இட்லி, தோசை போர் அடிக்குதா? உங்க வீட்டில் தேங்காயும், இட்லி மாவும் இருக்கா? அப்படின்னா 10 நிமிஷத்துல இப்படி ஒரு பணியாரம் செஞ்சு பாருங்க! வீட்டில் இருப்பவர்கள் இன்னும் வேண்டும் என்று கேட்பார்கள்.

paniyaram
- Advertisement -

சதா இட்லி, தோசை என்று சாப்பிட்டு அலுத்துப் போனவர்களுக்கு பணியாரம் போல விதவிதமான உணவுகளை செய்து கொடுத்தால் காலை உணவு திருப்திகரமாக இருக்கும். அந்த வகையில் ரொம்பவே சுலபமாக செய்யக்கூடிய இந்த இட்லி மாவு தேங்காய் பால் பணியாரம் வித்தியாசமான சுவையில் இருக்கும். உளுந்த மாவிலும் இந்த பணியாரத்தை பலர் செய்வதுண்டு. இந்த இட்லி மாவு தேங்காய் பால் பணியாரத்திற்கு மாப்பிள்ளை பணியாரம் என்றும் சில இடங்களில் கூறுவதுண்டு. டேஸ்டியான இந்த தேங்காய் பால் பணியாரம் நாமும் எப்படி செய்வது? என்பதை கற்றுக் கொள்ள இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

coconut-milk1

தேங்காய் பால் பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்:
கெட்டியான இட்லி மாவு – ஒரு கப், துருவிய தேங்காய் – ஒரு கப், தண்ணீர் – ஒன்றரை கப், நாட்டு சர்க்கரை – அரை கப், ஏலக்காய் – 2, அப்ப சோடா – 2 சிட்டிகை, சமையல் எண்ணெய் – தேவையான அளவு.

- Advertisement -

தேங்காய்ப்பால் பணியாரம் செய்முறை விளக்கம்:
தேங்காய் பால் பணியாரம் செய்வதற்கு முதலில் அரை மூடித் தேங்காய் ஒரு கப் அளவிற்கு பூப்போல துருவி எடுத்துக் கொள்ளவும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் இட்லி மாவு புளிக்காத அல்லது புளித்த மாவாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் இட்லிக்கு சுடுவது போல கெட்டியாக இருக்க வேண்டும். தோசைக்கு சுடுவது போல நீர்க்க இருக்க கூடாது. ஏனென்றால் இதை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

paniyaram

ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் துருவி வைத்த தேங்காயை சேர்த்து அரை கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதனை ஒரு வடிகட்டியில் போட்டு தேங்காய் பாலை தனியாக பிரித்தெடுக்கவும். பின்னர் மீண்டும் அந்த தேங்காயை மிக்ஸியில் சேர்த்து ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி பால் போல நீர்க்க அரைத்து தேங்காய் பாலுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் தண்ணீர் சேர்க்க வேண்டியதில்லை. இந்த தேங்காய்ப்பாலில் 2 ஏலக்காய்களை நன்கு தட்டி பொடியாக்கி போடவும். அரை கப் அளவிற்கு நாட்டு சர்க்கரை சேர்த்து கொள்ளுங்கள்.

வெள்ளை சர்க்கரை உடலுக்கு நல்லதல்ல! நாட்டு சர்க்கரை இல்லாதவர்கள் வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு, பெரிய கற்கண்டு போன்றவற்றை பொடித்து சேர்க்கலாம். இதை அப்படியே கரையும் வரை ஓரமாக வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்து வந்ததும் அடுப்பை மீடியமாக வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எடுத்து வைத்திருக்கும் இட்லி மாவில் ஏற்கனவே உப்பு சேர்த்து இருந்தால் மீண்டும் உப்பு சேர்க்க வேண்டிய அவசியமில்லை.
coconut-paal-paniyaram1

உப்பு சேர்க்காத மாவு என்றால் அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். அதனுடன் 2 சிட்டிகை அளவிற்கு ஆப்ப சோடா சேர்த்தால் இட்லி பந்துகள் உப்பி வரும். இதனை சேர்க்க விருப்பம் இல்லை என்றால் தவிர்த்து விடலாம். பின்னர் இட்லி மாவை சிறு சிறு உருண்டைகளாக கோலிகுண்டு அளவிற்கு எண்ணெயில் போட்டு பொன்னிறமாக எல்லா புறமும் நன்கு வேக பொரித்து எடுக்க வேண்டும். பொரித்தெடுத்த உருண்டைகளை டிஷ்யூ பேப்பரில் வைத்து நன்கு ஆறவிட்டு பின்னர் தேங்காய் பாலுடன் சேர்த்து ஊற வைக்க வேண்டும். பத்து நிமிடம் நன்கு ஊறியதும் எடுத்து பரிமாறினால் அட்டகாசமான இட்லி மாவு தேங்காய் பால் பணியாரம் தயார். நீங்களும் இதே முறையில் செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -