- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்உள்ளே வைத்திருக்கும் ஸ்டஃப்பிங் உதிராமல் இருக்கும் இந்த சுவையான சப்பாத்தி ரோலை ஒரு முறை இப்படி...

உள்ளே வைத்திருக்கும் ஸ்டஃப்பிங் உதிராமல் இருக்கும் இந்த சுவையான சப்பாத்தி ரோலை ஒரு முறை இப்படி செய்திடுங்கள். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் உங்களை சுற்றி சுற்றி வருவார்கள்

- Advertisement -

நாம் வீட்டில் செய்யும் உணவு எப்போதும் குழந்தைகளுக்கு பிடித்ததாக இருந்தால் அவற்றை மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். அவ்வாறு குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவது பெரும்பாலும் தோசை மட்டும்தான். அதனையும் மீறி சென்றால் பூரியை விருப்பமாக சாப்பிடுவார்கள். ஆனால் எப்பொழுதும் செய்யும் உணவையே சற்று வித்தியாசமான முறையில் செய்து கொடுத்தாலும் குழந்தைகளை விருப்பமாக சாப்பிட வைக்கலாம். அவ்வாறு நாம் செய்யும் சப்பாத்தியினுள் இந்த சுவையான ஸ்டாஃப்பிங்கை வைத்து ரோல் செய்து கொடுத்தோம் என்றாலும் அவர்கள் உற்சாகமாக சாப்பிடுவார்கள். வாருங்கள் இந்த சப்பாத்தி ரோலை எவ்வாறு செய்வது என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

dosai

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – ஒன்றரை கப், பெரிய வெங்காயம் – 2, முட்டை – 2, சீரகம் – அரை ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், மிளகாய்த் தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 5 ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவை எடுத்துக்கொண்டு அதனுடன் அரை ஸ்பூன் உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். அதை அப்படியே 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

wheat

அதன்பின் ஒரு கடாயை அடுப்பின் மீது வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து, அதனுடன் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து அவை பொன்னிறமாக மாறும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

- Advertisement -

அதன் பின் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் மிளகாய்தூள் மற்றும் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக வதக்கி விட்டு அவற்றுடன் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றிக்கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை மிதமான தீயில் வைத்து முட்டையை நன்றாக கலந்துவிட வேண்டும். இரண்டு நிமிடம் கலந்து விட்ட பின்னர் இந்த மசாலா தயாராகிவிடும்.

egg-rice1

பிறகு பிசைந்து வைத்த கோதுமை மாவினை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து சப்பாத்தியை மெல்லியதாக தேய்த்துக் கொள்ள வேண்டும். அதன்பின் அடுப்பின் மீது தோசைக்கல்லை வைத்து, அரை ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பிரட்டி வைத்த மாவை அதில் போட்டு வேக வைக்கவேண்டும். சப்பாத்தியின் 2 பக்கங்களும் லேசாக சிவந்தவுடன் ஒரு ஸ்பூன் முட்டை மசாலாவை அதில் வைத்து ரோல் செய்ய வேண்டும்.

masala-chappathi5

பின்னர் 5 நிமிடம் இந்த சப்பாத்தியை தோசைக்கல்லில் சிவந்து வருமாறு வேக வைத்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான சப்பாத்தி ரோல் தயாராகிவிடும். இவ்வாறு அனைத்து சப்பாத்திகளையும் செய்து கொள்ள வேண்டும். இதில் நாம் தக்காளி சேர்க்காமல் செய்துள்ளதால் சப்பாத்தியினுள் வைத்துள்ள ஸ்டஃப்பிங் எதுவும் வெளியே வராமல் உள்ளேயே இருக்கும். குழந்தைகள் சாப்பிடுவதற்கும் இந்த சப்பாத்தி ரோல் மிகவும் ருசியாக இருக்கும்.

சற்று முன்