உங்க வீட்டு சமையல் அறையில் இருக்க வேண்டிய முக்கியமான இந்த பொருட்களை எல்லாம், பரண் மேல் தூக்கிப் போட்டு வைத்திருக்கிறீர்களா? செக் பண்ணி பாருங்க! இது பெரிய தவறு.

kitchen-stool-wood

நம் வீட்டு சமையலறையில் முதலிடம் கொடுக்கப்பட்டு வைக்க வேண்டிய சில பொருட்களையெல்லாம் உங்கள் வீட்டு பரண்மேல், அதாவது ஸ்லாபின் மேல் தேவையில்லாத பொருட்களாக, மூட்டையில் கட்டி போடுவது மிகப்பெரிய தவறு. அப்படி நம் வீட்டில் அதிர்ஷ்டத்தை தரக்கூடிய, நம் எல்லோராலும் மதிக்கப்பட வேண்டிய, அந்த பொருட்களை எல்லாம் உங்க வீட்ல எப்படி வச்சிருக்கீங்க என்று பார்க்கலாம்? மகாலட்சுமியின் அம்சமாக சொல்லப்படும் இந்த பொருட்களுக்கெல்லாம் உங்கள் வீட்டில் என்ன மரியாதை கொடுக்கப்படுகிறது! என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். ஒருவேளை, இந்த பொருட்களெல்லாம் உங்கள் வீட்டில் இருந்து உபயோகப்படுத்தாமல், பரண் மேல் வைத்து இருந்தால் தயவு செய்து, அவைகளையெல்லாம் எடுத்து பயன்படுத்துவது தான் நல்லது.

arisi-alavai

ஒருவருடைய சமயலறையில் கட்டாயம் இருக்க வேண்டிய பொருட்களில் முதலில், படி, அரைப்படி, ஆழாக்கு, என்று சொல்லப்படும் அளப்பதற்காக பயன்படுத்தக்கூடிய இந்தப் பொருட்கள், பெரும்பாலும் எல்லோரது வீட்டிலும் இருக்கும். ஆனால் இதை எடுத்து பரண் மேல் போட்டு வைத்துவிட்டு, பிளாஸ்டிக் டம்லரை பயன்படுத்துவார்கள். இது மிகப்பெரிய தவறு. இந்த பொருட்களெல்லாம் வீட்டில் இல்லை என்றால் கூட பரவாயில்லை, இருந்தும் அதை பயன்படுத்தாமல், பரண் மேல் போட்டு வைப்பது மிகப்பெரிய தவறு.

என்ன தான் நம் வீட்டில் சேர், டேபிள், சோபா என்று, அமர்வதற்காக பல பொருட்கள் இருந்தாலும், மரத்தாலான மரப்பலகையில் அமர்ந்து பழகுங்கள். இது, மிகவும் நல்லதொரு பழக்கம். மரப்பலகையில், தரையில் அமர்ந்து பாருங்கள் நிச்சயம் அது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. உங்க வீட்ல இருக்க மரப்பலகை எல்லாம் இப்போ பரண் மேல தான் இருக்கு. கீழே இறக்கி பயன்படுத்தி பாருங்கள். பூமாதேவியும் நம்மை ஆசீர்வதிப்பார்கள்.

muram

மூங்கிலை பயன்படுத்தி செய்யப்பட்ட முறங்கள். பொதுவாக ஒரு வீட்டில் முறம் ஒற்றையில் இருக்கக்கூடாது. அதாவது, இரண்டு முறங்களாகத்தான் வாங்க வேண்டும். இரண்டு முறங்கள் தான் பயன்படுத்த வேண்டும். இது ஒரு சாஸ்திரம். தயவுசெய்து ஒரு மரத்தை யாரும் வாங்காதீங்க! ஒருவேளை இரண்டு முறங்கள் வாங்கி, அதை தனித்தனியாக பிரித்து இருவர் எடுத்துக்கொள்ளாதீர்கள். ஒரு முறம் இருந்தால் போதும் என்று, இரண்டு முறைங்களை தனித்தனியாக பிரிக்க கூடாது.

