டேஸ்டியான கருணைக்கிழங்கு ஃப்ரை 10 நிமிடத்தில் இப்படி பொரித்து எடுத்து பாருங்கள், சாம்பார் சாதத்துக்கு செமையா இருக்கும்!

karunai-kilangu-fry1
- Advertisement -

கருணைக்கிழங்கை பல வகைகளில் செய்து பார்த்து இருப்பீர்கள். இது போல சுவையான கருணைக்கிழங்கு வறுவல் செய்து பாருங்கள். மீன் வறுவல் போல அவ்வளவு அருமையாக இருக்கும். ரொம்பவே சுலபமாக செய்யக் கூடிய இந்த கருணைக் கிழங்கு வறுவல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சுட சுட சாம்பார் சாதத்துடன் கருணைக்கிழங்கு வறுவல் வைத்துக் கொடுத்தால் தட்டு நிறைய சோறு இருந்தாலும் பத்தாது. கருணைக்கிழங்கு வறுவல் எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் கற்றுக் கொள்வோம்.

கருணைக்கிழங்கு ஃப்ரை செய்ய தேவையான பொருட்கள்:
கருணைக்கிழங்கு – 300 கிராம், கான்பிளவர் மாவு – 1 டேபிள் ஸ்பூன், அரிசி மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன், கடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, சமையல் எண்ணெய் – வறுப்பதற்கு ஏற்ப, கறிவேப்பிலை – தாளிக்க.

- Advertisement -

கருணைக்கிழங்கு ஃப்ரை செய்முறை விளக்கம்:
முதலில் 200 கிராம் கருணைக் கிழங்கை தோல் நீக்கி சுத்தம் செய்து நன்கு தண்ணீர் இல்லாமல் துடைத்து காற்றில் ஆற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஃபிங்கர் சிப்ஸ் செய்வது போல நீளநீளமாக செவ்வக வடிவத்தில் உருளைகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பெரிய பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கடலை மாவு, கான்பிளவர் மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மிளகாய் தூள் என்று எல்லா மசாலா வகைகளையும் ஒன்றாக கலந்து தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த மசாலாவுடன் நீங்கள் காய வைத்துள்ள கருணை கிழங்கு துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும். குறைந்தது அரைமணி நேரம் அப்படியே மூடி வைத்து ஊற விட்டு விடுங்கள். அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலியை வைத்து தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு கொதித்ததும் அடுப்பை மீடியமாக வைத்து கொண்டு ஒவ்வொரு துண்டுகளாக சேர்த்து மொறுமொறுவென்று சிவக்க பொறுமையாக வறுத்து எடுக்க வேண்டும்.

- Advertisement -

கருணைக்கிழங்கை நாம் முன்பே வேக வைக்காததால் வறுபட சிறிது நேரம் எடுக்கும். எனவே பொறுமையாக உள்ளே முழுவதுமாக வறுபடும் வரை காத்திருந்து வறுத்து எடுக்க வேண்டும். இறுதியாக எண்ணெயில் கொஞ்சம் கருவேப்பிலை இலைகளை பொரித்து எடுத்து நொறுக்கி தூவி பரிமாறினால் அட்டகாசமான கருணைக்கிழங்கு ப்ரை தயார். இதை வேறொரு வகையிலும் செய்யலாம். முதலிலேயே கருணைக் கிழங்கு துண்டுகளை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் மட்டும் வேக வைத்து எடுத்து காற்றில் ஆற வைக்க வேண்டும்.

தண்ணீர் இன்றி ட்ரை ஆனதும் இதே போல மசாலாக்களை கலந்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் இன்னும் கூடுதல் சுவையை கொடுக்கும். முதல் மெத்தேட் மொறுமொறுவென்று முழுவதுமாக இருக்கும். இரண்டாவது மெத்தட்டில் செய்தால் மேலே மொறுமொறுவென்றும், உள்ளே சாஃப்ட் ஆகவும் இருக்கும். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப இரு வகைகளிலும் செய்து பார்த்து சுடச்சுட சாம்பார் சாதத்துடன் தொட்டு சாப்பிட்டு பாருங்கள், அவ்வளவு அருமையாக இருக்கும்.

- Advertisement -