காரசாரமான வேர்கடலை சட்னி 10 நிமிடத்தில் இப்படி ஒரு முறை செய்து கொடுத்தால் அடிக்கடி கேட்க தூண்டும்!

verkadalai-peanut-chutney
- Advertisement -

தினமும் விதவிதமான சட்னி வகைகளுக்கு எங்கே செல்வது? என்று யோசிப்பவர்களுக்கு இந்த காரசாரமான வேர்க்கடலை சட்னி ஒரு வரப்பிரசாதமாக நிச்சயம் இருக்கும். ஒரே மாதிரியான சட்னி வகைகளை செய்து கொடுக்கும் பொழுது காலை உணவு முழுமை பெறுவதில்லை. ஆரோக்கியமான முறையில் இப்படி ஒரு வேர்க்கடலை கார சட்னியை நீங்களும் அரைத்துக் கொடுத்துப் பாருங்கள்! அடிக்கடி உங்கள் வீட்டில் இருப்பவர்களை கேட்கத் தூண்ட செய்யும் இந்த வேர்க்கடலை சட்னி நாமும் எப்படி செய்யலாம்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

verkadalai

வேர்க்கடலை சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, வேர்கடலை – 3 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவிற்கு, பெரிய வெங்காயம் – 2, தக்காளி – ஒன்று, வர மிளகாய் – 2, பூண்டு பல் – 2.

- Advertisement -

வேர்க்கடலை சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் அடுப்பைப் பற்ற வைத்ததும் ஒரு வாணலியை வைத்து கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். நீங்கள் பச்சை வேர்க்கடலை எடுத்தால் பருப்பு வகைகளுடன் வேர்க்கடலையையும் சேர்த்து வறுக்க வேண்டும். ஏற்கனவே வறுத்த வேர்கடலை என்றால் பருப்பு வகைகள் நன்கு வறுபட்டதும் கடலையை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

verkadalai

ஒரு கொத்து கறிவேப்பிலையை நன்கு கழுவி துருவி சேர்த்து வதக்குங்கள். காரத்திற்கு ஏற்ப வர மிளகாய்களை காம்பு நீக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் பெரிய வெங்காயம் 2 எடுத்து தோல் நீக்கி மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கி இவற்றுடன் சேர்த்து லேசாக வதக்க வேண்டும். பின்னர் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். இவற்றின் பச்சை வாசம் போக, வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கிய பின்பு, ஒரு பெரிய தக்காளியை பொடிப் பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள்.

- Advertisement -

வெங்காயம், தக்காளி இரண்டும் நன்கு மசிய வதங்கி வர தேவையான அளவிற்கு உப்பை தூவி கொள்ளுங்கள். ஒரு ஐந்து நிமிடம் நன்கு வதக்கினால் வெங்காயம், தக்காளி மசிந்து விடும். அதன் பிறகு நறுக்கிய மல்லித்தழை சேர்த்து ஒருமுறை நன்கு கலந்து விட்டு அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். பின்னர் இதற்கு ஒரு சிறிய தாளிப்பு கொடுக்க வேண்டியது தான். ஏற்கனவே தாளித்து செய்ததால் தாளிப்பு கொடுக்காமல் கூட நாம் சட்னியை அப்படியே தொட்டு கொண்டு சாப்பிடலாம்.

verkadalai-chutney

ஒரு சிறு தாளிப்பு கரண்டியில் அடுப்பில் வைத்து பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு நன்கு பொரிந்ததும் உளுத்தம்பருப்பு சேர்த்து வதக்குங்கள் உளுந்து பொன்னிறமாக வறுபட்டதும் ஒரு கொத்து கறிவேப்பிலை ஒரே ஒரு வர மிளகாயை கிள்ளி சேர்த்து சட்னியுடன் கலந்து கொள்ளுங்கள். சுடச்சுட இட்லி, தோசை போன்றவற்றுடன் தொட்டு சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும். இதே போல இதே அளவுகளில் நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பார்த்து அனைவரையும் அசத்தி விடலாமே!

- Advertisement -