டீ கடை வெங்காய பக்கோடா மொறுமொறுன்னு செய்ய இந்த 1 பொருளும் சேர்க்கணும்! 10 நிமிடத்தில் சுடச்சுட வெங்காய பக்கோடா நம் வீட்டிலேயே எப்படி செய்வது?

onion-pakkoda1
- Advertisement -

வெங்காய பக்கோடா வெங்காயத்துடன் மொறுமொறுவென்று கிரிஸ்பியாக இருந்தால் தான் அதன் சுவையும் அலாதியாக இருக்கும். டீக்கடையில் சுடச்சுட கொடுக்கும் இந்த வெங்காய பக்கோடா மொறு மொறுவென்று இருக்க சேர்க்கப்படும் ரகசிய பொருள் என்ன? பத்தே நிமிடத்தில் நம் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில், மொறுமொறு வெங்காய பக்கோடா அட்டகாசமான சுவையில் எப்படி தயாரிப்பது? என்பது போன்ற கேள்விகளுக்கு விடை காண தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

onion

டீக்கடை பக்கோடா செய்ய தேவையான பொருட்கள்:
சீரகம் – ஒரு டீஸ்பூன், மல்லி விதை – ஒரு டீஸ்பூன், பூண்டு பல் – 10, பெரிய வெங்காயம் – 4, மிளகாய்த் தூள் – அரை டீஸ்பூன், சீரகத் தூள் – அரை டீஸ்பூன், பெருங்காயத் தூள் – அரை டீஸ்பூன், கரம் மசாலாத் தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, சமையல் சோடா – 2 சிட்டிகை, பச்சை மிளகாய் – 3, முந்திரி – 10, இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன், கடலை மாவு – 150 கிராம், அரிசி மாவு – ரெண்டு டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை – இரண்டு கொத்து, எண்ணெய் – தேவையான அளவு.

- Advertisement -

டீக்கடை பக்கோடா செய்முறை விளக்கம்:
மொறுமொறுவென்று டீக்கடை வெங்காய பக்கோடா செய்ய முதலில் 10 பூண்டு பற்களை தோலுடன் இடித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு இடி கல்லில் அல்லது மிக்ஸியில் சீரகம் மற்றும் மல்லி விதைகளை சேர்த்து கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் தோல் உரித்து மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிய 4 வெங்காயத்தை உதிர்த்து போட்டுக் கொள்ளுங்கள்.

பின்னர் வெங்காயத்துடன் மிளகாய்த்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத் தூள், பெருங்காயத்தூள் ஆகிய மசாலா தூள்களை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் தேவையான அளவிற்கு உப்பு மற்றும் நீங்கள் இடித்து வைத்துள்ள பூண்டு மற்றும் சீரகம், மல்லி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். விருப்பம் இல்லை என்றால் நீங்கள் பூண்டு சேர்க்க தேவையில்லை. அதற்கு பதிலாக இஞ்சி, பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன் அளவிற்கு சேர்த்து கொள்ளலாம். பூண்டு சேர்ப்பவர்கள் கொஞ்சம் குறைவாக இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் இவற்றுடன் 3 பச்சை மிளகாய்களை பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். 10 முந்திரி பருப்புகளை பொடித்து சேர்க்கலாம். பக்கோடா உடன் முந்திரி பருப்பு சேர்ந்து வந்தால் இன்னும் சுவையாக இருக்கும். முந்திரி பருப்பு இல்லை என்றால் அதனை தவிர்த்து விடலாம். 150 கிராம் அளவிற்கு கடலை மாவை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். கடலை மாவுடன் பக்கோடா கிரிஸ்பியாக வருவதற்கு அரிசி மாவு 2 டேபிள்ஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ளலாம். கொழுக்கட்டை, இடியாப்பத்திற்கு செய்யும் பச்சரிசி மாவு தான் இது. அரிசி மாவு சேர்த்தால் வெங்காய பக்கோடா கிரிஸ்பியாக வரும். இப்போது எல்லாவற்றையும் ஒன்றுடன் ஒன்றாக நன்கு கலந்து விட்டு கொள்ளுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை தெளிக்க வேண்டுமே தவிர மொத்தமாக ஊற்றி விடக்கூடாது.

onion-pakkoda

வெங்காயத்துடன் இந்த பொருட்கள் ஒன்றுடன் ஒன்று ஓட்டுவதற்கு ஈரப்பதம் தேவை. அதற்காக ஸ்பூன் அளவில் கொஞ்சமாக தண்ணீரை தெளித்து கலந்து விட்டால் போதும். நன்கு இவை கலந்தவுடன் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அடுப்பை மீடியமாக வைத்துக் கொண்டு பிசைந்து வைத்துள்ள பக்கோடாவை உதிர்த்து போட்டு எல்லா இடங்களிலும் பொன்னிறமாக வேக வறுத்து எடுக்க வேண்டியது தான். அதன் பிறகு கடைசியாக ரெண்டு கொத்து கறிவேப்பிலையை எண்ணெயில் போட்டு பொரித்து பக்கோடா மீது தூவி பரிமாறினால் அட்டகாசமான சுவையுடன் டீக்கடையில் கொடுக்கப்படும் மொறுமொறு பக்கோடா தயாராகிவிட்டது. நீங்களும் இதே முறையில் செய்து பார்த்து உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடலாம்!

- Advertisement -