2 கப் ரேஷன் பச்சரிசி இருந்தா போதும் மெத்து மெத்துன்னு சாஃப்டாக பஞ்சு போல பன் தோசை இப்படி கூட வித்தியாசமாக செய்து அசத்தலமே!

- Advertisement -

ரேஷன் பச்சரிசி வீட்டில் இருந்தால் சட்டுனு சூப்பரான சுவையில் இந்த பன் தோசையை செய்து அசத்தலாம். வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இது போல முயற்சி செய்து பார்க்கலாம். பன் போல உப்பி வந்து நன்கு தாளித்த சுவையுடன் கூடிய இந்த பஞ்சு போன்ற மெத்தென்ற தோசை கார சட்னி, தேங்காய் சட்னிக்கு அவ்வளவு அருமையாக இருக்கும். நீங்களும் இதை எப்படி செய்வது? என்று இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பன் தோசை செய்ய தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 2 கப், வெந்தயம் – கால் ஸ்பூன், துருவிய தேங்காய் – அரை கப், அவல் – ஒன்றரை கப், உப்பு – தேவையான அளவு, சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன், கடலை பருப்பு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, பச்சை மிளகாய் – 2.

- Advertisement -

பன் தோசை செய்முறை விளக்கம்:
பன் தோசை செய்வதற்கு முதலில் ரேஷன் பச்சரிசியை கல், குருணை எல்லாம் நீக்கி சுத்தம் செய்து சுத்தமாக நன்கு ஐந்து முறை தண்ணீர் ஊற்றி கழுவி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ரேஷன் பச்சரிசியில் தான் செய்ய வேண்டும் என்று இல்லை, உங்களிடம் இருக்கும் கடை பச்சரிசியிலும் நீங்கள் செய்யலாம். இதனுடன் கால் ஸ்பூன் அளவிற்கு வெந்தயம் சேர்த்து மூழ்கும் அளவிற்கு நன்கு தண்ணீர் ஊற்றி ஐந்து மணி நேரம் ஊற விட்டு விடுங்கள். மாலையில் ஊற விட்டு இரவு நேரத்தில் இந்த மாவை அரைத்து வைக்கலாம்.

இப்போது ஒரு பெரிய மிக்ஸி ஜார் ஒன்றை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் துருவிய தேங்காய், வெள்ளை அவல் சேர்த்து ஒரு முறை நன்கு சுற்றி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஊற வைத்துள்ள அரிசியை தண்ணீர் இல்லாமல் சேர்த்து நன்கு இட்லி மாவு பதத்திற்கு கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரிசி ஊற வைத்த தண்ணீரையே நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். பிறகு இந்த மாவில் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து மாவை கையால் கெட்டியாக கலந்து வைத்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு இரவு முழுவதும் ஊறவிட்டு விட்டு எட்டு மணி நேரம் கழித்து நீங்கள் காலையில் எழுந்ததும் மாவை திறந்து பார்த்தால் நன்கு புளித்திருக்கும். இந்த புளித்த மாவுக்கு சிறு தாளிப்பு ஒன்றை கொடுக்க வேண்டும். இதற்கு அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு வாணலியை வைத்து தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகை போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுந்து, கடலைப்பருப்பு, சீரகம், கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பரான பிளைன் குருமா ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க. ஒரு விசில் வரும்போது வீடே மணக்கும்.

பின்னர் காரத்திற்கு ஏற்ப பொடி பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயையும் சேர்த்து ஒரு முறை நன்கு வதக்கி கொள்ளுங்கள். பிறகு இந்த தாளிப்பை மாவுடன் கொட்டி கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஆப்ப கடாய் அல்லது உங்களிடம் நல்ல குழியாக இருக்கக்கூடிய கடாய் ஒன்றை வைத்து சுற்றிலும் எண்ணெய் விட்டுக் கொள்ளுங்கள். பின்னர் நடுவில் மூன்று கரண்டி அளவிற்கு மாவை எடுத்து ஊற்றுங்கள். பிறகு மூடி போட்டு மூடி வையுங்கள். ஒருபுறம் நன்கு வெந்ததும் மறுபுறம் திருப்பி மூடி போட்டு வேக போடுங்கள். அவ்வளவுதான், பஞ்சு போல மெத்து மெத்துன்னு சூப்பரான சுவையில் பன் தோசை ரெசிபி தயார்! இதே மாதிரி வித்தியாசமாக நீங்களும் செஞ்சு பாருங்க உங்கள் வீட்டிலும் பாராட்டு நிச்சயம்.

- Advertisement -