பாக்கிஸ்தான் ராணுவத்தை கதிகளங்க வைத்த எல்லை கோவில் பற்றி தெரியுமா ?

amman-1

நம்பினோர் கெடுவதில்லை இது நம் நான்கு வேதங்களும் ஏற்றுக்கொண்ட முடிவாகும். மனிதர்கள் அனைவருக்கும் சமமாகத் தான் நிலம் நீர் முதலிய பஞ்சபூதங்களையும் இயற்கை அன்னை கொடுத்திருக்கிறாள். ஆனால் மனிதர்கள் இன மத ரீதியாகப் பிரிந்து மண்ணின் மீதுக் கொண்ட பேராசைக் காரணமாக மற்றவர்களுக்குரிய நிலப் பகுதியையும் அபகரிக்க முயல்கிறான். அப்படியான அவனின் முயற்சி சிறு சண்டையாக ஆரம்பித்து நாடுகளுக்கிடையேயான பெறும் போராக மாறிவிடுகிறது. எப்படிப்பட்ட போரிலும் அதிகளவு உயிரிழப்பது சாமானிய மக்கள் தான். அப்படி தன்னை வழிபட்ட மக்களைப் போரின் ஆபத்துகளிலுருந்து காப்பாற்றிய தனோத் மாதவைப் பற்றி இங்கு காண்போம்.

tanot mata temple

1965 ஆம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே போர் மூண்டது. இதனால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட இருப்பதை உணர்ந்த இப்பகுதி மக்கள் தனோத் மாதா ஆலயம் வந்து தங்களின் உயிரைக் காக்குமாறு வேண்டினர். அன்றிரவு இவ்வூரிலுள்ள சிலரின் கனவுகளில் தோன்றிய தனோத் மாதா மக்கள் அனைவரும் தன் கோவிலுக்கருகே வந்து தங்கினால் அவர்களின் உயிரை தான் காப்பதாக கூறியதாக அவர்கள் கூற மக்கள் அக்கோவிலுக்கருகேயே குடிபெயர்ந்தார்கள்.

அப்போது இப்பகுதியை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக குண்டுகளைத் தொடர்ந்து வீசியது. இப்படி 3000 குண்டுகள் வீசியும் ஒன்று கூட வெடிக்காதது அவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. சில நாட்களில் பாகிஸ்தான் அப்போரில் இந்தியாவிடம் தோற்றது. இதற்காக இவ்வூர் மக்கள் தனோத் மாதாவிற்கு விழா எடுத்துக் கொண்டாடினர். அந்த வெடிக்காத குண்டுகளை இன்றும் இக்கோவிலின் அருங்காட்சியத்தில் பார்வைக்காக வைத்துள்ளனர்.

tanot mata temple bomb

1971 ஆம் ஆண்டு மீண்டும் இந்தியாவுடன் போருக்கு வந்தது பாகிஸ்தான். அப்போது அந்நாட்டின் டாங்கி படைகள் தாங்கள் முந்தைய போரில் தோற்பதற்கு இக்கோவிலின் தெய்வம் தான் காரணம் என்று கருதி இக்கோவிலை அழிக்க இந்தப் பகுதியை நோக்கி முன்னேறி வந்தன. அப்போது எதிர்பாரா விதமாக அந்த டாங்கிகள் அனைத்தும் பாலைவன மணலில் நகர முடியாமல் சிக்கிக் கொண்டன. சிறிது நேரத்திலேயே இந்திய விமானப் படையின் குண்டுவீச்சுக்கு அந்த டாங்கிகள் அனைத்தும் இறையாகின. அப்போரில் இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியைப் பெற்றது. இம்மாதாவின் அற்புத சக்தியை உணர்ந்த இந்திய ராணுவமும் அக்கோவிலைச் சீரமைத்து அதன் நிர்வாகத்தையும் கவனித்து வருகிறது.

tanot mata temple

இதையும் படிக்கலாமே:
ஜீவ சமாதி அடைந்த சித்தரின் உடல் பல ஆண்டுகளாய் கெடாமல் இருக்கும் அதிசயம்

பல அற்புதங்களைப் புரிந்த “தனோத்” மாதாவின் ஆலயம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் பகுதியில் இந்திய-பாகிஸ்தான் நாடுகளின் எல்லைக்கருகில் அமைந்துள்ளது.