இதனை தெரிந்துகொண்டால் இனிமேல் இப்படி மட்டும்தான் பூரி செய்வீர்கள். எப்பொழுதும் செய்வதை விட வித்தியாசமான சுவையில் சூப்பராக இருக்கும்

poori
- Advertisement -

இட்லி, தோசை, சப்பாத்தி இவற்றைவிட அனைவருக்கும் மிகவும் பிடித்தது பூரி தான், பூரி என்றாலே குழந்தைகள் மிகவும் உற்சாகமாகி விடுவார்கள். இவ்வாறு வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடித்த பூரியை எப்பொழுதும் செய்யும் சுவையை விட சற்று வித்தியாசமான முறையில் உருளைக்கிழங்கு, பட்டாணி மசாலா சேர்த்து செய்து பாருங்கள் இன்னும் அருமையாக இருக்கும். 10 பூரி கொடுத்தாலும் பத்தாது என கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். இதனை ஒரு முறை சுவைத்து விட்டால் மீண்டும் பூரி செய்தால் இவ்வாறு மட்டுமே செய்வீர்கள். வாருங்கள் இதனை எப்படி சமைப்பது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

dosaa4

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 300 கிராம், பெரிய உருளைக்கிழங்கு – 2, பச்சை பட்டாணி – 50 கிராம், பச்சை மிளகாய் – 3, உப்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – கால் லிட்டர்.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் 300 கிராம் கோதுமை மாவை சேர்த்து, அதில் அரை ஸ்பூன் உப்பு சேர்த்துக் கொண்டு, பின்னர் அரை ஸ்பூன் ஓமத்தை கைகளால் நசுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பூரிக்கு ஏற்றார்போல் மாவினை மிருதுவாக பிசைந்து கொள்ள வேண்டும்.

wheat

பிசைந்து வைத்துள்ள இந்த மாவினை அரை மணி நேரம் நன்றாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் இந்த மாவு மிகவும் மிருதுவாக பூரி திரட்டுவதற்கு ஏற்றார் போல் நல்ல பதத்திற்கு வந்துவிடும். பின்னர் இரண்டு உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் வைத்து அதனுடன் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவேண்டும்.

- Advertisement -

அவ்வாறு பச்சை பட்டாணியையும் நன்றாக வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் பச்சை பட்டாணி, 3 பச்சை மிளகாய் மற்றும் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் இந்த கலவையை உருளைக்கிழங்குடன் சேர்த்து நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும்.

pachai pattani

பிறகு கோதுமை மாவை சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் மசாலா கலவையை அரை ஸ்பூன் எடுத்துக் கொண்டு அதனை சிறிய உருண்டையாக செய்து கொள்ள வேண்டும். கோதுமை மாவு உருண்டையை உள்ளங்கையில் வைத்து அழுத்தி குழியாக செய்து கொண்டு அதனுள் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து கோதுமை மாவினை உருண்டையாக்கிக்கொள்ள வேண்டும்.

பிறகு ஒவ்வொரு உருண்டையையும் பூரி மனையில் வைத்து திரட்டிக் கொள்ள வேண்டும். அதன் பின் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்றாக காய்ந்ததும் ஒவ்வொரு பூரியாக சுட்டு எடுக்க வேண்டும். இவ்வாறே செய்து வைத்துள்ள அனைத்து உருண்டைகளையும் எண்ணையில் சேர்த்து பூரி பொறிக்க வேண்டும்.

poori5

அவ்வளவுதான் சுவையான உருளைக்கிழங்கு மசாலா பூரி தயாராகிவிட்டது. இதனுடன் தொட்டுக்கொள்ள சட்னி, கிரேவி இதில் ஏதாவது ஒன்றை சேர்த்து கொள்ளலாம். அல்லது அப்படியே வெறும் பூரியையும் சாப்பிடலாம் மிகவும் சுவையாக இருக்கும்.

- Advertisement -