சளி இருமல் பிரச்சனையா? உடனே இந்த அயிரமீன் குழம்பை வைத்திடுங்கள். சுவையும் அட்டகாசமாக இருக்கும். சளிப்பிரச்சனையையும் அடியோடு ஓடிவிடும்

fishkulambu
- Advertisement -

மழைக்காலம் வந்து விட்டாலே அடிக்கடி சளி தொல்லை வந்துவிடும். குழந்தைகளாக இருந்தாலும், பெரியவர்களாக இருந்தாலும் ஜலதோஷம், இருமல், மார்புச்சளி போன்ற பிரச்சனைகள் வந்துவிடும்.ம இதனால் அன்றாட வேலைகளையும் சரியாக செய்ய முடியாது. குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடும். வேலைக்கு செல்பவர்களுக்கு சளி பிரச்சனை வந்து விட்டால் அவர்களது வேலைகளிலும் சரியாக கவனம் செலுத்த முடியாது. இவ்வாறு மழை காலத்தில் ஏற்படக்கூடிய இந்த பிரச்சனைகளை நாம் உண்ணும் உணவை வைத்தே சரி செய்ய முடியும். அதற்காக மழைக்காலங்களில் கிடைக்கக்கூடிய இந்த அயிரை மீனில் குழம்பு செய்து சாப்பிட்டால் சளி தொல்லையில் இருந்து விடுபட முடியும். வாருங்கள் இதனை எவ்வாறு சரி சமைப்பது என்பதை இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

cough1

தேவையான பொருட்கள்:
அயிரை மீன் – அரை கிலோ, சின்ன வெங்காயம் – 20, பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 3, மல்லித் தூள் – 2 ஸ்பூன், மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன், மஞ்சள் தூள் – ஒன்னரை ஸ்பூன், கல் உப்பு – இரண்டு ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், வெந்தயம் – அரை ஸ்பூன், தேங்காய் – 4 செல்லு, சீரகம் – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 7 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் அயிரை மீனை அரை ஸ்பூன் உப்பு போட்டு கலந்து 15 நிமிடம் ஊறவைக்கவேண்டும். பின்னர் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து விட்டு தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும். அதேபோல் இரண்டாவது முறையும் அரை மஞ்சள் தூள், அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து தண்ணீர் ஊற்றி கழுவி கொள்ள வேண்டும். இந்த மீன் மிகவும் வழுவழுப்பாக இருக்கும் எனவே இரண்டு மூன்று முறை நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும்.

Kadaai

பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, அரை ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு வதக்கிய வெங்காயத்தை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் நான்கு சில்லு தேங்காயையும் துருவி சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் ஒரு ஸ்பூன் சீரகம், இரண்டு ஸ்பூன் மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு அடுப்பின் மீது கடாயை வைத்து 6 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கருவேப்பிலை சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின் எலுமிச்சை அளவு புளியை ஊற வைத்து, கரைத்து, புளித் தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும். இதனை அரைத்து வைத்துள்ள மசாலா பேஸ்ட்டுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

fish

பிறகு பச்சை வெங்காயத்துடன் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவிட வேண்டும். குழம்பு கொதித்து மிளகாய் தூள் வாசனை சென்றது சுத்தம் செய்து வைத்துள்ள அயிரை மீனை சேர்த்து ஒரு கொதி வரும் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும். பிறகு கொத்தமல்லி தழைகளைத் தூவி அடுப்பை அணைத்துவிட வேண்டும். அவ்வளவுதான் சுவையான அயிரை மீன் குழம்பு தயாராகிவிட்டது. சுடச்சுட சாதத்தில் இந்தக் குழம்பை ஊற்றி சாப்பிட உடம்பில் இருக்கும் அனைத்து சளியும் சிறிது நேரத்தில் வெளியேறிவிடும்.

- Advertisement -