ஈசியாக செய்யும் தேங்காய் சட்னியை வெறுப்பவர்களுக்கு இப்படி ஒருமுறை சட்னி செய்து கொடுங்கள்! தினமும் கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.

thengai-coconut-chutney
- Advertisement -

தினமும் என்ன சட்னி செய்வது? என்று தெரியாமல் திணரும் பொழுது டக்கென அவர்கள் நினைவில் தோன்றுவது தேங்காய் சட்னி தான். இரண்டு பத்தை தேங்காயை மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் ரெண்டு மூணு பொருட்களை போட்டு இரண்டு சுற்று சுற்றி இறக்கி தாளித்தால் முடிந்து விட்டது தேங்காய் சட்னி. அதிக நேரம் செலவாகாமல் ஐந்து நிமிடத்தில் செய்யக் கூடிய தேங்காய் சட்னி தாய்மார்களுக்கு மிகவும் பிடித்த சட்னியாக இருக்கிறது. ஆனால் இதை சாப்பிடும் பெரியவர்களாக இருந்தாலும், குழந்தைகளாக இருந்தாலும் பெரும்பாலானோருக்கு அது வில்லன் தான்.

தினமும் தேங்காய் சட்னியா? போரடிக்குது என்று புலம்புவார்கள் ஏராளம். இன்னும் ஒரு சிலர் அதை தொட்டுக் கூட பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு தேங்காய் சட்னியை இப்படி ஒரு முறை செய்து கொடுத்து பாருங்கள். இனி அடிக்கடி அது தான் வேண்டும் என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள். சரி, அனைவரும் விரும்பும் படி தேங்காய் சட்னியை எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

- Advertisement -

பொதுவாக தேங்காய் சட்னியில் பச்சை மிளகாயும் உடைத்த கடலையும் சேர்த்து செய்வது வழக்கம். அப்படி இல்லை என்றால் அதற்கு பதிலாக வேர்க்கடலையும், காய்ந்த மிளகாயும் போட்டு வேர்கடலை சட்னி செய்து விடுவார்கள். தேங்காய் சட்னி ருசியாக இருக்க கூடுதலாக இந்த சில பொருட்களை சேர்த்து பாருங்கள். இது எல்லோருடைய வீட்டிலும் எப்போதும் இருக்கும் பொருட்கள் தான். உடலுக்கு ஆரோக்கியமும் கூட. எனவே இவற்றை தேங்காய் சட்னியில் சேர்த்து அரைக்கும் பொழுது சுவையும், மணமும் வித்தியாசப்படும். அதனால் அனைவரும் விரும்பும் படியாக இருக்கும்.

தேங்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
தேங்காய் பத்தை – 4
பச்சை மிளகாய் – 1
வர மிளகாய் – 2
சின்ன வெங்காயம் – 5

- Advertisement -

உடைத்த கடலை – 2 டேபிள் ஸ்பூன்
அல்லது வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – 2 கொத்து

coconut2

நறுக்கிய மல்லித்தழை – சிறிதளவு
இஞ்சி – ஒரு இன்ச் சிறுதுண்டு
பூண்டு – 2 பல்
உப்பு – தேவையான அளவிற்கு

தேங்காய் சட்னி செய்முறை விளக்கம்:
தேங்காய் பத்தைகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பச்சை மிளகாய்களை பொடிப் பொடியாக நறுக்கவும். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து இரண்டு துண்டுகளாக ஆக்கிக் கொள்ளவும். இஞ்சி துண்டு மற்றும் பூண்டு பற்களை தோலுரித்து கொள்ளவும். கறிவேப்பிலை, மல்லித்தழையை கழுவி நறுக்கிக் கொள்ளுங்கள். எல்லா பொருட்களையும் தயார் செய்து வைத்துக் கொண்ட பின் மிக்ஸி ஜாரில் தேவையான எல்லா பொருட்களையும் சேர்த்து நன்கு நைசாக அரைத்து கொள்ள வேண்டியது தான். உடைத்த கடலைக்கு பதிலாக வேர்க்கடலை சேர்த்தும் செய்யலாம்.

பின்னர் இறக்கி தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கடுகு, கறிவேப்பிலை, சீரகம், உளுந்து, வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து, கால் ஸ்பூன் நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக கருகவிட்டு தாளித்துக் கொட்டவும். அவ்வளவுதாங்க! எல்லாமே நம் வீட்டில் எப்பொழுதும் வைத்திருக்கும் பொருட்கள் தான். இஞ்சி, பூண்டு, கருவேப்பிலை, சின்ன வெங்காயம் எல்லாம் சேர்ப்பதால் சுவை அலாதியாக இருக்கும். மேலும் ஆரோக்கியமும் அதிகரிக்கும். தேங்காய் சட்னி பிடிக்காதவர்களுக்கு கூட இப்படி செய்து கொடுத்தால் பிடிக்க ஆரம்பித்து விடும். எனவே ஒரு முறை நீங்களும் இப்படி முயற்சி செய்து பார்த்து வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்துங்கள்.

- Advertisement -