இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பரான பிளைன் குருமா ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க. ஒரு விசில் வரும்போது வீடே மணக்கும்.

kuruma_tamil
- Advertisement -

இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட விதவிதமாக எத்தனையோ குருமா ரெசிபி உள்ளது. காய்கறி இல்லாத சமயத்தில் வெறும் வெங்காயம் தக்காளியை வைத்து பிளைன் குருமா எப்படி வைப்பது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம். இட்லி தோசை மட்டும் அல்லாமல், பணியாரம் சப்பாத்தி பூரி இவைகளுக்கு கூட இந்த குருமா சூப்பர் சைடு டிஷ் ஆக இருக்கும். வாங்க நேரத்தை கடத்தாமல் அந்த இன்ட்ரஸ்டிங்கான சுவை தரும் ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.

பிளைன் குருமா செய்முறை:
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 1 ஸ்பூன் – எண்ணெய் ஊற்றி, பட்டை – 1 துண்டு, லவங்கம் – 1, நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 2, இந்த பொருட்களை போட்டு வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை நன்றாக வதங்கிய பின்பு, நறுக்கிய தக்காளி பழம் – 2 சேர்த்து வதக்குங்கள். தக்காளி பழம் பச்சை வாடை நீங்க வதங்க வேண்டும்.

- Advertisement -

அதன் பின்பு இதில் தேங்காய் துருவல் – 2 கைப்பிடி அளவு சேர்க்க வேண்டும். இப்போது வதுக்கி வைத்திருக்கும் எல்லா பொருட்களும் ஆறிய பின்பும் மிக்ஸி ஜாரில் போட்டுக்கோங்க. இதோடு, கசகசா – 1/2 ஸ்பூன், முந்திரிப் பருப்பு – 5, சேர்க்க வேண்டும். கசகசா முந்திரி பருப்பை ஒரு சின்ன கிண்ணத்தில் போட்டு கொஞ்சமாக வெந்நீரை ஊற்றி 15 நிமிடங்கள் ஊற வைத்து போட்டுக் கொள்ளவும். இப்போது இந்த எல்லா பொருட்களையும் விழுதாக அரைத்து அப்படியே தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து அடுப்பில் ஒரு குக்கரை வைத்து, 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சோம்பு – 1 ஸ்பூன், ஏலக்காய் – 2, மிகப் பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கைப்பிடி அளவு, கருவேப்பிலை – 1 கொத்து, இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் சுருங்கி வதங்கி வந்த பிறகு வர மல்லித்தூள் – 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து 2 வதக்கு வதக்கி மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் விழுதை இதில் ஊற்றி, குருமாவுக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்ற வேண்டும்.

- Advertisement -

தண்ணீரை கொஞ்சம் தாராளமாக ஊற்றுங்கள். குருமாவில் கசகசா முந்திரிப் பருப்பு, சேர்த்து அரைத்து இருப்பதால் திக்காகும். அது மட்டும் இல்லாமல் இந்த குருமா கொஞ்சம் தண்ணீர் பதத்தில் இருந்தால் தான் இட்லி மேல் வார்த்து சாப்பிட சௌகரியமாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: காலையில் வடித்த சாதம் மீந்து விட்டதா? நோ டென்ஷன் பத்து நிமிசத்துல சூப்பரனா பிரைட் ரைஸ் செய்து அசத்திடலாம். இத மீந்த சாதத்தில் தான் செஞ்சீங்கன்னு சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க.

இறுதியாக குருமாவுக்கு தேவையான அளவு உப்பு போட்டு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளை தூவி கலந்து விட்டு குக்கரை மூடி மிதமான தீயில் மூன்று விசில் விட்டால் அசத்தலான குருமா தயார். குக்கரை திறந்து மேலே மீண்டும் கொத்தமல்லி தலைகளை தூவி இட்லி மீது வார்த்து சாப்பிட்டு பாருங்கள். அருமையான ரெசிபி.

- Advertisement -