- Advertisement -

இப்போதெல்லாம் பிளாஸ்டிக் முறம் வந்துவிட்டது. உங்களுடைய வீட்டில் பழைய முறங்கள் இருந்தால், அதை பரண்மேல் பயன்படுத்தாமல் போட்டு வைத்திருக்கிறார்கள் என்றால், மகாலட்சுமி வாசம் செய்யும் முறத்தை அப்படி போட்டு வைப்பது மிகப்பெரிய தவறு. முறத்திற்கு வெந்தயம், காகிதம் இவைகளை ஊறவைத்து, அரைத்து மெழுகி வீட்டில் பயன்படுத்த வேண்டும் என்று சொல்கிறது சாஸ்திரம். பிளாஸ்டிக் முறத்தை விட, சிறந்தது மூங்கிலால் செய்யப்பட்ட முறம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

salladai

அடுத்ததாக சல்லடை. அரிசியை சலிக்கும் சல்லடை, மாவு சலிக்கும் சல்லடை என்று நம் பாட்டிமார்கள் வைத்திருப்பார்கள். இன்று அந்த சல்லடை எல்லாம் காணாமல் போய் விட்டது. என்ன செய்வது? நவநாகரீக காலத்தில் எதையும் சுத்தப்படுத்துவதற்கு நாம் மறந்து விட்டோம். மனதையும் சேர்த்து தான்!

இப்போது சூப்பர் மார்க்கெட்டில் இருந்து கிடைக்கப்படும் பொருட்கள் எல்லாம், சுத்தமாக தான் கிடைக்கின்றது. எதற்காக சல்லடைகள்? என்ற கேள்வி சில பேர் மனதில் எழலாம்! இருந்தாலும், கெட்டதை நீக்கக்கூடிய தன்மையை, கொண்ட இந்த பொருட்கள் எல்லாம் நமக்கு ஒரு நல்ல பாடத்தை தினந்தோறும் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கும். முறம், சல்லடை இவைகள் எல்லாம் எப்படி தானியங்களிலிருந்து, தூசிகளை வெளியே தள்ளுகிறதோ, இதேபோல் தான் நம்முடைய மனதில் இருக்கும் அழுக்குகளை எல்லாம் கீழே வெளியே தள்ளிவிட வேண்டும் என்பதை வலியுறுத்த, நம்முடைய முன்னோர்கள் இவைகளை வீட்டின் வைத்து முன்னுரிமை கொடுத்து, பயன்படுத்தி வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

rice

இந்த பொருட்களை எல்லாம் நாம் தினம்தோறும் சமயலறையில் பார்க்கும்போது இதனுடைய குணநலம் நமக்கு தெரியவரும். இவைகளுடைய குணநலன்களை தினம்தோறும் நெனச்சிக்கணும். ‘இந்தப் பொருட்களைப் போல் நம்முடைய மனம் மாற வேண்டும்’ என்பதை புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு மறைமுகமான கருத்தும் இதில் அடங்கியுள்ளது. உங்கள் வீட்டில் இந்த பொருட்களெல்லாம் பரண் மேல் வைத்திருந்தால், தயவுசெய்து எடுத்து புதுப்பித்து உங்கள் வீட்டு அரிசி மூட்டையின் மீதோ அல்லது கண்களுக்கு தெரியும் படியும் வைத்து பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
மஞ்சளாய் மாறிப்போன ஃபோன் கவரை, பழையபடி வெள்ளையாய் மாற்ற இப்படி செய்தால் போதும்!

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Veetu sasthiram. Samayal things in Tamil. Tamil sastram. Muram uses. Salladai in Tamil. Shastra tips. Sasthiram Tamil.