இட்லி, தோசை மாவு இல்லையா? 1 கப் அரிசி மாவு இருந்தா போதும் 10 நிமிடத்தில் சூப்பரான டிபன் ரெடி!

rice-flour-adai0
- Advertisement -

இட்லி, தோசை மாவு இல்லாத சமயத்தில் இது போல வித்தியாசமான முறையில் அரிசி மாவு அடை செய்து சாப்பிட்டால் குழந்தைகள் முதல் பெரியோர் வரை எல்லோரும் இன்னும் இன்னும் வேண்டும் என்று கேட்பார்கள். ரொம்பவே சுவையாக இருக்கும் இந்த அரிசி மாவு அடை, அடையாக மட்டுமல்லாமல், இட்லியாக கூட அவித்து எடுக்கலாம். வித்தியாசமான இந்த டிபன் செய்து பார்க்க இதே அளவின்படி நீங்களும் ஒருமுறை முயற்சித்து பாருங்கள். ரொம்ப ரொம்ப சுலபமாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே செய்யும் இந்த அரிசி மாவு அடை எப்படி செய்வது? என்பதை நாமும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

rice

அரிசி மாவு அடை செய்ய தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – ஒரு கப், ரவை – ஒரு கப், பெரிய வெங்காயம் – ஒன்று, பெரிய தக்காளி – ஒன்று, நறுக்கிய கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி, நறுக்கிய மல்லி தழை – ஒரு கைப்பிடி, உப்பு – தேவையான அளவு, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த் தூள் – அரை டீஸ்பூன், சோடா உப்பு – கால் டீஸ்பூன், தண்ணீர் – 11/4 கப், தாளிக்க: எண்ணெய் – 1 ஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன்.

- Advertisement -

அரிசி மாவு அடை செய்முறை விளக்கம்:
அரிசி மாவு அடை செய்வதற்கு முதலில் ஒரு கப் அரிசி மாவை எடுத்துக் கொள்ளுங்கள். பச்சரிசி, புழுங்கல் அரிசி என்று எந்த அரிசி மாவாக இருந்தால் பரவாயில்லை. அதனுடன் அரை கப் அளவிற்கு ரவை சேர்க்க வேண்டும். வறுத்த ரவை, வறுக்காத ரவை எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. பின்னர் பெரிய வெங்காயம் ஒன்றை தோலுரித்து பொடி பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும். பெரிய வெங்காயத்திற்கு பதிலாக சின்ன வெங்காயத்தை சேர்த்தால் இன்னும் கூடுதல் சுவையாக இருக்கும்.

rice-flour-adai1

பெரிய தக்காளி ஒன்றை நன்கு கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் உங்களுக்கு விருப்பமான ஏதாவது காய்கறிகளையும் சேர்க்கலாம். கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ் என்று உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை ஒரு கைப்பிடி அளவிற்கு மெல்லியதாக துருவி சேர்க்க வேண்டும். காய்கறிகள் சேர்க்க விருப்பம் இல்லை என்றால் விட்டு விடலாம். பொடிப் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் நறுக்கிய கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் இவற்றுடன் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். மஞ்சள் தூள், மிளகாய் தூள், ஆப்ப சோடா ஆகியவற்றை மேலே கொடுத்துள்ள அளவின்படி சேர்க்க வேண்டும். உடனே இதனை புளிக்க விடாமல் செய்து சாப்பிடுவதால் ஆப்ப சோடா சேர்த்தால் தான் சரியாக வரும். இந்த மாவிற்கு தயிர் கூட ஊற்ற தேவையில்லை, தண்ணீர் சேர்த்து கலந்து சுட்டாலே சூப்பராக வரும். எனவே ஒன்னேகால் கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்கு கெட்டியாக கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

rice-flour-adai

ஒரு 10 நிமிடம் ஊற வைத்தால் நாம் சேர்த்துள்ள ரவையானது மேலும் தண்ணீரை இழுத்து கெட்டியான பதத்திற்கு நமக்கு மாவை கொடுக்கும். அதன் பிறகு இந்த மாவை தாளித்துக் கொட்ட வேண்டும். அதற்கு ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் சீரகம் சேர்த்து பொரிய விடுங்கள். பின்னர் மாவுடன் இதனை தாளித்து சேர்த்து நீங்கள் அடையாக சுட்டு எடுத்தாலும் சரி, இட்லியாக அவித்து எடுத்தாலும் சரி செம டேஸ்டாக இருக்கும்.

- Advertisement -