- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்இப்படி அரைத்த மசாலா சேர்த்து ஒரு முறை மோர் குழம்பு செய்து பாருங்கள். வடித்து வைத்த...

இப்படி அரைத்த மசாலா சேர்த்து ஒரு முறை மோர் குழம்பு செய்து பாருங்கள். வடித்து வைத்த சாதம் ஒரு பருக்கை கூட மிச்சமில்லாமல் தீர்ந்துவிடும்

- Advertisement -

அட தினமும் சாம்பார், காரக்குழம்பு, ரசம், கூட்டு என சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? இப்பொழுது இந்த சுவையான மோர் குழம்பு செய்து பாருங்கள். வெறும் தயிரை கடைந்து அதனை தாளித்து சாப்பிடுவது ஒரு வகை. ஆனால் அதற்கு அரை லிட்டர், ஒரு லிட்டர் தயிர் இருந்தாலும் வீட்டில் உள்ள அனைவருக்கும் போதுமானதாக இருக்காது. அதுவே இப்படி மசாலா அரைத்து வைத்து பாருங்கள். அரை லிட்டர் தயிரிலும் 11/2 லிட்டர் மோர் குழம்பு செய்யலாம். அதிலும் அதன் சுவை வீட்டில் உள்ள அனைவரையும் தன் பக்கம் ஈர்க்கும் வகையில் அவ்வளவு சுவையாக இருக்கும். எவ்வளவு சாதம் கொடுத்தாலும் வேண்டும் வேண்டும் என்று ருசியாக சாப்பிடுவார்கள். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

mushroom-kulambu3

தேவையான பொருட்கள்:
தயிர் – அரை லிட்டர், சின்ன வெங்காயம் – 10, பச்சை மிளகாய் – 4, காய்ந்த மிளகாய் – 5, துவரம் பருப்பு – ஒன்றரை ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், இஞ்சி சிறிய துண்டு – 2, எண்ணெய் – 3 ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் அரை லிட்டர் தயிரை மிக்ஸி ஜாரில் சேர்த்து கட்டிகள் இல்லாமல் அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் இவற்றுடன் மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் முக்கால் ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒன்றரை ஸ்பூன் துவரம்பருப்பை 10 நிமிடம் ஊறவைத்து சுத்தமாக கழுவி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

curd

துவரம்பருப்புடன் 3 பச்சை மிளகாயைக் கீறி சேர்க்க வேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் சீரகம் மற்றும் இரண்டு துண்டு இஞ்சியை பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவேண்டும்.

- Advertisement -

பிறகு இந்த மசாலாவை கலந்து வைத்துள்ள தயிருடன் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். பிறகு ஒரு கடாயை அடுப்பின் மீது வைத்து 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு சின்ன வெங்காயம் மற்றும் 4 காய்ந்த மிளகாயை இரண்டாக உடைத்து சேர்த்துக் கொண்டு நன்றாக வதக்கி விட வேண்டும்.

mor-kuzhambu

பிறகு இவற்றுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி விட வேண்டும். பின்னர் கலந்து வைத்துள்ள தயிரை இதில் சேர்த்து மூடி போட்டு சிறிது நேரம் கொதிக்க விடவேண்டும். துவரம்பருப்பு, சீரகம் போன்றவற்றை பச்சையாக அரைத்து வைத்துள்ளதால் நன்றாக கொதிக்க விட்டால் மட்டுமே இவற்றின் பச்சை வாசனை மறைந்து மோர் குழம்பு சுவையாக மாறும். அவ்வளவுதான் இறுதியாக கொத்தமல்லி தழையை தூவி சாதத்துடன் சேர்த்து பரிமாறி கொடுக்க வேண்டும்.

சற்று முன்