புரட்டாசி மாதம் கறி குழம்பு சாப்பிட முடியவில்லையா? 2 விசிலில் கறிக்குழம்பையே மிஞ்சும் சுவையில் இந்த குழம்பு செஞ்சு பாருங்க!

mushroom-kulambu2
- Advertisement -

வாராவாரம் அல்லது வாரத்திற்கு இரண்டு நாள் கறிக்குழம்பு சாப்பிட்டவர்கள் இந்த மாதம் முழுவதும் பெருமாளுக்கு விரதம் இருந்து அவருடைய அருளைப் பெற நாவைப் பட்டினி போடும் இனிய பக்தர்களுக்கு கறிக்குழம்பு மிஞ்சும் சுவையில் இருக்கக்கூடிய இந்த அற்புதமான குழம்பு வரப்பிரசாதமாக இருக்கும். குக்கரில் 2 விசில் விட்டு எடுத்தால் போதும். சிக்கன், மட்டன் எல்லாம் தோத்துப் போகும் அளவிற்கு ருசி மிகுந்த இந்த காளான் குழம்பு எப்படி செய்வது? என்கிற ரகசியத்தை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

mushroom1

காளான் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
காளான் – 200 கிராம், எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், சோம்பு – ஒரு டீஸ்பூன், சின்ன வெங்காயம் – 100 கிராம், தக்காளி – 2, பட்டை – 2, கிராம்பு – 5, அண்ணாச்சி பூ – 1, பெரிய வெங்காயம் – ஒன்று, இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், குழம்பு மிளகாய்த் தூள் – ரெண்டு ஸ்பூன், உப்பு – தேவையான அளவிற்கு, நறுக்கிய கொத்தமல்லி தழை மற்றும் கறிவேப்பிலை – சிறிதளவு.

- Advertisement -

காளான் குழம்பு செய்முறை விளக்கம்:
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அதில் சீரகம், மிளகு, சோம்பு ஆகியவற்றை தாளிக்கவும். பின்னர் சின்ன வெங்காயத்தை தோல் உரித்து சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும் ஒரு தக்காளி பொடி பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி மசிய வதங்கியதும் இவற்றை ஆறவிட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

mushroom-kulambu

பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அதில் பட்டை கிராம்பு அன்னாசி பூ ஆகிய மசாலா பொருட்களை சேர்த்து தாளிக்கவும். பின்னர் ஒரு பெரிய வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு பொன்னிறமாக வதங்கியதும் ஒரு டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்குங்கள். இவற்றின் பச்சை வாசம் போனதும் ஒரு தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். இவை நன்கு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

- Advertisement -

பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு வதக்க வேண்டும். அடிபிடிக்காமல் நன்கு கலந்து விட்ட பிறகு நன்கு சுத்தம் செய்து வைத்துள்ள காளானை பொடி ஒன்றுக்கு இரண்டாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். காளான் சீக்கிரம் வெந்து விடும் என்பதால் 2 நிமிடம் வதக்கினால் போதும். பின்னர் மிக்ஸி ஜாரை கழுவிய தண்ணீரை சேர்த்து உங்களுக்கு குழம்பு எந்த அளவிற்கு கெட்டியாக இருக்க வேண்டும் அந்த அளவிற்கு பார்த்து அரை டம்ளர் அளவிற்கு தண்ணீரை சேர்த்துக் கொள்ளுங்கள்.

mushroom-kulambu3

காளான் குழம்பு கெட்டியாக இருக்கவேண்டும் எனவே அதிகம் தண்ணீர் சேர்த்து விடாதீர்கள். பின்னர் குக்கரின் மூடியை மூடி வைத்து 2 விசில் வைத்தால் போதும். சூப்பரான காளான் குழம்பு தயாராகிவிடும். சிக்கன் மட்டன் எல்லாம் தோற்றுப் போகும் அளவிற்கு அலாதியான சுவையில் இருக்கக்கூடிய இந்த குழம்பை நீங்களும் ஒருமுறை வீட்டில் செய்து பார்த்து அனைவரையும் அசத்தி விடுங்கள்.

- Advertisement -