தக்காளி சேர்க்காமல் மசாலா அரைத்து செய்யும் இந்த கிரேவியை ஒருமுறை சுவைத்து விட்டால் போதும். இதனை மறுபடியும் எப்போது செய்வீர்கள் என்று அடம்பிடிக்க ஆரம்பித்து விடுவார்கள்

kuruma
- Advertisement -

சாப்பாடு என்பது ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விதமான சுவையில் இருக்கிறது. சமையல் செய்வதற்கு பயன்படுத்தும் பொருட்கள் அனைவருக்குமே ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் சமையலின் சுவை மட்டும் எவ்வாறு மாறுபடுகிறது. சமைக்கும் பொழுது ஒவ்வொருவரும் தங்கள் சுவைக்கு ஏற்ப அரைத்து சேர்க்கும் மசாலா தான் இதன் காரணமாக அமைகிறது. அவ்வாறு கறிக்குழம்பு, குருமா, சேர்வா இதுபோன்ற உணவு வகைகளை செய்யும் பொழுது அதனுடன் சேர்ப்பதற்காக தக்காளி, வெங்காயம் என சில பொருட்களை வதக்கியோ அல்லது பச்சையாகவோ அரைத்து குழம்புடன் சேர்த்துக்கொள்வார்கள். இதில் சேர்க்கப்படும் பொருட்களின் அளவை பொறுத்து மசாலாவின் சுவை வேறுபடும். எனவே தான் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விதமான சுவையில் இருக்கிறது. இப்படி மசாலா அரைத்து செய்யக்கூடிய சுவையான ஒரு வெஜிடபிள் குருமாவை எவ்வாறு செய்வது என்பதைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் – 2, புதினா – ஒரு கைப்பிடி, கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி, இஞ்சி சிறிய துண்டு – ஒன்று, பூண்டு – 5 பல், சோம்பு – ஒரு ஸ்பூன், கிராம்பு – 2, பட்டை சிறிய துண்டு – ஒன்று, முந்திரி – 6, பச்சை மிளகாய் – 6, எண்ணெய் – 4 ஸ்பூன், தேங்காய் – கால் மூடி, இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன், காலிஃப்ளவர் – 1, பீன்ஸ் – 10, கேரட் – 2, உப்பு – ஒரு ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் இரண்டு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். அதேபோல் கேரட், காலிஃப்ளவர், கேரட் இவை அனைத்தையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் கொத்தமல்லி மற்றும் புதினா தழையை தண்ணீரில் அலசி கொண்டு, பொடியாக நறுக்கி வைக்க வேண்டும். தேங்காயை துருவி, மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுதாக அரைத்து, தேங்காய்ப்பால் எடுத்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம், பச்சை மிளகாய், சோம்பு, கிராம்பு, பட்டை, இஞ்சி, பூண்டு மற்றும் முந்திரி இவை அனைத்தையும் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவேண்டும். பிறகு இவற்றுடன் ஒரு கைப்பிடி புதினா தழை, ஒரு கைப்பிடி கொத்தமல்லி தழை சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து, அவற்றுடன் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும் நன்றாக வதக்கவேண்டும். பின்னர் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து காய்கறிகள் அனைத்தையும் வேகவிடவேண்டும். இறுதியாக தேங்காய்பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

- Advertisement -