்ய வேண்டும். அபிஷேகம் செய்த விபூதியை சேகரித்து ஒரு டப்பாவில் போட்டு வையுங்கள். என்ன செய்வது என்று இறுதியில் பார்க்கலாம். வேலைக்கு விபூதி அபிஷேகம் செய்து மீண்டும் நல்ல தண்ணீரால் அபிஷேகம் செய்து, சந்தன குங்கும பொட்டு வைத்து, பூக்களால் அலங்காரம் செய்து, பூஜை அறையில் வைத்து, உங்களுக்கு முடிந்த நெய்வேத்தியம் வைத்து, விளக்கு ஏற்றி வழிபாட்டை துவங்கவும்.

முருகனுக்கு உகந்த பாடல்களை ஒலிக்க விடுங்கள். முடிந்தால் உங்கள் வாயால் முருகனது பாடல்களை பாடி தீப தூப ஆராதனை காண்பித்து, வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள வேண்டும். கிண்ணத்தில் போட்டு வைத்திருக்கும் விபூதியை பூஜை அறையிலேயே வேலுக்கு பக்கத்தில் வையுங்கள். இந்த வருடம் முழுவதும் இந்த விபூதியை, தினமும் நெற்றியில் இட்டு வர இது உங்களுக்கு வெற்றி திலகமாக இருக்கும். இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு இந்த வீபூதி பாதுகாப்பு கவசமாகவும் இருக்கும். சரி இந்த வேல் பூஜையின் போது நாம் படிக்க வேண்டிய மந்திரம் என்ன.

- Advertisement -

வேல் மந்திரம்

வெற்றி வேல் வீர வேல்
சுற்றி வந்த பகைவர் தம்மை
தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல்
ஞான சக்தி வேல்

ஆதி சக்தி அன்னை தந்த ஞான வேல்
அசுரர் தம்மை அஞ்ச வைத்த வீர வேல்
மூவர் தேவர் வாழ்த்த வந்த வெற்றி வேல்
தெய்வ பக்தி உள்ளவர்க்கு கை கொடுக்கும் வீர வேல்

இதையும் படிக்கலாமே: தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2025. 12 ராசிக்காரர்களுக்கும் துல்லியமான கணிப்பு !

இதுதாங்க, அந்த பாடல் வரிகள். இது நம்மில் எல்லோருக்கும் தெரிந்த பாடல் வரிகளாக இருக்கலாம். தமிழ் புத்தாண்டில் இந்த பாடலை படிக்க ஒரு பாக்கியம் வேண்டும். முருகனின் அருளால் அந்த ஆசீர்வாதம் உங்களுக்கு இன்று கிடைத்துவிட்டது. நாளைய தினம் தவறாமல் இந்த பாடலை படியுங்கள். வேல் பூஜை செய்யுங்கள். நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்