நீங்கள் என்ன ட்ரை பண்ணாலும் காரச்சட்னி கடையில செய்ற மாதிரி வரலையா? இப்படி செஞ்சு பாருங்க கண்டிப்பா வரும்.

roadside-kara-chutney
- Advertisement -

ரோட் சைட் கடைகளில் கொடுக்கும் காரச்சட்னிக்கு ஈடு இணை எதுவுமே இல்லை என்று கூறலாம். இட்லி, தோசை, பொங்கலுக்கு தொட்டுக் கொள்ள காரச்சட்னி வைத்துக் கொடுப்பார்கள். அந்த அளவிற்கு ஒரு காரச்சட்னி ருசியை வீட்டில் கொண்டு வர முடியாது. அதற்கு நாம் செய்யும் சிறு சிறு தவறுகளும் காரணமாக இருக்கலாம். இந்த முறையில் கார சட்னி ஒரு முறை வைத்துப் பாருங்கள், ரோட் சைட் கார சட்னி போலவே வெங்காயம் மிதக்க காரசாரமான சப்பு கொட்டும் சுவையில் நாமும் செய்து அசத்தலாம். இந்த காரச் சட்னி செய்வது எப்படி? என்பதை நாமும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

kara-chutney

காரச் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய் – தேவையான அளவிற்கு, வர மிளகாய் – 4, பெரிய வெங்காயம் – 3, தக்காளி – 2, பூண்டு பல் – 5, உப்பு – தேவையான அளவு, தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

காரச் சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் அடுப்பை பற்ற வைத்து வாணலியை வையுங்கள். வாணலி சூடானதும் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டுக் கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்ததும் வர மிளகாய்களை காம்பு நீக்காமல் அப்படியே சேர்த்து கருகி விடாமல் லேசாக உப்பி வரும் அளவிற்கு மிதமான தீயில் வைத்து வறுத்து எடுக்க வேண்டும். இப்படி மிளகாயை வறுத்தால் தான் சுவை நன்றாக இருக்கும்.

road-side-tomato-chutney

பிறகு அதே வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும். இந்த சட்னிக்கு தக்காளியை தனியாக அரைக்க வேண்டும் எனவே தக்காளியை பெரிது பெரிதாக வெட்டி சேர்க்க வேண்டும். அப்பொழுது தான் நீங்கள் அரைக்கும் பொழுது தக்காளியை தனியாக அரைக்க முடியும். வெங்காயத்துடன் தக்காளியையும் சேர்த்தே வதக்கலாம், தனித்தனியாக வதக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே தக்காளியையும் சேர்த்துக் கொள்ளுங்கள். தக்காளி உடைய தோல் உரிந்து வரும் அளவிற்கு வெந்தால் போதும். அதே போல வெங்காயத்தின் பச்சை வாசம் போனால் போதும், அதிகமாக வதக்க வேண்டிய அவசியமில்லை.

- Advertisement -

பின்னர் அடுப்பை அணைத்து விட்டு பூண்டை பற்களை தோல் உரித்து சேர்த்து வதக்க வேண்டும். அதிலிருக்கும் சூட்டிலேயே பூண்டு வதங்கி விடும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொண்டு அதில் வறுத்து வைத்துள்ள வரமிளகாய்களை காம்பு நீக்கி சேருங்கள். பின்னர் தக்காளி துண்டுகளை மட்டும் தனியாக பிரித்து எடுத்து தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் வெங்காயம், தக்காளி வதக்கும் பொழுது உப்பு சேர்க்கக்கூடாது. இப்படி அரைக்கும் பொழுது தான் உப்பு சேர்க்க வேண்டும். அப்பொழுது தான் வெங்காயம், தக்காளி அதிகம் வேகாமல் இருக்கும்.

tomato-chutney2

இவைகள் அரைபட்டதும் வெங்காயம், பூண்டு ஆகியவற்றையும் சேர்த்து ஒன்றிரண்டாக வெங்காயம் மிதக்கும் அளவிற்கு ஒரே ஒரு சுற்று சுற்றி இறக்கி வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ளுங்கள். பின்னர் இப்பொழுது தாளிக்க வேண்டியது தான். ஒரு தாளிப்பு கரண்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் கருவேப்பிலை உருவி சேர்த்து தாளித்து சட்னியில் கொட்டி இறக்கினால் இட்லி, தோசை, பொங்கல், சப்பாத்தி, பூரி என்று எல்லா விதமான டிபன் வகைகளுக்கும் அட்டகாசமான சைட் டிஷ் தயாராகிவிட்டது. அதிகம் தண்ணீர் சேர்க்காமல், கெட்டியாகவும் இல்லாமல் மிதமாக கலந்து பரிமாறி அனைவரின் மனதிலும் இடம் பிடித்து விடுங்கள்.

- Advertisement -