ஜீவ சமாதி அடைந்த சித்தரின் உடல் பல ஆண்டுகளாய் கெடாமல் இருக்கும் அதிசயம்

Jeeva samathi

நம் தமிழ் நாடு சித்தர்களின் பூமி என்பது நாம் அனைவரும் அறிந்ததே. நம் தமிழ் மக்களுக்கு, தங்களின் தவ வாழ்க்கையின் மூலம் சிறந்த ஞானக் கருத்துக்களையும், வாழ்க்கைக்கு பயன்படக்கூடிய பலக் கலைகளையும் கற்றுத் தந்தவர்கள் “சித்தர்கள்”. வாழும் போது மட்டுமில்லாமல், தாங்கள் இந்த மானுட உடலை விட்டு நீங்கிய பின்பும் இம்மக்களுக்கு உதவ வேண்டுமென்று எண்ணி, தங்களின் தவ ஆற்றலின் மூலம் தங்கள் மரணத்தை முன் கூட்டியே கணித்து, ஜீவ சமாதியடைந்து தங்களை உள்ளன்போடு தொழும் தன் பக்தர்களின் குறைகளை அஜ்ஜீவ சமாதிக்குள்ளிருந்தவாறே போக்கி வருகின்றனர். அப்படி எண்ணற்ற சித்தர்கள் ஜீவ சமாதியடைந்த தலங்கள் தமிழகம் முழுவதும் பல இருக்கின்றன. அப்படிக் காலவெள்ளத்தில் மறைந்து போய், சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஜீவ சமாதியில் மிகப்பெரிய ஆச்சர்யம் நிகழ்ந்துள்ளது. அது பற்றி பார்ப்போம் வாருங்கள்.

Siddhar

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு, திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில் அருகிலுள்ள சிறு கிராமமான பாப்பரப்பட்டியில், கல்லில் சிற்பம் செதுக்கும் “விஸ்வகர்மா” என்ற ஸ்தபதிகள் குலத்தில் சிவனைய்யா என்பவர் பிறந்து, வாழ்ந்து வந்தார். தங்களின் குலத்தொழிலான சிற்பத்தொழிலை செய்து வந்த போதும், இவருக்கு ஆன்மிகத்தின் பால் ஏற்பட்ட அதீத ஈடுபாடு காரணமாக, பல ஆன்மிகச் சாதனைகள் புரிந்து இறுதியில் சித்தர் நிலையை அடைந்தார். தன் இறுதிக்காலத்தை முன்கூட்டியே அறிந்த இச்சித்தர், ஜீவ சமாதி புகுந்து ஸ்தூல வாழ்க்கையை நிறுத்திக்கொண்டார். பின்பு காலவெள்ளத்தின் மாறுபாடுகளால் இவர் ஜீவ சமாதியடைந்த இடம் யாரும் அறிந்துக் கொள்ள இயலாமற் போனது.

ஆனால் சமீபத்தில், இப்பகுதியில் ஒரு சிலர் இச்சித்தரின் ஜீவ சமாதியைக் தற்செயலாக கண்டுபிடித்தனர். இவரின் ஜீவ சமாதியை திறந்த போது இம்மக்கள் அனைவரும் ஒரு அதிசயத்தைக் கண்டார்கள். அதாவது இச்சித்தர் சமாதி அடித்து கிட்ட தட்ட 100 இல் இருந்து 150 ஆண்டுகளுக்கு மேலிருக்கும் என்று இவர் வரலாற்றைப் பற்றியறிந்த ஒரு சிலர் கூறுகின்றனர். ஆனால் இத்தன்னை ஆண்டுகள் கடந்த பின்பும் இச்சித்தரின் உடல் எவ்வித இயற்கையின் பாதிப்பின்றி இருப்பதைக் கண்டு அனைவரும் வியந்தனர்.

sidhar

சித்தர்களின் யோகசக்தி காரணமாக அவர்களின் உடலின் தன்மை, சாதாரண மனிதர்களின் உடலின் தன்மையிலிருந்து வேறுபடுகிறது.மேலும் இக்கிராம மக்கள் இவரின் அந்த திருஉடலுக்கு பூஜைகள் செய்து, அச்சமாதியை மீண்டும் மூடி, அதன் மீது ஒரு கோவிலையும் எழுப்பி வழிபடுகின்றனர். கால ஓட்டத்தில் இது போல் மறைந்து போன எத்தனையோ மகான்களின் ஜீவ சமாதிகள், அவர்களின் அருளால் நமக்கு வெளிப்படும் என்பது நிச்சயம்.

இதையும் படிக்கலாமே:
புதையல் சிலையை நாகம் காத்து நிற்கும் வீடியோ

English Overview:
Recently there was one Jeevasamathi of sidhar opened and people got shocking by seeing it. There sidhar body was still fresh and it is believed that jeeva samathi was constructed before 100 years.